சாய்ந்தமருது லெவென் ஹீரோஸ் அணியினர் 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.

கல்முனை ஜிம்ஹானா விளையாட்டு கழகத்தின் 25வது நிறைவை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கட் சுற்றுப் போட்டியின் 9வது போட்டியில் கல்முனை மிஸ்பா விளையாட்டு கழகத்தை எதிர்த்து சாய்ந்தமருது லெவென் ஹீரோஸ் விளையாட்டு கழகம் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சாய்ந்தமரு லெவென் ஹீரோஸ் முதலில் துடுபெடுத்து ஆடி 20 ஓவர்கள் முடிவில் 156 ஓட்டங்களை பெற்றனர் . இவ்வணியின் சார்பில் சுஜான் 32 ஓட்டங்களையும் ,ரிச்னி 29 ஓட்டங்களையும் ,முபீன் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை மிஸ்பா அணியினர் 19.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 80 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர். இவ்வணியின் சார்பில் தில்சாத் 20 ஓட்டங்களையும் ஜஹான் 13 ஓட்டங்களையும் பெற்றனர். இந்த போட்டியில் சாய்ந்தமருது லெவென் ஹீரோஸ் அணியினர் 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.
இப்போட்டிக்கு பிரதம அதிதியாக ஜிம்கானா அணியின் உப தலைவரும் , மட்டக்களப்பு மாவட்ட டயலொக் விற்பனை முகவருமான எச்.பீ.எம்.பௌசான் மற்றும் கல்முனை ஜிம்ஹானா அணியின் செயலாளர் எஸ்.எல்.எம்.லாபீர் ஆகியோர் கலந்து கொண்டு இப்போட்டியில் சிரபாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்ட எம்.ஹக்காணிக்கு கிண்ணம் வழங்கி கௌரவித்தனர் .
Comments
Post a Comment