நாளை 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் பிரேரணை
2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் பிரேரணையை நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
பாராளுமன்றம் நாளை பிற்பகல் 3.00 மணிக்கு கூடும். அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட யோசனைகளைச் சமரப்பிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
வரவு செலவுத் திட்ட பிரேரணை மீதான விவாதம் நாளை முற்பகல் 9.30ற்கு பாராளுமன்றத்தில் ஆரம்பமாகிறது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 16ம் திகதி மாலை இடம்பெறும்.
Comments
Post a Comment