Posts

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

Image
வதந்திகளை பரப்புவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார். காலி கின்தோட்டயின் அமைதியற்ற சம்பவத்தை பெரிதுபடுத்தி வன்முறைகளை தூண்டுவதற்கான வந்திகள் , பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பான வதந்திகள் ஆகியவற்றை மேற்கொண்டவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இரகசிய பொலிஸார் தீவிரமாக முயற்சித்துவருவதாக அவர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டார். காலி கின்தோட்டையில் ஏற்பட்ட அமைதியற்ற சம்பவத்தின்போது 127 சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தின போது பொலிசாரைப்போன்றே மதத்தலைவர்களும் மத்தியஸ்தர்களும் தமது பொறுப்புக்களிலிருந்து தவறியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார் செய்தியாளர்  : கின்தோட்டை சம்பவம் தொடர்பாக பொலிசார் தமது பொறுப்புக்களை நிறைவேற்றவில்லை என்று பொலிஸ்மா அதிபர் குறைகூறியுள்ளார். பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  : பொலி

2017.11.21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்

Image
அம்பாறை நிந்தவூர் வைத்தியசாலைகள்  அபிவிருத்தி  18. வைத்தியசாலைகளில் கட்டுமானங்கள் மற்றும் அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் (விடய இல. 49) சாதாரண கொள்முதல் முறையினை பின்பற்றும் போது ஏற்படுகின்ற கால தாமதத்தினால் வைத்தியசாலைகளின் கட்டுமானங்கள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எழுந்துள்ள கால தாமதத்தினை கவனத்திற் கொண்டு, அந்நிலைமையில் இருந்து மீள்வதற்காக அப்பணியினை அரச நிர்மாண நிறுவனமொன்றுக்கு ஒப்படைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இணங்க, கராபிட்டிய, அம்பாரை, நிந்தவூர் ஆகிய வைத்தியசாலைகளில் துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுமானப்பணிகளை பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகம் மற்றும் பொறியியல் சேவை தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கு வழங்குவதற்கும், ஹொரண அடிப்படை வைத்தியசாலையின் கட்டுமான பணிகளை இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

காலநிலைநாட்டில் பொரும்பாலான மாகாணங்களில்மழை

Image
நாட்டில் பொரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரையோரங்களின் பல பகுதிகளில்; காலை வேளைகளில் மழை பெய்யும். நாட்டில் சுமார் 100 மில்லமீற்றர் மழை குறிப்பாக சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக்கூடும். மேற்கு , வடமேற்கு , மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலைவேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும். புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையில் காற்று வடகிழக்கு திசையில் வீசுவதுடன் காற்றின் வேகம் 20 முதல் 30 கிலோமீற்றர் வேகத்தை கொண்டதாக இருக்கும். நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 10 முதல் 20 கிலோமீற்றர் வேகத்தினை கொண்டதாக காணப்படும். காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வரையிலான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 40 முதல் 45 கிலோமீற்றருக்கு அதிகமான வேகததில் வீசும். இடியுடன் கூடிய மழையின் போது இப்பிரதேசத்தில் தற்காலிகமாக 70 முதல் 80 கிலோமீற்றர்

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் த.தே.கூ. – மு.கா இடையில் இரகசிய உடன்பாடுகள் இருப்பின் உடனடியாக வெளிப்படுத்துக!

Image
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு  வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்குமாயின் அதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் கிழக்கில் ஏற்படும் ஆபத்து குறித்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசியலமைப்பு பேரவையில் கடந்த நவம்பர் 8ஆம் திகதி உரையாற்றியிருந்தார். இதனை சிலர் திரிவுபடுத்தி ஊடக அறிக்கைகள் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் யாழ் மாவட்ட த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்  சரவணபவன் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையொன்றை கோடிட்டுக் காட்டி இராஜாங்க அமைச்சர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு  குறிப்பிட்டுள்ளார்.  அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது:-  தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் புரிந்துணர்வையும் - ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். தலைவ

கவிதைப் போட்டியில் முதலிடம் - பாத்திமா நதா

Image
அகில இலங்கை ரீதியாக பாடசாலைகள் மட்டத்தில் நடந்த மீலாத் விழா கவிதைப் போட்டியில் கொழும்பு, 15 சேர் ராஸிக் பரீத் மகளிர் வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் பாத்திமா நதா முதலிடத்தைப் பெற்றார்.  மட்டக்குளி, மல்வத்தை ஒழுங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், சாஜஹான், மிர்ஸியா தம்பதிகளின் மூத்த புதல்வியாவார். 

கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மாணவர்களிடம் இருக்க வேண்டும் ஐந்து வேளைத் தொழுகை அனைவருக்கும் வழிகாட்டும்

Image
அஷ்செய்க் எம்.ஐ.ஹூசைனுத்தீன்( றியாழி ) (மருதமுனை ஜெஸீல்) கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மாணவர்களிடம் இருக்க வேண்டும் ஒழுக்கம் இல்லாத மாணவர்களை சமூகம் மதிக்காது.ஐந்து வேளைத் தொழுகையே அனைவரையும் நல்லவர்களாக மாற்றும்  என மருதமுனை ஜம்மியத்துல் உலமா மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் அஷ்செய்க் எம்.ஐ.ஹூசைனுத்தீன் றியாழி தெரிவித்தார். மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவத் தலைவர்களுக்கான சின்னஞ் சூட்டும் நிகழ்வு கடந்த  வெள்ளிக்கிழமை அதிபர் பி.எம்.எம்.பத்றுத்தீன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.எப்.எம்.மர்சூக் அதிதியாகக் கலந்து கொண்டார் இங்கு  பிரதி அதிபர் ஏ.எம்.அன்சார்.பெண்கள் பிரிவு  அதிபர் முகைதீன் முஸம்மில்.அதிபர் ஐ.உபைதுல்லா ஆகியோருடன்  ஆசிரியர்கள், பெற்றோர்கள்  உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். சிரேஷ்ட மாணவத் தலைவர்களான டபள்யூ. ரஸாத் அஹமட், எம்.அநோத் சனா ஆகியோருடன் ஐம்பது மாணவர்களுக்கு மாணவத் தலைவர்களுக்கான ச

தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் திகதி வெள்ளிக்கிழமை அறிவிப்பு

Image
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் திகதி அறிவிப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கான கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் பிரதித் தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோருக்கான கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறினார்.
Image

மருத்துவர் சட்டத்தரணியானார்

Image
மருத்துவராக கடமை புரிந்த ஒருவர் சட்டப்படிப்பை முடித்து சட்டத்தரணியாகி  தமிழ் பேசும் மக்கள் மத்தியில் குறிப்பிட்ட இரு துறையிலும் பட்டதாரிப்படிப்பை முடித்த ஒரேயொரு தமிழ் பேசும் இலங்கையர் என்ற அந்தஸ்தை கல்முனையை சேர்ந்த டாக்டர் வை.எல்.எம்.யூசுப் பெற்றுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற இவர் மருத்துவர் பட்டம் பெற்றதன் பின்னர்  கொழும்பு தேசிய வைத்தியசாலை கடமையாற்றினார். பின்னர் தான் பிறந்த கல்முனை மண்ணுக்கு சேவையாற்ற கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றி  மீன்டும் பொறளை சிறுவர் வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். பொறளை சிறுவர் வைத்தியசாலையில் கடமையாற்றிய டாக்டர் வை.எல்.எம்.யூசுப் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் சட்டப்படிப்பை முடித்து  கொழும்பு சட்டக் கல்லூரி பரீட்சையில் சித்தியடைந்து சட்டத்தரணியாகவூம் நியமனம் பெற்றுள்ளார். கல்முனை அல்- பஹ்றியா மகாவித்தியலயத்தில் ஆரம்பக்கல்வியையூம் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் உயர் கல்வியையூம் பெற்ற இவர் கல்முனைக் குடியை சேர்ந்த யூனுஸ் லெவ்வை ஆசியா உம்மாவின் ஆறாவது புதல்வராவார்

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு முன்மொழிவு

Image
இலங்கையை உயர் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக மாற்ற வேண்டுமாயின் உறுதியான ஜனநாயகத்தையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவது அவசியமென்பதை நிதி மற்றும் ஊடகத்துறை  அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 2018 ஆம்ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில்  சமர்ப்பித்து இவ்வாறு குறிப்பிட்ட அவர் . இதற்காக கடந்த கால போர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவது அவசியம் என்றும் வலியுறுத்தினார். கடலட்டைகளுக்கு சிறந்த கேள்விகள் உண்டு.   நெடுந்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் இரண்டு உணவு பதனிடும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. மயிலிட்டி துறைமுகம் மீன்பிடித் துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும். அச்சுவேலி கைத்தொழில் வலயத்தில் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கும் கம்பனிகளுக்கு சலுகை வழங்கி, அதன் பொதுவசதிகளை அபிவிருத்தி செய்யும் யோசனைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அச்சுவேலி தொழிற்பேட்டையில் மின்சார வசதிகளை மேற்கொள்வதற்கான செலவில் 50 சதவீதத்தினை அரசாங்கம் பொறுப்பேற்கின்றது   நெடுந்தீவு, கிளிநொச்சி பகுதிகளில் பிரதேசங்களில் பனை வளத்தை மேம்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்திற்

துண்டுவிடும் தொகையை குறைத்து சமூகத்தில் சகல துறைகளுக்கு சலுகை வழங்கும் யோசனைகள் முன்மொழிவு

Image
2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் துண்டு விழும் தொகையை குறைத்து சமூகத்தில் சகல துறைகளுக்கும் சலுகைகளை வழங்குவதோடு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான யோசனைகள் அடங்கிய வரவு செலவுத்திட்டம் அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தற்பொழுது உள்ள தொழிலாளர் மற்றும் வர்த்தக சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதின் அவசியங்களையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த சட்டங்கள் தொழிற்துறையை சார்ந்தவர்களுக்கும் ஊழியர்களுக்கும் நன்மைபயக்கும் வகையில் மறுசீரமைப்பு செய்யப்படவேண்டும். அத்தோடுநாட்டின் தேசிய வளப்பயன்பாட்டிற்கும் ஊக்குவிப்பதாக அமைய வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். சுகாதாரம், பெருந்தோட்டம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் நலன் பெருந்தோட்ட துறை மக்களின் நலன் பல்கலைக்கழக கல்வி, போக்குவரத்து சுற்றுலா, கல்வி, கைத்தொழில், பல்கலைக்கழக கல்வி, பொதுக்கல்வி, போக்குவரத்து, கடல்வளத்தை மையமாகக் கொண்ட நீலப் பசுமை எண்ணக்கவிற்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலான முன்மொழிவுகளை இன்று நிதியமைச்சர் பாராளுமன்றத்தில்

இன்று நள்ளிரவு முதல் அமுல்

Image
இன்று நள்ளிரவு முதல் மென்பானங்களிலுள்ள சீனி அளவிற்கு ஏற்ப புதிய வரிமுறை அமுலுக்கு வருகின்றது.  ஒருகிராமுக்கு 50 சதம் வீதம் புதிய வரி அறவிடப்படவுள்ளது. திரவமற்ற மதுப்பொருட்களுக்கு இன்று நள்ளிரவு முதல் விசேட வரி அமுலுக்கு வருகின்றது. மேலும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விளையாட்டு காலணிகளுக்கான வரியும் நீக்கப்படவுள்ளது. இதேவேளை, அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 18ம் திகதி முதல் மதுபானங்களுக்கான தேசத்தை கட்டியெழுப்பும் வரி விதிக்கப்படவுள்ளது. வாகனங்களுக்கான காபன் வரியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மோட்டார் சைக்கிளுக்காக நாளாந்தம் 17 சதமும் மோட்டார் காருக்கு ஒரு ரூபா 78 சதமும் பஸ் வண்டிக்கு இரண்டு ரூபா 74 சதமும் வரி விதிக்கப்படவுள்ளது.

ஐந்தாம் தரப்புலமை பரிசில் பரீட்சையில் ​கிழக்கு மாகாண மட்டத்தில் கல்முனை கல்வி வலயம் இரண்டாம் இடம்

Image
இவ்வருடம்  நடை பெற்ற ஐந்தாம் தரப்புலமை பரிசில்  பரீட்சையில் ​கிழக்கு மாகாண மட்டத்தில்  மடடக்களப்பு  கல்வி வலயம்  முதலிடத்தையும் , கல்முனை கல்வி வலயம்  இரண்டாம் இடத்தையும் திருகோணமலை கல்வி வலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது . பரீட்சைகள்  திணைக்களத்தில்  நடாத்தப்பட்ட புள்ளி விபர அறிக்கைகளின் ஆய்வின் படி  இது தெரிய வந்துள்ளது.  தேசிய ரீதியில்  ஒப்பிடுகையில்  மட்டக்களப்பு வலயம் 15.61  விகித அடிப்படையில் 06வது  இடத்தையும் ,கல்முனை வலயம் 11.01விகித அடிப்படையில் 29வது  இடத்தையும் ,9.87 விகித அடிப்படையில் 36வது  இடத்தையும் பெற்றுள்ளது  கிழக்கு மாகாணத்தின் ஏனைய  கல்வி வலயங்களான அம்பாறை -4 ,திருக்கோவில் -5,தெஹியத்தகண்டி -6மட்டக்களப்பு மத்தி -7,அக்கரைப்பற்று -8,பட்டிருப்பு -9,கந்தளாய் -10மூதூர் -11,கல்குடா -12,சம்மாந்துறை -13மகோயா -14,மட்டக்களப்பு மேற்கு -15திருகோணமலை வடக்கு -16,கிண்ணியா -17 ஆகிய இடங்களில் உள்ளன . கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணத்தில் 4வது  இடத்தில் இருந்த கல்முனை கல்வி வலயம் இவ்வருடம் 02வது  இடத்தையும் 7வது இடத்தில இருந்த திருமலை வலயம் 03வது  இ

நாளை 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் பிரேரணை

Image
2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் பிரேரணையை நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.   பாராளுமன்றம் நாளை பிற்பகல் 3.00 மணிக்கு கூடும். அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட யோசனைகளைச் சமரப்பிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.   வரவு செலவுத் திட்ட பிரேரணை மீதான விவாதம் நாளை முற்பகல் 9.30ற்கு பாராளுமன்றத்தில் ஆரம்பமாகிறது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 16ம் திகதி மாலை இடம்பெறும். 

