Posts

Showing posts from October, 2013

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!

Image
கல்முனை மாநகர சபையின் முதல்வராக தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இருக்க வேண்டுமென்று சாய்ந்தமருது மக்கள் சற்றுமுன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். கல்முனை மாநகர முதல்வர் பதவியினை இராஜினாமா செய்வது தொடர்பாக சாய்ந்தமருது மக்களின் கருத்துக்களை கேட்டறியும் கூட்டம் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் கூட்ட மண்டபத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கல்முனை மாநகர முதல்வராக சிராஸ் மீராசாஹிப் தொடர்ந்து இருக்க வேண்டும், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை (பிரதேச சபை) ஒன்றினை பெற்றுக் கொள்ளல், 35 வருடத்திற்கு பிறகு கிடைத்த முதல்வர் பதவியினை முழுமையாக அனுபவிப்பதற்கு சுமூகத் தீர்வு காண்பதற்கு சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு கட்சித் தலைமையுடன் பேசுதல், ஊரின் அரசியல் அதிகாரம் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் பேசி சாதகமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என உள்ளடங்களாக நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட...

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையால் கொண்டுவரப்பட்ட 1325வது பிரகடனம்

Image
யு.எம்.இஸ்ஹாக்   யுத்தத்திற்கு பின்னரான சூழலில்  பெண்கள் சகல மட்டங்களிலும்  ஈடுபடுவதனை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு  சபையால் 31.10.2000 ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட 1325வது  பிரகடனத்தை உறுதிப்படுத்தும் வகையில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி  ஏற்பாடு செய்த நினைவு ஊர்வலம்  கல்முனையில்  இன்று 31.10.2013 காலை நடை பெற்றது. கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை முன்றலில் இருந்து ஊர்வலமாக சென்றவர்கள் கல்முனை பிரதேச செயலகம் வரை சென்று கல்முனை பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளித்தனர்    பிரகடனத்தை  நிறுவனத்தின் அதிகாரி எம்..எஸ்.ஜெலீல் வாசித்து கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல்  இடம் பிரகடனப் பிரதியை கையளித்தார் . ஐக்கிய  நாடுகள் பாதுகாப்பு சபையால் கொண்டுவரப்பட்ட  யுத்தத்துக்கு பின்னரான  சூழலை உறுதிப்படுத்தும்  1325வது பிரகடனம்  கொண்டுவரப்பட்டது. இதில் பிரதான முக்கிய தூண்கள்  எனக்கூறப்படும்  தீர்மானம் எடுக்கும் விடயங்களிலான பங்குபற்றல்,தடுத்தல்,பாத...

7 மில்லியன் பெறுமதியான கள்ள நோட்டுக்கள் சி.ஐ.டி.யிடம் சிக்கின

Image
மாலபேயிலிருந்து மீட்பு P67799159 இலக்கம் தொடர்பில் விழிப்பாக இருக்க கோரிக்கை போலியாக அச்சிடப்பட்ட பெருந்தொகை 2000 ரூபா போலி நாணயத் தாள்களை குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். ஐ.சி.டி.யினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றை அடுத்து மாலபே பிரதேசத்தில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே பெருந்தொகை போலி நோட்டுக்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரொஹன தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாளின் உண்மையான பெறுமதி 70 இலட்சம் ஆகும் என்றும் தெரிவித்தார். மேலும் பெருந்தொகை போலி 2000 ரூபா நாணயத் தாள்கள் பல அச்சிட்டு புளக்கத்தில் விடப்பட்டுள்ளமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதுடன் P67799159 என்ற தொடர் இலக்கங்களைக் கொண்ட 2000 ரூபா நாணயத் தாள் போலியானதாக இருக்கலாம் எனவே, இது தொடர்பில் தெரியும் பட்சத்தில் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. மேலதிக விபரங்களை எதிர்பாருங்கள்...

