2017.11.21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்
அம்பாறை நிந்தவூர் வைத்தியசாலைகள் அபிவிருத்தி
18. வைத்தியசாலைகளில் கட்டுமானங்கள் மற்றும் அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் (விடய இல. 49)
சாதாரண கொள்முதல் முறையினை பின்பற்றும் போது ஏற்படுகின்ற கால தாமதத்தினால் வைத்தியசாலைகளின் கட்டுமானங்கள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எழுந்துள்ள கால தாமதத்தினை கவனத்திற் கொண்டு, அந்நிலைமையில் இருந்து மீள்வதற்காக அப்பணியினை அரச நிர்மாண நிறுவனமொன்றுக்கு ஒப்படைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இணங்க, கராபிட்டிய, அம்பாரை, நிந்தவூர் ஆகிய வைத்தியசாலைகளில் துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுமானப்பணிகளை பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகம் மற்றும் பொறியியல் சேவை தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கு வழங்குவதற்கும், ஹொரண அடிப்படை வைத்தியசாலையின் கட்டுமான பணிகளை இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Comments
Post a Comment