அம்பாரை மாவட்டத்தில் ஊடகவியலாளர்களாகப் பணியாற்றி அண்மையில் அமரத்துவமடைந்த கே.என்.தர்மலிங்கம், மர்ஹும் ஏ.எம்.அலிகான் ஆகியோரை நினைவு கூறும் இரங்கல் கூட்டம் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது. அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத் தலைவர் கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இவ் இரங்கற் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ், தென்கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோர் முதன்மை அதிதிகளாக கலந்து கொண்டனர். வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகன், சிரேஷ்ட உதவி ஆசிரியர் கே.சிவராஜா, விற்பனை மேம்பாட்டு முகாமையாளர் கே.சென்தில்நாதன், தினக்குரல் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம், ஆசிரியர் பீட சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம்.அமீன், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், ஓய்வு பெற்ற பிர...