மருத்துவர் சட்டத்தரணியானார்
மருத்துவராக கடமை புரிந்த ஒருவர் சட்டப்படிப்பை முடித்து சட்டத்தரணியாகி தமிழ் பேசும் மக்கள் மத்தியில் குறிப்பிட்ட இரு துறையிலும் பட்டதாரிப்படிப்பை முடித்த ஒரேயொரு தமிழ் பேசும் இலங்கையர் என்ற அந்தஸ்தை கல்முனையை சேர்ந்த டாக்டர் வை.எல்.எம்.யூசுப் பெற்றுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற இவர் மருத்துவர் பட்டம் பெற்றதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலை கடமையாற்றினார். பின்னர் தான் பிறந்த கல்முனை மண்ணுக்கு சேவையாற்ற கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றி மீன்டும் பொறளை சிறுவர் வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார்.
பொறளை சிறுவர் வைத்தியசாலையில் கடமையாற்றிய டாக்டர் வை.எல்.எம்.யூசுப் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் சட்டப்படிப்பை முடித்து கொழும்பு சட்டக் கல்லூரி பரீட்சையில் சித்தியடைந்து சட்டத்தரணியாகவூம் நியமனம் பெற்றுள்ளார்.
கல்முனை அல்- பஹ்றியா மகாவித்தியலயத்தில் ஆரம்பக்கல்வியையூம் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் உயர் கல்வியையூம் பெற்ற இவர் கல்முனைக் குடியை சேர்ந்த யூனுஸ் லெவ்வை ஆசியா உம்மாவின் ஆறாவது புதல்வராவார்
Comments
Post a Comment