காலநிலைநாட்டில் பொரும்பாலான மாகாணங்களில்மழை
நாட்டில் பொரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரையோரங்களின் பல பகுதிகளில்; காலை வேளைகளில் மழை பெய்யும்.
நாட்டில் சுமார் 100 மில்லமீற்றர் மழை குறிப்பாக சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக்கூடும்.
மேற்கு , வடமேற்கு , மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலைவேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.
புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையில் காற்று வடகிழக்கு திசையில் வீசுவதுடன் காற்றின் வேகம் 20 முதல் 30 கிலோமீற்றர் வேகத்தை கொண்டதாக இருக்கும்.
நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 10 முதல் 20 கிலோமீற்றர் வேகத்தினை கொண்டதாக காணப்படும்.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வரையிலான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 40 முதல் 45 கிலோமீற்றருக்கு அதிகமான வேகததில் வீசும்.
இடியுடன் கூடிய மழையின் போது இப்பிரதேசத்தில் தற்காலிகமாக 70 முதல் 80 கிலோமீற்றர் வரையிலான காற்று வீசுவதுடன் கடலும் கொந்தளிப்புடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Comments
Post a Comment