கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மாணவர்களிடம் இருக்க வேண்டும் ஐந்து வேளைத் தொழுகை அனைவருக்கும் வழிகாட்டும்
அஷ்செய்க் எம்.ஐ.ஹூசைனுத்தீன்( றியாழி )
(மருதமுனை ஜெஸீல்)
கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மாணவர்களிடம் இருக்க வேண்டும் ஒழுக்கம் இல்லாத மாணவர்களை சமூகம் மதிக்காது.ஐந்து வேளைத் தொழுகையே அனைவரையும் நல்லவர்களாக மாற்றும் என மருதமுனை ஜம்மியத்துல் உலமா மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் அஷ்செய்க் எம்.ஐ.ஹூசைனுத்தீன் றியாழி தெரிவித்தார்.
மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவத் தலைவர்களுக்கான சின்னஞ் சூட்டும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் பி.எம்.எம்.பத்றுத்தீன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.எப்.எம்.மர்சூக் அதிதியாகக் கலந்து கொண்டார் இங்கு பிரதி அதிபர் ஏ.எம்.அன்சார்.பெண்கள் பிரிவு அதிபர் முகைதீன் முஸம்மில்.அதிபர் ஐ.உபைதுல்லா ஆகியோருடன் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிரேஷ்ட மாணவத் தலைவர்களான டபள்யூ. ரஸாத் அஹமட், எம்.அநோத் சனா ஆகியோருடன் ஐம்பது மாணவர்களுக்கு மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டி, அடையாள அட்டை, மற்றும் நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டன.
இங்கு அஷ்செய்க் எம்.ஐ.ஹூசைனுத்தீன் றியாழி மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :-இப்போது மாணவர்கள் மத்தியில் தொழுகை இல்லை இதனால் ஒழுக்கம் குறைந்து கொண்டு போகின்றது ஒழுக்கம் இல்லாத யாரையும் யாரும் மதிப்பதில்லை எனவே நாங்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக மாறவேண்டும்.
பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டு உங்களை படிப்பிக்கின்றார்கள், ஆசிரியர்கள் உங்களுக்குப் படித்துத் தருகின்றார்கள்.ஆனால் பெறுபேறுகள் வருகின்ற போது பலர் சித்தியடையாமல் விட்டு விடுகின்றார்கள் இதனால் பல மாணவர்கள் வாழ்க்கையில் பின்னடைவைச் சந்திக்க வேண்டிய நிலைவருகின்றது.
எனவே மாணவர்கள் கல்வியில் நல்ல அக்கறை காட்டி ஒழுக்கமுள்ள மாணவர்களாக வரவேண்டும் என பிரார்த்திற்கின்றேன். என்றார்.
Comments
Post a Comment