யானைக்கு வெளிச்சம் கல்முனை மேயர் நடவடிக்கை

Image
(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் பணிப்புரைக்கு அமைய சாய்ந்தமருது பொலிவேரியன் பிரதேசத்தின் பின்புறத்தில் வெளிச்சம் கூடிய போகஸ் லைட்கள் இன்று (28.10.2013) மாலை பொருத்தப்பட்டது. மேற்படி லைட்களை பொருத்தும் வேலை மேயர் சிராஸின் மேற்பார்வையில் நடைபெற்றது. பொலிவேரியன் பிரதேசத்தின் பின்புற வயல்வெளி வழியாக இரவு நேரங்களில் யானைகள் வருவதனாலும் அப்பிரதேசம் இருள் சூழ்ந்து காணப்படுவதனாலும் பிரதேச மக்கள் பீதியுடன் வசிப்பதாக மேயருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக அப்பிரதேசத்திற்கு நேற்று முன்தினம் (26.10.2013)  நேரில் சென்று பார்வையிட்டபோது மக்களிற்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக மேற்படி லைட்கள் பொருத்தப்பட்டது.

உலகின் உயரமான மனிதன் திருமண பந்தத்தில் இணைந்தார்

Image
உலகின் உயரமான மனிதனாகக கருதப்படும் 8 அடி 3 அங்குலமான சுல்தான் கொசென் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். ஆம், மேர்வ் டிபோ என்ற 20 வயதான 5 அடி 8 அங்குல உயரமான பெண்ணுடனேயே அவர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இப்பெண் கொசெனை விட 2 அடி 7 அங்குலம் உயரம் குறைந்தவர். இந்நாள் தனது வாழ்நாளில் மறக்க முடியாத நாளெனவும், தனது உயரத்தினால் தனக்கான துணை கிடைக்காமையால் கவலையில் இருந்து வந்ததாகவும் ஆனால் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சுல்தான் கொசென் தெரிவித்துள்ளார். அவரது சொந்த நாடான துருக்கியில் இத்திருமணம் நடைபெற்றுள்ளது. உலகில் இதுவரை சுமார் 10 பேரே 8 அடிக்கு மேல் உயரமானவர்கள் என்பதுடன் அதில் சுல்தான் கொசெனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதையில் முதலாவது பிரயாணம்!

Image
இலங்கையின் இரண்டாவது அதிவேகப்பாதையான கொழும்பு – கட்டுநாயக்க வீதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் திறந்து வைத்தார். நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்துவைத்த ஜனாதிபதி புதிய அதிவேக வீதியில் தமது காரைச் செலுத்தி வாகன போக்குவரத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். பேலியகொடையிருந்து சீதுவை வரை ஜனாதிபதி தமது காரில் தமது பாரியார் சகிதம் அதிவேகப்பாதையில் முதன் முதலில் பிரயாணம் செய்தார். அதற்கான கட்டணத்தையும் செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 26 கிலோமீற்றர் நீளமுடைய இந்த வீதி- சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த வீதியை பயன்படுத்துவதன் மூலம் பேலியகொடையிலிருந்து கட்டுநாயக்கவிற்கு சுமார் 15 நிமிடங்களில் சென்றடைய முடியும் என பெருந்தெருக்கள் செயற்றிட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தhர். இன்று மாலை முதல் மக்கள் இந்த வீதியை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியில் பொது போக்குவரத்து சேவைய...

சட்டத்தை செய்ய தயங்கும் ஆணையாளர்

Image
(gp.vk;.vk;.V.fhjh;) jdpahh; fl;blq;fspy; ,aq;Fk; khl;biwr;rpf; filfis Fj;jiff;F toq;Ftjw;fhf Nfs;tp Nfhug;gLtJ rl;l Kuzzh tpilakhFk; vdj;njuptpj;J fy;Kid khefu MizahsUf;F> fy;Kid khefurigapd; If;fp kf;fs;  Rje;jpu Kd;ddp cWg;gpdh; ,]l;.V.vr;.w`;khd; mtruf;fbjk; xd;iw mDg;gpitj;Js;shh;. ;me;jf; fbjjjpy; NkYk; Fwpg;gpl;bUg;gjhtJ:- fy;Kid khefu rigf;Fl;gl;l fl;blq;fspy; khl;biwr;rpf;; filfis elhj;Jtjw;fhd Nfs;tp Nfhuy; tpz;zg;gk; tUlh tUlk; Nfhug;gLtJ toikahFk;;. Mdhy;  jdpahh; fl;blq;fspy; ,aq;Fk; khl;biwr;rpf; filfis Fj;jiff;F toq;Ftjw;fhf Nfs;tp Nfhug;gLtJ rl;lj;jpw;F Kuzhz tpilakhFk;. jdpahh; fl;blq;fspy; ,aq;Fk; khl;biwr;rpf; filfis rl;lj;jpw;F  Kuzzhf Nfs;tp Nfhug;gLk; NghJ khl;biwr;rpf;; filfis filf;fhuh;fs; mjpf Fj;jiff;F gzk; nrYj;jp ngw Ntz;ba epyy Vw;gLfd;wJ. ,jdhy; ,iwr;rpf; filf;fhuh;fs; ghtidahsh;fSf;F ,iwr;ria mjpftpiyf;F tpw;f Ntz;ba epiy vw;gLfpd;wJ. ,jdhy; ghtidahsh;fNs mjpfk; ghjpf;fg;gLfpd;wdh.; vdNt jdpahh; fl;blq;fspy;  ,aq;Fk; ...

சம்மாந்துறையில் சமுர்த்தி உற்பத்தி வர்த்தக கண்காட்சியும் விற்பனையும்

Image
  இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் 2013ம் வருடத்துக்கான அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களுக்கான சமுர்த்தி உற்பத்தி வர்த்தக கண்காட்சியும் விற்பனையும் இன்று 26ம் திகதி காலை 8.30 வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இக்கண்காட்சியும் விற்பனையும் இன்று மாலை வரைக்கும் சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பீ.எம்.ஹூசைன் ஆகியோர்களது மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற இவ் வர்த்தக கண்காட்சியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.  கௌரவ அதிதிகளாக மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் யூ.பி.எஸ்.அனுருத்த பியதாச, அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றாசீக், அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் ஐ.எம்.ஹூசைன்;, உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்பதிகாரி ஏ.பி.தாவூத், பிரதேச செயலாளர்களான எம்.எம்.நஸீர், எம்.ஐ....

சாய்ந்தமருது லெவென் ஹீரோஸ் அணியினர் 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.

Image
கல்முனை ஜிம்ஹானா  விளையாட்டு கழகத்தின் 25வது நிறைவை கொண்டாடும் வகையில்  ஏற்பாடு செய்யப்பட்ட  கிரிக்கட் சுற்றுப் போட்டியின் 9வது போட்டியில் கல்முனை மிஸ்பா விளையாட்டு கழகத்தை   எதிர்த்து சாய்ந்தமருது லெவென் ஹீரோஸ் விளையாட்டு கழகம்   மோதின. நாணய சுழற்சியில்   வெற்றிபெற்ற   சாய்ந்தமரு லெவென் ஹீரோஸ்   முதலில் துடுபெடுத்து  ஆடி 20 ஓவர்கள் முடிவில் 156 ஓட்டங்களை பெற்றனர் . இவ்வணியின் சார்பில் சுஜான்  32 ஓட்டங்களையும் ,ரிச்னி   29 ஓட்டங்களையும் ,முபீன் 26 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை மிஸ்பா  அணியினர் 19.2 ஓவர்களில்  சகல  விக்கட்டுக்களையும் இழந்து 80 ஓட்டங்களை மட்டுமே  பெற்றனர். இவ்வணியின் சார்பில் தில்சாத்  20 ஓட்டங்களையும்   ஜஹான்   13 ஓட்டங்களையும் பெற்றனர். இந்த போட்டியில் சாய்ந்தமருது லெவென் ஹீரோஸ்   அணியினர் 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.  இப்போட்டிக்கு பிரதம அதிதியாக ஜிம்கானா அணி...

