தெருமின்விளக்குகள் இன்மையால் இரவு வேளைகளில் ஊருக்குள் நுழையும் யானைகள்


நாவிதன் வெளி பிரதேச சபையினால்  அதன் எல்லைக்குள் வாழும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப் படுவதாக  கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

பல மாத காலமாக  நாவிதன் வெளி பிரதேசத்தில் வரட்சி நிலவியதால் குடி நீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. குடிநீர் வழங்கும் விடயத்தில்  முஸ்லிம் பிரதேசங்களான வீரதிடல், 04ஆம் கொலனி,05ஆம் கொலனி ,12ஆம் கொலனி  மக்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர்.
M.Umarumma


 நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 5ஆம் கிராமம் வீரத்திடலில் யானைகளின் தாக்குதலிலிருந்து பெண்ணொருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.இச்சம்வம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. 

இப்பெண் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது வீட்டின் சுவர் வீழ்த்தப்பட்டு நெல்மூடைகளை எடுக்கப்படுவதை அவதானித்துள்ளார்.
இது காட்டு யானைகளின் செயற்பாடு என்பதை அறிந்து வீட்டின் பின்கதவால் ஓடி உயிர் தப்பியுள்ளார்.


 இச்சம்  தொடர்பாக சவளக்கடை பொலிஸார் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஆகியோரிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் தெருமின்விளக்குகள் இன்மையால் இரவு வேளைகளில் ஊருக்குள் நுழையும் யானைகள் எவ்விடத்தில் மறைந்து நிற்கின்றது என்பதை அறியமுடியாதுள்ளதாக பிரதேச பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்