அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட போட்டிகள் 31 இல்
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் இம் மாவட்டத்திலுள்ள ஏ பிரிவு உதைபந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும் மெரிகோல்ட் கிண்ண சுப்பர் லீக் சுற்றுப் போட்டி எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பமாக வுள்ளதாக அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ. எம். இப்ராஹிம் தெரி வித்தார். மெரிகோல்ட் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மருதமுனை முஸ்லிம் விளையாட்டுக் கழகம், மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகம், மருதமுனை கோல்மைன்ட் விளையாட்டுக் கழகம், கல்முனை சனிமவுண்ட் விளையாட்டுக் கழகம், கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது பிளைன்ஸ் கோஸ் விளையாட்டுக்கழகம் ஆகிய உதைபந் தாட்டக் கழகங்கள் விளையாடவுள்ளன. மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டுத்திடலில் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.