தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் திகதி வெள்ளிக்கிழமை அறிவிப்பு
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் திகதி அறிவிப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கான கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் பிரதித் தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோருக்கான கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறினார்.
Comments
Post a Comment