புலிகளின் கொடி, சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த தடை
யாழ்ப்பாணம், கோப்பாயில் 512 ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் தடை விதித்ததுள்ளது.
எதிர்வரும் 27 ஆம் திகதி கோப்பாயில் நடைபெறவிருந்ந மாவீரர் நிகழ்வில் தடை செய்யப்பட் பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள், இலச்சினைகள் என்பவையும் பயன்படுத்த தடை உத்தரவை நீதிமன்று வழங்க வேண்டும் என கோப்பாய் பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றல் நேற்றுமுன்தினம் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனு மீதான தீர்ப்பை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் இன்று (23) மாலை வழங்கினார்.
Comments
Post a Comment