Posts

சவளக்கடையில் ஆற்று மண் ஆகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர்கைது

Image
 எ ம்.ஐ.எம்.அஸ்ஹர்) சவளக்கடை   பொலிஸ்   பிரிவிற்குட்ட   பிரதேசத்தில்   அனுமதிப்   பத்திரமின்றி   சட்டவிரோதமாக   ஆற்று   மண்   ஆகழ்வில்   ஈடுபட்ட   சந்தேக   நபர்கள்   இருவர் கைது   செய்யப்பட்டுள்ளதுடன் , இதற்காக   பயன்படுத்திய   ஒரு   உழவு   இயந்திரமும் ,  ஒரு   டிப்பர்   வாகனமும்    கைப்பற்றப்பட்டுள்ளதாக   சவளக்கடை பொலிஸார்   தெரிவித்தனர் . சவளக்கடை   பொலிஸாருக்கு   கிடைத்த   இரகசிய   தகவலையடுத்து   சவளக்கடை   பொலிஸ்   நிலையப்   பொறுப்பதிகாரி   ஏ . எம் . எம் . நஜீம்   தலைமையிலான குழுவினர்   மேற்கொண்ட   சுற்றிவளைப்பின்   போது   நாவிதன்வெளி   பிரதேசத்தினை   சேர்ந்த   ஒரு   உழவு   இயந்திரமும்   சம்மாந்துறையை   பிரதேசத்தினை    சேர்ந்த   ஒரு   டிப்பர்   வாகனமும்   கைப்பற்றப்பட்டுள்ளதுடன்   அதனுடன்   தொடர்புடைய   இரு   நபர்கள்   சந்தேகத்தின்   பேரில்   கைது   செய்யப்பட்டுள்ளனர் . இச்சம்பவம்   தொடர்பில்   கைது   செய்யப்பட்டுள்ள   இரு   நபர்களையும் ,  கைப்பற்றப்பட்டுள்ள   இரு   வாகனங்களையும்   சம்மாந்துறை   நீதவான் நீதிமன்றத்தில்   ஆஜர்   செய்ய   நடவடிக்கை   மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்

28 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்கள் நடத்த தடை

Image
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் என்பனவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் அறிக்கை ஒன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.  28 ஆம் திகதி நள்ளிரவு முதல் டிசம்பர் 12 ஆம் திகதி வரையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதனடிப்படையில் குறித்த பரீட்சைகளுக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல், அதனை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல், மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  எந்தவொரு தனி நபரே அல்லது நிறுவனமே இந்த தடை உத்தரவை கருத்திற்கொள்ளாது நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவார் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  யாரேனும் இவ்வாறான தடை உத்தரவை மீறியிருந்தால் 1911 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் குறிப்படப்பட்டுள்ளது.  இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்ச

பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டம் - சிவாஜிலிங்கம் கைது

Image
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வினை கொண்டாட முயற்சித்தமைக்காக முன்னாள் மாகாண சபை உறுப்பினா் எம்.கே. சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 வது பிறந்த நாள் இன்று. இதனை முன்னிட்டு யாழில் பல இடங்களில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இந்நிலையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினா் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில், வல்வெட்டித்துறையில் உள்ள தலைவாின் வீட்டில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு வந்த பொலிஸாா், அங்கிருந்த சிலருடைய அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனா்.  இந்நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக அங்கு சென்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினா் எம்.கே. சிவாஜிலிங்கத்தை கைது செய்யப்பட்டதுடன், அவாிடமிருந்த கேக் உள்ளிட்ட பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். 

கல அரச பாடசாலைகளும் 30 ஆம் திகதி மூடப்படும்

Image
சகல அரச பாடசாலைகளும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக நவம்பர் 30 ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  இப்பாடசாலைகள் மீண்டும் 1 ஆம் கல்வி தவணைக்காக 2019 ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  இதேவேளை, இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகும்.  இம்முறை நாடாளவிய ரீதியில் 6 இலட்சத்து 50 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  மேலும் இப்பரீட்சையானது 4661 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. பரீட்சைக்காக 541 இணைப்பு நிலையங்களும் 33 பிராந்திய நிலையங்களாக கொண்டு பரீட்சை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த சூழ்நிலையிலும் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன்

Image
எந்தவொரு சூழ்நிலையிலும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  சர்வதேச ஊடகங்களக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அத்துடன் இந்த தூர்மானம் தொடர்பில் தான் ஐக்கிய தேசிய கட்சிக்கு தெளிவுபடுத்தி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்

