கல அரச பாடசாலைகளும் 30 ஆம் திகதி மூடப்படும்


சகல அரச பாடசாலைகளும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக நவம்பர் 30 ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இப்பாடசாலைகள் மீண்டும் 1 ஆம் கல்வி தவணைக்காக 2019 ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகும். 

இம்முறை நாடாளவிய ரீதியில் 6 இலட்சத்து 50 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் இப்பரீட்சையானது 4661 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. பரீட்சைக்காக 541 இணைப்பு நிலையங்களும் 33 பிராந்திய நிலையங்களாக கொண்டு பரீட்சை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்