வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு முன்மொழிவு

இலங்கையை உயர் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக மாற்ற வேண்டுமாயின் உறுதியான ஜனநாயகத்தையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவது அவசியமென்பதை நிதி மற்றும் ஊடகத்துறை  அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

2018 ஆம்ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில்  சமர்ப்பித்து இவ்வாறு குறிப்பிட்ட அவர் . இதற்காக கடந்த கால போர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
கடலட்டைகளுக்கு சிறந்த கேள்விகள் உண்டு.   நெடுந்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் இரண்டு உணவு பதனிடும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. மயிலிட்டி துறைமுகம் மீன்பிடித் துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும். அச்சுவேலி கைத்தொழில் வலயத்தில் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கும் கம்பனிகளுக்கு சலுகை வழங்கி, அதன் பொதுவசதிகளை அபிவிருத்தி செய்யும் யோசனைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அச்சுவேலி தொழிற்பேட்டையில் மின்சார வசதிகளை மேற்கொள்வதற்கான செலவில் 50 சதவீதத்தினை அரசாங்கம் பொறுப்பேற்கின்றது
 
நெடுந்தீவு, கிளிநொச்சி பகுதிகளில் பிரதேசங்களில் பனை வளத்தை மேம்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்யும் வகையில் வரவுசெலவுத்திட்டத்தில் 40 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீனைக் களஞ்சியப்படுத்துவதற்கான குளிர்சாதன வசதிகளுக்கான இப்பகுதிகளில் 150 மில்லியன் ரூபா நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான வீடுவசதி இல்லை . 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம்  ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்த வீட்டுத்தேவையை பூர்த்திசெய்வதற்காக 3000 மில்லியன் ரூபா நிதி உதவி.
வடக்குக் கிழக்கில் செங்கல்மற்றும் ஓடகளைக் கொண்ட 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும். வடக்கிலுள்ள மாற்றத் திறனாளிப் பெண்களுக்காக விசேட நிலையம் ஸ்தாபிக்கப்படும். நுண்நிதி நிறுவனங்களின் கடன் சுமைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன்கருதி குறைந்த வட்டியிலான கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. 
யாழ்ப்பாணத்தில் நவீன பொருளாதார மையம் உருவாக்கப்படும். இதனுடன் கொழும்பையும், தம்புள்ள விசேட பொருளாதார நிலையத்தையும் இணைத்து பொருளாதார நிலைய முக்கோணம் ஸ்தாபிக்கப்பட உள்ளது.
 
 
சுயாதீன தொலைக்காட்சி சேவையின் வசந்தம் அலைவரிசையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
 
90களின் முற்பகுதியில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவதற்கு உதவிகள் வழங்கப்பட உள்ளன.
 
காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலக பணிகளுக்கு 1.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
 
 
இவர்களின் வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 250 கோடி ரூபா ஒதுக்கப்பட உள்ளது. காணாமல் போனவர்களுக்காக அலுவலகத்தின் நடவடிக்கைகள் அடுத்த வருடம் முழுமையாக முன்னெடுக்கப்படுமென அமைச்சர் மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்