7 மில்லியன் பெறுமதியான கள்ள நோட்டுக்கள் சி.ஐ.டி.யிடம் சிக்கின
மாலபேயிலிருந்து மீட்பு P67799159 இலக்கம் தொடர்பில் விழிப்பாக இருக்க கோரிக்கை
போலியாக அச்சிடப்பட்ட பெருந்தொகை 2000 ரூபா போலி நாணயத் தாள்களை குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஐ.சி.டி.யினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றை அடுத்து மாலபே பிரதேசத்தில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே பெருந்தொகை போலி நோட்டுக்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரொஹன தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாளின் உண்மையான பெறுமதி 70 இலட்சம் ஆகும் என்றும் தெரிவித்தார். மேலும் பெருந்தொகை போலி 2000 ரூபா நாணயத் தாள்கள் பல அச்சிட்டு புளக்கத்தில் விடப்பட்டுள்ளமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதுடன் P67799159 என்ற தொடர் இலக்கங்களைக் கொண்ட 2000 ரூபா நாணயத் தாள் போலியானதாக இருக்கலாம் எனவே, இது தொடர்பில் தெரியும் பட்சத்தில் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலதிக விபரங்களை எதிர்பாருங்கள்...
Comments
Post a Comment