தெருமின்விளக்குகள் இன்மையால் இரவு வேளைகளில் ஊருக்குள் நுழையும் யானைகள்

Image
நாவிதன் வெளி பிரதேச சபையினால்  அதன் எல்லைக்குள் வாழும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப் படுவதாக  கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். பல மாத காலமாக  நாவிதன் வெளி பிரதேசத்தில் வரட்சி நிலவியதால் குடி நீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. குடிநீர் வழங்கும் விடயத்தில்  முஸ்லிம் பிரதேசங்களான வீரதிடல், 04ஆம் கொலனி,05ஆம் கொலனி ,12ஆம் கொலனி  மக்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர். M.Umarumma   நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 5ஆம் கிராமம் வீரத்திடலில் யானைகளின் தாக்குதலிலிருந்து பெண்ணொருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இச்சம்வம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.   இப்பெண் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது வீட்டின் சுவர் வீழ்த்தப்பட்டு நெல்மூடைகளை எடுக்கப்படுவதை அவதானித்துள்ளார். இது காட்டு யானைகளின் செயற்பாடு என்பதை அறிந்து வீட்டின் பின்கதவால் ஓடி உயிர் தப்பியுள்ளார்.  இச்சம்  தொடர்பாக சவளக்கடை பொலிஸார் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஆகியோரிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் தெருமின்விளக்குகள் இன்மையால் இ...

பிளாஸ்டிக் போத்தல்களால் கட்டப்படும் வீடு!

Image
 பொலிவியா மக்கள் பாவனை முடிந்ததும் குப்பையில்  வீசப்படும் தண்ணீர், ஜூஸ் போத்தல்களைக் கொண்டு வீடு கட்டுகிறார்கள். தென் அமெரிக்க நாடான இயற்கை வளங்கள் நிறைந்த பொலிவியாவில் 50 சதவீதமான மக்கள் ஏழைகளாக உள்ளனர். அவர்களால் கல்லினால் வீடுகள் கட்டுவது என்பது முடியாத விடயமாக உள்ளது. இதனால் கல்லிற்கு மாற்றீடாக குப்பையில் கிடைக்கும் வெற்றுப் போத்தல்களில் மண்ணை நிரப்பி வீடு கட்ட ஆரம்பத்துள்ளனர். பொலிவியாவில் உள்ள சாண்டா குரூஸ் நகரில் வசித்து வரும் இன்கிரிட் வாகா டியாஸ் என்ற பெண்மணியே இந்த புதுவிதமான மாற்றீடினை கண்டுபிடித்துள்ளார். பாவித்துவிட்டு குப்பைகளில் வீசப்படும் பழைய பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்து கட்டிடங்களை கட்ட ஆரம்பித்துள்ளார்.இதனையடுத்து பலரும் இம்முறையில் வீடு கட்டும் முயற்சியை ஆரம்பித்துள்னர். தற்போது பொலிவியாவில் மட்டும் இதுவரையில் பத்துக்கும் அதிகமான வீடுகளை பிளாஸ்டிக் போத்தல்களால் குறைந்த செலவில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.இத்திட்டம் வெற்றிபெற்றுள்ளமை தனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் வாகா. ஆம்! வீடு கட்டுவதற்கு கல் மட்டுமல்ல- சிமெந்து மணல்...

ஹரீஸ்,பைசாலுக்கு பிரதி அமைச்சர் வழங்கப்படுமா ?

Image
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு மூன்று பிரதியமைசுக்கள் வழங்கப்படவுள்ளது. வழங்கப்படவுள்ள மூன்றில் இரண்டு அம்பாறைக்கும் ,ஒன்று திருகோணமலைக்கும் வழங்கப்பட சிபாரிசு  செய்யப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது . அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் , ஹரீஸ்  ஆகியோருக்கு வழக்கப்பட மற்றுமொன்று திருகோணமலை முஸ்லிம் காங்கிரஸ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் பெற்றுகொள்ளவுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன .விரைவில் இவர்களுக்கான நியமங்கள் வழங்கப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று!

