கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதையில் முதலாவது பிரயாணம்!
இலங்கையின் இரண்டாவது அதிவேகப்பாதையான கொழும்பு – கட்டுநாயக்க வீதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் திறந்து வைத்தார்.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்துவைத்த ஜனாதிபதி புதிய அதிவேக வீதியில் தமது காரைச் செலுத்தி வாகன போக்குவரத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.
பேலியகொடையிருந்து சீதுவை வரை ஜனாதிபதி தமது காரில் தமது பாரியார் சகிதம் அதிவேகப்பாதையில் முதன் முதலில் பிரயாணம் செய்தார். அதற்கான கட்டணத்தையும் செலுத்தினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 26 கிலோமீற்றர் நீளமுடைய இந்த வீதி- சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதியை பயன்படுத்துவதன் மூலம் பேலியகொடையிலிருந்து கட்டுநாயக்கவிற்கு சுமார் 15 நிமிடங்களில் சென்றடைய முடியும் என பெருந்தெருக்கள் செயற்றிட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தhர்.
இன்று மாலை முதல் மக்கள் இந்த வீதியை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியில் பொது போக்குவரத்து சேவையொன்றையும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கயைம இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான சொகுசு பஸ்கள் இந்த வீதியில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
Comments
Post a Comment