மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை
மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக அரசாங்க தகவல் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,
மாவீரர் நினைவு தின கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என உணரும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதையும் அரசு வலியுறுத்துகின்றது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment