ஞானசார தேரருக்கு எதிரான வழக்கொன்று வாபஸ் பெறப்பட்டது


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு வழக்கு ஒன்று இன்று சட்ட மா அதிபரால் மீளப்பெறப்பட்டுள்ளது. 

கடந்த 2007ம் ஆண்டு மாலபே பிரதேசத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்துவ ஆலயமொன்றில் பலவந்தமாக நுழைந்து, சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியமைக்காக கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட்ட 13 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

சந்தேகநபர்களை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்து விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், குறித்த வழக்கை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதில்லை என்றும், வழக்கை வாபஸ் பெறுவதாகவும் சட்டமா அதிபர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி சட்டமா அதிபரின் கோரிக்கையை ஏற்ற மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்