Image
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப மற்றும் வியாபார முகாமைத்துவ பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.  குழப்பநிலை காரணமாக குறித்த பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் கடந்த ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி மூடப்பட்டது.  இந்த நிலையில், விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறும் பதிவாளர் கேட்டுள்ளார்.  அரச தகவல் திணைக்களம்

மீண்டும் கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளராக ஜிஹானா அலிஃப் நியமனம்

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட  நிந்தவூர் கோட்டக்  கல்வி அதிகாரியாக கடமை புரிந்த அரச கல்வி நிருவாக சேவை அதிகாரியான மருதமுனையை சேர்ந்த திருமதி ஜிஹானா அலிஃப்  கல்முனை வலயக்  கல்வி அலுவலக முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக  மீண்டும் இன்று (24) நியமிக்கப் பட்டுள்ளார் . கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பாக கடமையாற்றிய Dr.S.M.M.S. உமர் மௌலானா மட்டக்களப்பு மத்தி  வலயக்கல்வி அலுவலகத்துக்கு வலயக்கல்விப் பணிப்பாளராக உயர்வு பெற்று சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திருமதி ஜிஹானா அலிஃப்  கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் M .S .அப்துல் ஜலீல் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்  சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் உதவிக்கல்விப்  பணிப்பாளராகவும் ,கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப்பணிப்பாளராகவும் ,நிந்தவூர் கோட்டக்  கல்வி அதிகாரியாகவும் கடந்த காலங்களில் கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை

Image
மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.  இது சம்பந்தமாக அரசாங்க தகவல் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,  மாவீரர் நினைவு தின கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என உணரும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதையும் அரசு வலியுறுத்துகின்றது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தன்னை கொலை செய்யும் சதி முயற்சி தொடர்பான தகவல்கள் வௌியாகும்

Image
ரணிலுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம் எனும் நூலை எதிர்வரும் ஜனவரி மாதம் வௌியிடவுள்ளேன் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.  நேற்று (23) நடைபெற்ற தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையின் வெள்ளி விழாக்காணும் ஜனாதிபதி விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் இல்லாத என்னை அவர்களின் உரைகளின் ஊடாக விளையாட்டுப் பொருளாக்கியுள்ளதாகவும், எனது மகள் எழுதிய ‘ஜனாதிபதி தாத்தா’ எனும் நூல் பாராளுமன்றத்தில் பேசு பொருளாகியுள்ளது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.  ரணிலுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம் எனும் நூலை வௌியிட உள்ளதாகவும், ஜனவரி மாதம் அதனை வாசிக்குமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.  2015 ஜனவரி 08ஆம் திகதி பொது ஆபேட்சகராக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்வந்து தான் மேற்கொண்டது அரசியலில் ஒரு எதிர்நீச்சலாகும் என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இன்று நாட்டுக்கு வேண்டாத அனைத்து சக்திகளையும் நீக்கி முன்னெடுத்திருக்கும் இந்த நிகழ்ச்சித் திட்டமும் அரசியலில் ஒரு எதிர்நீச்சலா

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் வேண்டும்

Image
( எம்.ஐ.எம்.அஸ்ஹர்) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க எதிர்காலத்தில் பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்த வேண்டிய கட்டம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. இவ்வாறு சாய்ந்தமருது – மாளிகைக்காடு உலமா சபை சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று ( 25 ) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் உரையாற்றிய கல்முனை பொலிஸ் நிலைய சமூக சேவை பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹித் தெரித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , அண்மைக்காலமாக கல்முனை பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யும் பலரை கைது செய்து நீதி மன்றத்தில் ஒப்படைத்து தண்டனைகள் பெற்றுக் கொடுத்தும் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை  அதிகரித்த வண்ணமே உள்ளது. போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை வேண்டி நின்ற போதும் அச்சத்தின் காரணமாக அவர்களை காட்டிக் கொடுப்பதில் பொதும

விவாசாயத்துறை மீதான வரி விலக்கு

Image
ஐந்து வருடத்திற்கு விவாசாயத்துறை மீதான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.  அத்துடன் விவாசாயத்துறை மீதான வருமான 28% வீதத்தில் இருந்து 14% வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக ​தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

