முன்ளாள் அமைச்சரின் சேவைக்கு பாராட்டு
முன்ளாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் சேவையைப்; பாராட்டி மருதமுனை மக்கள் நடாத்திய மாபெரும் பாராட்டு விழா சனிக்கிழமை(19-10-2013) காலை 10.00 மணிக்கு மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் செனட்டர் மசூர் மௌலானா முன்னிலையில் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் எம்.எச். காதர் இப்றாகீம் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம், சிறப்பு அதிதியாக பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளாஹ், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கருஜயசூரியா , ஹசன் அலி, எச்.எம்.எம். ஹாரிஸ், பைசல் காசிம் ஆகியோருடன், கல்வியலாளர்கள் உள்ளீட்ட ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
முன்ளாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் சேவைக் கால நிகழ்வுகள் மற்றும் வாழ்த்துச் ;செய்திகள் அடங்கிய “விருட்சம்” என்ற பெயரில் மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது டன், நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கப்பட்டார். “விருட்சம்” மலரின்; முதல் பிரதியை மைஹோப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சித்தீக் நதீர் பெற்றுக் கொண்டார்.
Comments
Post a Comment