மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!


கல்முனை மாநகர சபையின் முதல்வராக தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இருக்க வேண்டுமென்று சாய்ந்தமருது மக்கள் சற்றுமுன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

கல்முனை மாநகர முதல்வர் பதவியினை இராஜினாமா செய்வது தொடர்பாக சாய்ந்தமருது மக்களின் கருத்துக்களை கேட்டறியும் கூட்டம் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் கூட்ட மண்டபத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் கல்முனை மாநகர முதல்வராக சிராஸ் மீராசாஹிப் தொடர்ந்து இருக்க வேண்டும், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை (பிரதேச சபை) ஒன்றினை பெற்றுக் கொள்ளல், 35 வருடத்திற்கு பிறகு கிடைத்த முதல்வர் பதவியினை முழுமையாக அனுபவிப்பதற்கு சுமூகத் தீர்வு காண்பதற்கு சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு கட்சித் தலைமையுடன் பேசுதல், ஊரின் அரசியல் அதிகாரம் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் பேசி சாதகமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என உள்ளடங்களாக நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரிடம் கையளிக்கப்பட்டது.

இத்தீர்மானங்களை ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமை சந்தித்து கையளிக்கவுள்ளதுடன் தொடர்ந்தும் கல்முனை மாநகர முதல்வராக சிராஸ் மீராசாஹிப் இருக்க வேண்டும் என வலியுறுத்தவுள்ளனர்.

இக்கூட்டத்திற்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.அமீர்;, எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.நஸார்தீன், ஏ.எம்.நபார், எம்.முபீத் மற்றும் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா, சாய்ந்தமருது வர்தக சங்கத் தலைவர் ஏ.எல்.எம்.நஸீர்; மற்றும் உலமாக்கள், புத்திஜீவிகள், அரச அதிகாரிகள், கட்சி போராளிகள் என பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். 





கல்முனை மாநகர முதல்வர் இராஜினாமா இழுபறி தொடர்பாக எதிர்கால முன்னெடுப்புக்களை சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினருடன் இணைந்து வர்த்தக சங்க பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள் என்பன மேற்கொள்ளவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது