வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

வதந்திகளை பரப்புவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார்.
காலி கின்தோட்டயின் அமைதியற்ற சம்பவத்தை பெரிதுபடுத்தி வன்முறைகளை தூண்டுவதற்கான வந்திகள் , பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பான வதந்திகள் ஆகியவற்றை மேற்கொண்டவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இரகசிய பொலிஸார் தீவிரமாக முயற்சித்துவருவதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.


காலி கின்தோட்டையில் ஏற்பட்ட அமைதியற்ற சம்பவத்தின்போது 127 சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தின போது பொலிசாரைப்போன்றே மதத்தலைவர்களும் மத்தியஸ்தர்களும் தமது பொறுப்புக்களிலிருந்து தவறியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்

செய்தியாளர் : கின்தோட்டை சம்பவம் தொடர்பாக பொலிசார் தமது பொறுப்புக்களை நிறைவேற்றவில்லை என்று பொலிஸ்மா அதிபர் குறைகூறியுள்ளார்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் : பொலிசார் மாத்திரமன்றி ஏற்கனவே நான் குறிப்பிட்டவர்களும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற தவறியுள்ளனர். பிரஜா பொலிஸ் பிரிவு இந்த பகுதியில் தற்போது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு செயற்பட்டுவருகின்றது.

சம்பவம் தொடர்பில் 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தின் மூலமே இவர்கள் தமது பிணைக்கான விண்ணப்பங்களை மேற்கொள்ளமுடியும். அதற்கேற்றவகையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் : இந்த சம்பவம் ஏற்படுவதற்கு அரசியல் பின்னணி உண்டா?

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் : சில கடும்போக்காளர்களே இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்