Image
வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று (25) காலை 9.30 மணிக்கு கைதடியிலுள்ள வடமாகாண சபையின் புதிய கட்டடத்தில் இடம்பெற்றது. சுமார் 450 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள மாகாண சபைக் கட்டடத்தில் இந்த முதலாவது அமர்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆளுநருடைய பிரகடனத்தை தமிழ்- சிங்களம்- ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் செயலாளர் வாசித்தார். இதன் பின்னர் பேரவைத் தலைவர் தெரிவு இடம்பெற்றது. வட மாகாண சபையின் தலைவராக கந்தசாமி சிவஞானம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு வட மாகாண முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கல்முனை மேயர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் தலைமையில் பாராளுமன்றில் அவசர கூட்டம்

Image
கல்முனை மேயர் விவகாரம் தொடர்பில் கட்சி தலைமைத்துவம் மேற்கொள்ளும் எந்தவொரு முடிவையும் ஏற்றுக் கொள்வதாக கல்முனை மாநகரசபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் உறுதியளித்தனர். கல்முனை நகரபிதா விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக நேற்று பிற்பகல் பாராளுமன்றத்தில் அமைச்சர் ரவூப்ஹக்கீமின் தலைமையில் அவரது அறையில் முக்கிய கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹசனலி, பராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தெளபீக், பைசல் காசிம் ஆகியோருடன் பிரதி மேயர் சட்டத்தரணி நிஷாம் காரியப்பர் மற்றும் கல்முனை மாநகரசபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான அமீர், நிஸார்தீன், பிர்தெளஸ், பசீர், பரக்கத், முஸ்தபா, உமர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கல்முனை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த போதிலும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதையிட்டு அமைச்சர் ரவூப்ஹக்கீம் தனது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்தார்.  இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், கல்முனை நகரபிதா ஷிராஸ் மி...

முதல்வர் சிராஸ் மீராசாஹிப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாதென பிரகடனம்

Image
கல்முனை மாநகர முதல்வர் சிராஸ்  மீராசாஹிப்  முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாதென   சற்று நேரத்துக்கு முன்னர் சாய்ந்தமருது  முதல்வர் இல்லத்தில் நடை பெற்ற கூட்டத்தில்  ஏக பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல்வர் மக்கள் விரும்பினால் மட்டுமே இராஜினாமா செய்ய வேண்டும் என அங்கு கூடிய ஆதரவாளர்களால்  இந்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நம்ம பிரதிநிதிகள் என்ன பேசுகிறார்கள் என்று பார்க்கலாம் !

Image
பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒளிபரப்புச் செய்யும் முதல் கட்ட நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.  மேலும் இந்த பாராளுமன்ற அமர்வு தொடர்பான விவாதங்கள் இன்று கோட்டை பாராளுமன்ற மைதானத்தில் பெரிய திரையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இன்று மாலை 4.00 மணி முதல் பாராளுமன்றமைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள பெரிய திரையில் விவாதங்களை மக்கள் நேரடியாக பார்வையிட முடியும். என்று அறிவிக்கப் பட்டுள்ளது இதன் இரண்டாம் கட்டமாக பாராளுமன்ற விவாதங்களை தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2014 நிதியாண்டுக்கு ரூ. 154,252 கோடி ஒதுக்கீடு

Image
கல்வி, உயர்கல்வி, பொருளாதார அபிவிருத்திக்கு கூடுதல் நிதி 2014 நிதியாண்டிற்காக அரசாங்கம் 154,252 கோடி 25 இலட்சத்து 18 ஆயிரம் ரூபா (1,542,522,518,000) நிதி ஒதுக்கியுள்ளது. அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டு சட்ட மூலம், சபை முதல்வர் நிமல் சிரிபால டி சில்வாவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் தி.மு. ஜயரத்னவின் சார்பாக அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா இதனை சமர்ப்பித்தார். இதன்படி இம்முறையும் பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சிற்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சிற்கு 25,390 கோடி 29 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா (253,902,910,000) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக நிதி, திட்டமிடல் அமைச் சிற்கு 16,434 கோடி 407 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு 10,601 கோடி 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரதமரின் அலுவலகம், அடங்கலான 22 விடயங்களுக்காக 1630 கோடி 93 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சிற்காக 14499 கோடி 83 இலட்சத்த...