Image
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்னெடுக்கப்பட்டுவரும் பிரச்சாரங்களின் உண்மைத் தன்மை தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (23) முற்பகல் சுகாதார அமைச்சுக்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.  அங்கு சுகாதார அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி, இலவச சுகாதார சேவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பலவீனமடைவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் நாட்டின் பொதுமக்களுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை பலமாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.  ஒரு துறையில் ஏதேனும் ஒரு குறைபாடு இருக்குமானால் அவற்றை சரி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.  அடுத்துவரும் சில மாதங்களுக்கு போதுமான அளவில் மருந்துப் பொருட்களை பேணி வருவதற்கு தேவையான தீர்மானங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.  மக்களை குழப்பும் வகையில் சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும் இத்தகைய போலிப்பிரச்சாரங்க

திங்கட்கிழமை அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு

Image
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க கோரி எதிர்வரும் திங்கட்கிழமை காலை அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் கூறியுள்ளார்.  இன்று (23) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.  அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும், மக்களுடைய சக்தி வௌிக்காட்டுவதற்காகவும் இந்த போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறியுள்ளார்.  நிதிச் செயலாளர், தொழில் அமைச்சர காமினி லொக்குகே மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியோரின் பங்களிப்பில் நேற்று முன்தினம் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், எனினும் முதலாளிமார் சம்மேளனம் 600 ரூபா விலேயே இருப்பதாகவும் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் கூறியுள்ளார்.  எனினும் நாங்கம் 1000 ரூபா வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும், அதனை வலியுறுத்தும் விதமாக திங்கட்கிழமை காலை போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.  அன்றைய தினம் அனைவரும் வர்த்தக நிலையங்களையும் மூடி கருப்பு கொடியை தொங்கவிட்டு தமது எதிர்ப்பை வௌியிடுமாறு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் கோரிக்கை விடு

புலிகளின் கொடி, சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த தடை

Image
யாழ்ப்பாணம், கோப்பாயில் 512 ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் தடை விதித்ததுள்ளது.  எதிர்வரும் 27 ஆம் திகதி கோப்பாயில் நடைபெறவிருந்ந மாவீரர் நிகழ்வில் தடை செய்யப்பட் பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள், இலச்சினைகள் என்பவையும் பயன்படுத்த தடை உத்தரவை நீதிமன்று வழங்க வேண்டும் என கோப்பாய் பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றல் நேற்றுமுன்தினம் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.  அந்த மனு மீதான தீர்ப்பை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் இன்று (23) மாலை வழங்கினார். 

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கொன்று வாபஸ் பெறப்பட்டது

Image
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு வழக்கு ஒன்று இன்று சட்ட மா அதிபரால் மீளப்பெறப்பட்டுள்ளது.  கடந்த 2007ம் ஆண்டு மாலபே பிரதேசத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்துவ ஆலயமொன்றில் பலவந்தமாக நுழைந்து, சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியமைக்காக கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட்ட 13 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  சந்தேகநபர்களை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்து விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இந்த நிலையில், குறித்த வழக்கை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதில்லை என்றும், வழக்கை வாபஸ் பெறுவதாகவும் சட்டமா அதிபர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று தெரிவிக்கப்பட்டது.  அதன்படி சட்டமா அதிபரின் கோரிக்கையை ஏற்ற மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளது. குறிப்

பாராளுமன்றம் கூட்டப்பட்டது சட்டத்துக்கு முரண் மனு விசாரணை

Image
கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என்று உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 04ம் திகதி விசாரணைக்கு அழைக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.  பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  பாராளுமன்றத்தை கலைப்பதற்கு வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் விசாரணை நாளான எதிர்வரும் 04, 05, 06 ம் திகதிகளில் இந்த மனுவை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் பிரதிவாதிகளாக சபாநாயகர், சட்ட மா அதிபர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.  கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடு என்று ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தனது மனு மூலம் கூறியுள்ளார்.

