பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டம் - சிவாஜிலிங்கம் கைது
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வினை கொண்டாட முயற்சித்தமைக்காக முன்னாள் மாகாண சபை உறுப்பினா் எம்.கே. சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 வது பிறந்த நாள் இன்று. இதனை முன்னிட்டு யாழில் பல இடங்களில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினா் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில், வல்வெட்டித்துறையில் உள்ள தலைவாின் வீட்டில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு வந்த பொலிஸாா், அங்கிருந்த சிலருடைய அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனா்.
இந்நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக அங்கு சென்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினா் எம்.கே. சிவாஜிலிங்கத்தை கைது செய்யப்பட்டதுடன், அவாிடமிருந்த கேக் உள்ளிட்ட பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Comments
Post a Comment