நற்பிட்டிமுனை (CEB) 2ஆம் குறுக்கு வீதி இருபது இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) கல்முனை மாநர சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனை இணை அமைப்பாளர்களில் ஒருவருமான மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மானின் வேண்டுகோளின் பேரில் மகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின்  நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிராம பிரதேசங்களில் வீதிகளை அபிவிருத்தி செய்யு ம் வேலைத் திட்டத்திற்கமைய   நற்பிட்டிமுனை (CEB) 2ஆம் குறுக்கு வீதி இருபது இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

கல்முனை கிறிஸ்தா சிறுமியர் இல்ல விளையாட்டுப் போட்டி

Image
கல்முனை நகரில்  1883 ஆம் ஆண்டு தொடக்கம் கல்முனை மெதடிஸ்த திருச் சபையினால் இயக்கப்பட்டு வருகின்ற வறிய மாணவர்களை பராமரித்து வரும் கல்முனை  கிறிஸ்தா  இல்ல  சிறுமியர் விடுதியின்  இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (03) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் நடை பெற்றது . இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் சிவப்பு நிற அக்கின்ஸ் இல்ல மாணவிகளும் பச்சை நிற ஸ்பார்க் இல்ல மாணவிகளுமாக  இரண்டு இல்லங்களை சேர்ந்த மாணவிகள்  பங்கு பற்றியிருந்தனர் . 56 புள்ளிகளைப்  பெற்ற  பச்சை நிற ஸ்பார்க்  இல்லம்    சம்பியன் கிண்ணத்தை பெற்றதுடன் சிவப்பு நிற அக்கின்ஸ்  இல்லம் 50 புள்ளிகள் பெற்று  இரண்டாம் இடத்தைப் பெற்றது. கல்முனை  கிறிஸ்தா  சிறுமியர் இல்லத்தில் பலதரப்பட்ட  வர்க்கத்தை சேர்ந்த வறிய மாணவிகள் 75 பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் . இவர்களிடையே  நல்  ஒழுக்கத்தையும் ,கட் டுப்பாடையும் ,தலைமைத்துவ  பண்பையும்  கட்டியெழுப்புகின்ற  நோக்கில்  கல்முனை மெதடிஸ்த திருச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த இல்ல விளையாட்டுக்கள் நடந்தேறியது. கல்முனை மெதடிஸ்த திருச் சபை போதகர் விநோத்  தலைமையி

ஒருவரிடம் வாசிப்பு இல்லையென்றால் அவர் சமூக அந்தஸ்தைப் பெறமுடியாது.

Image
சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.எ.காதர் மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைந்து கொண்டு போவதை அவதானிக்க முடிகின்றது.இதன் தாக்கம் பரீட்சைப் பெறுபேறுகளிலும் ஆதிக்கம் செலுத்துதை நாம் காண்கின்றோம்.ஒருவரிடம் வாசிப்பு இல்லையென்றால் அவர் சமூக அந்தஸ்தைப் பெறமுடியாது. வாசிப்பை நேசித்தால்தான் சமூகம் நம்மை நேசிக்கும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் தெரிவித்தார். தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் அதிபர் பி.எம்.எம்.பதுறுத்தீன் தலைமையில் நேற்று(06-11-2017)திங்கள் கிழமை நடைபெற்ற நிகழ்வில் விஷேட விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது- இலங்கையில் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.2004ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை நாடு முழுவதும் தேசிய வாசிப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகின்றது. பல்கலைக் கழகங்கள், கல்விக் கல்லூரிகள், பாடசாலைகள்,உள்ளுராட்சி மன்றங்கள் நூலகங்கள் உள்ளீட்ட பல்துறைசார்ந்த பொது ஸ்தாபனங்களும்

மருதமுனை அக்பர் கிராமத்தில்அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்)  தேசிய சுனாமி அனர்த்த வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ள மருதமுனை, பெரியநீலாவணை,அக்பர் கிராம பிரதேச மக்களுக்கான அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு  நேற்று (05-11-2017)அக்பர் கிராம முன்னெச்சரிக்கை கோபுரத்திற்கருகில் 2.00 மணி தொடக்கம் 3.15மணிவரை நடைபெற்றது. இங்கு முன்னெச்சரிக்கை கோபுரத்தில் இருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.இதில் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களும்வி,ஷேட அதிரடிப்படையினரும்கடற்படையினரும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.