இன்று கூடிய பாராளுமன்றில் நடந்தவை

Image
பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்று முன்னர் கூடியது.  பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.  பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலயே பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.  பாராளுமன்ற அமர்வு ஆரம்பமான போது, இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க தனிக் கட்சி உறுப்பினர் என்ற வகையில் தனக்கு வாய்ப்பு ஒன்றை வழங்குமாறு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.  அதன் பின்பு, ஐக்கிய தேசிய முன்னணியில் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தலா 1 உறுப்பினருமாக தெரிவிக் குழுவில் இடம்பெறுவர் என சபாநாயகர் பாராளுமன்றில் அறிவித்தார்.  பின்னர் ப

கட்சித்தலைவர்கள் கூட்டம் - தெரிவுக்குழு உறுப்பினர்களும் நாளை நியமனம்

Image
கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நாளை (23) இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை காலை 9 மணிக்கு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதன்போது நாளைய நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அத்துடன் தெரிவுக்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நெரிசல் 14 பேர் வைத்திய சாலையில் அனுமதி

Image
களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் இன்று நடைபெற்ற  ஆலய ருத்திர வேள்வியில் கலந்து கொண்டு ருத்ர மாலை பெறுவதற்கு  ஏற்பட்ட  நெரிசலில் சிக்குண்டு காயமடைந்தவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டவர்களும் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையிலும்  ,மட்டக்களப்பு  வைத்தியசாலையிலும்  அனுமதிக்கப்பட்டுள்ளனர் . களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நடத்தப்பட்டுவரும் ஏகாதச ருத்ர வேள்வியின் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று வியாழக்கிழமை  யாகம் நடைபெற்றது 

கிழக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்கள பிரதம முகாமைத்துவ உதவியாளருக்கு பிரியாவிடை பாராட்டு

Image
கிழக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்களத்தில் கடமையாற்றி அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும்   பிரதம முகாமைத்துவ உதவியாளர்  சுந்தரம் சிவபாலனுக்கு    நேற்று  பிரியாவிடை வைபவம்   அலுவகத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்கள அத்தியட்சகர்  எச்.எம்.எம். ரஷீட் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில் திணைக்கள உத்தியோகத்தர் ஊழியர்கள் கலந்து கொண்டு  பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கெளரவித்தனர் 

நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கா வேண்டுகோள்

Image
இலங்கை அரசியலமைப்பின் அடிப்படையிலும் சட்டத்தின் ஆட்சி அடிப்படையிலும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வன் ஹொலன், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  பிரதமரை பதவியிலிருந்து நீக்கியது தொடர்பிலும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களை நிராகரித்தமை தொடர்பிலும் தான் அவதானமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தம் குறித்து வாக்குறுதி வழங்கிய பின்னர் 2015 தேர்தலில் இருந்து அமெரிக்கா மற்றும் இலங்கை உறவுகள் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  எனினும் கடந்த சில வாரங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் இலங்கை சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இந்த நிலமை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வலுப்படுத்துவதற்கு தடையாக அமையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  எனவே இந

ஹஜ் கோட்டாவினை 5 ஆயிரமாக அதிகரிக்குமாறு சவூதி அரசிடம் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

Image
இலங்கைக்கு வழங்கப்படுகின்ற 3 ஆயிரம் ஹஜ் கோட்டாவுக்கு மேலதிகமாக மேலும் 2 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை வழங்குமாறு சவூதி அரேபியா அரசிடம் முஸ்லிம் அலுவல்களுக்குப் பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.   சவூதி அரேபிய அரசின் ஹஜ் மற்றும் உம்றாவுக்கு பொறுப்பான அமைச்சர் டொக்டர் சாலிஹ் பின் முஹம்மத் தாஹிர் பன்தன் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான ஹஜ் விவகாரங்களுக்கு பொறுப்பான நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர். ரபத் இப்னு இஸ்மாஈல் இப்ராஹீம் பதர் ஆகியோரிடம் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளார். இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாஸர் எச். அல் ஹரிதி ஊடாக குறித்த கடிதம் சவூதி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஹஜ் கடமை நிறைவேற்றுவதற்காக இலங்கையில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வருடா வருடம் கிடைக்கப்பெறுவதாக சுட்டிக்காட்டி இவ்வருடம் 5ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை இலங்கைக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ஹிஸ

இன்று தேசிய மீனவர் தின அதிஷ்டம் மருதமுனையில் இன்று மாலை கீரி மீன் அதிகளவில் கரைவலைக்கு பிடிபட்டுள்ளது.

Image

அக்குரண நகரம் மீண்டும் வெள்ளத்தில் சாரதிகள் மாற்றுவளியை பயன்படுத்தவும்

Image
கண்டி அக்குரண  நகரம் நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதி வழியான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழைக் காரணமாக குறித்த வீதி இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  எனவே அக்குரண  நகரம் ஊடாக மாத்தளை செல்லும் வாகன ஓட்டுனர்கள் வத்தேகம ஊடான மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.