கல்முனை பொலிஸ் பிரிவூக்குள் உயிர்காக்கும் படைப் பிரிவூ

Image
யூ.எம்.இஸ்ஹாக்  கல்முனை பொலிஸ் பிரிவூக்குள்  முதல் தடவையாக  உயிர்காக்கும் படைப் பிரிவூ ஆரம்பிக்கப்படவூள்ளது. இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் தலைமையில் நேற்று 22.10.2013 இடம் பெற்றது. கல்முனையையூம் நாவிதன் வெளிப் பிரதேசத்தையூம் இணைக்கும் கிட்டங்கி வாவி விவசாயிகளுக்கும் நன்னீர் மீனவர்களுக்கும் வரம் நிறைந்த வாவியாகக் காணப்படுகிறது. அதே நேரம் சிலவேலைகளில் அதே வாவி உயிர் பறிக்கும் எமனாகவூம் மாறுகின்றது. குறித்த பிரதேசத்தில் காணப்படும் 15000ஏக்கருக்கும் அதிகமான நெல் வயல்கள் இந்த கிட்டங்கி வாவியையே நம்பி செய்கை பண்ணப்படுகின்றது. அதே நேரம் நன்னீர் மீனவர்களின் ஜீவனோபாய இடமாகவூம் இந்த வாவிஉள்ளது. அது மட்டுமன்றி இந்த பகுதியில் வாழும் மக்கள் பலர் குளிப்பதற்கு பயன் படுத்துவதும் இந்த கிட்டங்கி வாவிதான். வருடம் தோறும் வெள்ளப் பெருக்கினாலும் முதலைக் கடியினாலும் சராசரி 07 பேர் இந்த கிட்டங்கி வாவிக்குப் பலியாகின்றனர். இதனைத் தடுக்கும் வகையிலேயே 15பேர் கொண்ட உயிர் காக்கும் படைப் பிரிவூ இப்பரதேசத்தில் ஆரம்பிக்கப்படவூ...

சிறுவர்கள் தற்கொலைக்கு முயலும் வீதம் அதிகரிப்பு

Image
 Dr. சித்ரா கலமநாதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்யும் வீதம் அதிகரித்து காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுவர் உளநல வைத்திய நிபுணர் டாக்டர் சித்ரா கலமநாதன் தெரிவித்துள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உளவியல் செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை ஆரையம்பதி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலை முக்கிய இடம் வகிக்கின்றது. குறிப்பாக 12வயது சிறுவர்களுக்கு மத்தியில் தற்கொலை அதிகரித்துக் காணப்படுகின்றது. பிள்ளைகளை பெற்று வளர்க்கும் தாய்மார்களாகிய நீங்கள் உங்களது குழந்தைகளை நல்ல முறையில் சமூகத்தில் உளநலமுள்ள சிறுவனாக வளர்க்க வேண்டும். நீங்கள் அது தொடர்பில் எந்நேரமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பிள்ளைகள் நல்ல குணமுள்ள பிள்ளைகளாக உருவாவதற்கான முழுமையான பொறுப்பு பெற்றோர்களிடமே உள்ளது. இன்று சிறுவர்கள் பாலியல் உள்ளிட்ட பல்வேறு துஷ்பிரயோக...

முன்ளாள் அமைச்சரின் சேவைக்கு பாராட்டு

Image
முன்ளாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் சேவையைப்; பாராட்டி மருதமுனை மக்கள் நடாத்திய மாபெரும் பாராட்டு விழா சனிக்கிழமை(19-10-2013) காலை 10.00  மணிக்கு  மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் செனட்டர் மசூர் மௌலானா முன்னிலையில்  ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர்  எம்.எச். காதர் இப்றாகீம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம், சிறப்பு  அதிதியாக  பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளாஹ், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கருஜயசூரியா , ஹசன் அலி, எச்.எம்.எம். ஹாரிஸ், பைசல் காசிம் ஆகியோருடன், கல்வியலாளர்கள் உள்ளீட்ட ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். முன்ளாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் சேவைக் கால நிகழ்வுகள் மற்றும் வாழ்த்துச் ;செய்திகள் அடங்கிய “விருட்சம்” என்ற பெயரில் மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது டன், நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கப்பட்டார். “விருட்சம்” மலரின்;  முதல் பிரதியை மைஹோப் நிறுவனத்தின் முகாம...