ஐந்தாம் தரப்புலமை பரிசில் பரீட்சையில் கிழக்கு மாகாண மட்டத்தில் கல்முனை கல்வி வலயம் இரண்டாம் இடம்
இவ்வருடம் நடை பெற்ற ஐந்தாம் தரப்புலமை பரிசில் பரீட்சையில் கிழக்கு மாகாண மட்டத்தில் மடடக்களப்பு கல்வி வலயம் முதலிடத்தையும் , கல்முனை கல்வி வலயம் இரண்டாம் இடத்தையும் திருகோணமலை கல்வி வலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது .
பரீட்சைகள் திணைக்களத்தில் நடாத்தப்பட்ட புள்ளி விபர அறிக்கைகளின் ஆய்வின் படி இது தெரிய வந்துள்ளது.
தேசிய ரீதியில் ஒப்பிடுகையில் மட்டக்களப்பு வலயம் 15.61 விகித அடிப்படையில் 06வது இடத்தையும் ,கல்முனை வலயம் 11.01விகித அடிப்படையில் 29வது இடத்தையும் ,9.87 விகித அடிப்படையில் 36வது இடத்தையும் பெற்றுள்ளது
கிழக்கு மாகாணத்தின் ஏனைய கல்வி வலயங்களான அம்பாறை -4 ,திருக்கோவில் -5,தெஹியத்தகண்டி -6மட்டக்களப்பு மத்தி -7,அக்கரைப்பற்று -8,பட்டிருப்பு -9,கந்தளாய் -10மூதூர் -11,கல்குடா -12,சம்மாந்துறை -13மகோயா -14,மட்டக்களப்பு மேற்கு -15திருகோணமலை வடக்கு -16,கிண்ணியா -17 ஆகிய இடங்களில் உள்ளன .
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணத்தில் 4வது இடத்தில் இருந்த கல்முனை கல்வி வலயம் இவ்வருடம் 02வது இடத்தையும் 7வது இடத்தில இருந்த திருமலை வலயம் 03வது இடத்தைப் பெற்றுள்ளதோடு , கடந்தாண்டு கிழக்கு மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தில இருந்த அம்பாறை கல்வி வலயம் இவ்வருடம் 4ஆம் இடத்தையும் 03ஆம் இடத்தில இருந்த மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் 07ஆம் இடத்தை அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment