Posts

கல்முனை வலயக் கல்வி அலுவலக இப்தார்

Image
கல்முனை வலயக்  கல்வி  அலுவலகம்  ஏற்பாடு செய்த  நோன்பு திறக்கும் வைபவம்  இன்று  வலயக்  கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்  ஜலீல்  தலைமையில் இடம் பெற்றது . கல்வி அதிகாரிகள் ,அரசியல் பிரமுகர்கள் என  பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்

கல்முனை வலயக் கல்வி அலுவலக வருடாந்த இப்தார்

Image
கல்முனை வலயக்  கல்வி அலுவலக  வருடாந்த இப்தார்  வைபவம்  வலயக்  கல்வித் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல்  ஜலீல் தலைமையில்  திங்கட் கிழமை (04) நடை பெறவுள்ளது. கல்முனை கல்வி வலய  பிரதிக் கல்வித் பணிப்பாளர்கள் ,கணக்காளர் ,உதவிக்ககல்விப் பணிப்பாளர்கள் , ஆசிரிய ஆலோசகர்கள் அதிபர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் இணைந்து  இந்த  இப்தார்  நிகழ்வை நடாத்த உள்ளனர்   இப்தார் நிகழ்வில்  சுகாதார பிரதி அமைச்சர் எம்.சீ. பைசால் காசிம்.விளையாட்டு துறை  பிரதி அமைச்சர் எ.எம்.எம்.ஹரீஸ், கிழக்குமாகாண கல்வித் பணிப்பாளர்  எம்.ரீ.ஏ.நிஸாம்   உட்பட  அரசியல் பிரமுகர்களும், கல்வித் புலம் சார்ந்தவர்களும்  கலந்து கொள்ளவுள்ளனர் .

சாப்பாட்டில் பல்லி: 6 மாத சிறை; கடைக்கு சீல்

Image
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் உணவக மொன்றில் இறந்த நிலையில் இருந்த பல்லியுடன் கூடிய சாப்பாட்டுப் பொதியை விற்பனைச் செய்ததாகக் கூறப்படும் உணவக உரிமையாளருக்கு ஆறுமாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள உணவகமொன்றில் இறந்த நிலையில் இருந்த பல்லியுடன் கூடிய சாப்பாட்டுப் பொதியை விற்பனைச் செய்த உரிமையாளருக்கெதிராக நேற்று (29) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆரையம்பதி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.  இதன் போது குறித்த உணவகத்தின் உரிமையாளரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது உணவக உரிமையாளருக்கு ஆறுமாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்ததாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்த...

களுவாஞ்சிகுடியில் சிறுவன் மரணம் பெற்றோர் ஆர்ப்பாட்டம்

களுவாஞ்சி குடியில்  7 வயது சிறுவனின்  மரணம் குறித்து  பெற்றோரும் உறவினர்களும் ஆர்ப்பாட்டம்  செய்கின்றனர் . களுவாஞ்சி குடியை சேர்ந்த 7 வயதுடைய மேகநாதன் மோகவரன் என்ற சிறுவன்  கடந்த மே 12 ஆம் திகதி சுகமின்மை காரணமாக களுவாஞ்சி குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு  பின்னர்  சிகிச்சை பலனின்றி அங்கிருந்து மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலைக்கு  இடமாற்றப் பட்டு  அங்கும் சிகிச்சை  பலனளிக்காத நிலையில்  சிறுவன் 15 ஆம் திகதி மரணமடைந்தார் இவரது மரணத்துக்கு காரணம்  களுவாஞ்சி குடி வைத்தியசாலையில்  உரிய சிகிச்சை வழங்கப் படவில்லை  என தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம்  இன்று காலை 10.50 இல்  இருந்து  பட்டிருப்பு வலையாக கல்வி அலுவலகம்  முன்பாக இடம் பெறுகிறது. 

எதிர்கால தொழிற்சந்தைக்கு ஏற்ப மாணவர்களை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உண்டு

Image
நாட்டில்  உருவாக்கப்படவுள்ள எதிர்கால தொழிற்சந்தைக்கு ஏற்ப மாணவர்களை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உண்டு என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் தெரிவித்தார். பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட அல்-ஹிலால் வித்தியாலய பிரதான நுழைவாயில் கோபுர திறப்பு விழாவும் 2014, 2015ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் கல்லூரி மண்டபத்தில் அதிபர் எம்.எஸ்.எம். பைசால் அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பிரதி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், பாராட்டுகின்ற நிகழ்வு என்பது ஒரு கழியாட்ட நிகழ்வோ அல்லது ஒரு பொழுதுபோக்கு நிகழ்வோ அல்ல. இந்நிகழ்வு பாராட்டை பெறுகின்ற மாணவர்களுக்கு இன்னும் சாதிக்க  வேண்டும் என்ற உணர்வை கொடுப்பதோடு ஏனைய மாணவச் செல்வங்களையும் சாதனையாளர்களாக மாற...

ரூபவாஹினி வெளிச்சத்தில் இன்று மனோ ,ஹக்கீம் மோதல்

Image
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன  நேத்திரா அலைவரிசையில் ஒளிபரப்பாகும்   வெளிச்சம் நிகழ்ச்சியில்   இன்றய நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ரவூப் ஹக்கீம் ,ஜனநாயக முற்போக்கு முன்னணி தலைவர்  மனோ கணேசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்  இன்று இரவு  நேத்ரா அலைவரிசையில் 10.00 மணிக்கு  ஒளிபரப்பாகும் 

பேராசிரியர் மர்ஹும் ஏ.எல்.எம்.அப்துல் கபூர் அவர்களின் தனி நபர் நூல்சேகரிப்பு பகுதி அங்குரார்ப்பண நிகழ்வு

Image
( அப்துல் அஸீஸ்) கல்முனை கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி நிறுவகம் (எக்டோ ) ஏற்பாடு    செய்திருந்த பேராசிரியர் மர்ஹும்  ஏ.எல்.எம்.அப்துல் கபூர் அவர்களின்  தனி நபர்  நூல் சேகரிப்பு  பகுதி   அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை  எக் டோ நூலக மண்டபத்தில்   இடம்பெற்றது. கல்முனை கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் பொறியியலாளர் இஸட்.ஏ.எம்.அஸ்மிர் தலைமையில் இடம்பெற்ற இன்  நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரு ம் , ஓமான் சுல்தான் கபுஸ் பல்கலைக்கழக ஆலோசகருமான கலாநிதி ஏ.எம்.றஸ்மி பிரதம அதிதியாகவும் , தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.எச்.தௌபீக் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டதுடன், இதில் கல்வித்துறை அதிகாரிகள்   , வர்த்தக பிரமுகர்கள் ,சமூக  ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கல்முனை கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி நிறுவகத்திற்கு ஆலோசகராக இருந்து அதன் அபிவிருத்திக்கு பல வழிகளிலும் உதவி வந்த மர்ஹும்   பேராசிரியர் ...

சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி!கல்முனையில் கவனஈர்ப்பு பேரணி!!

Image
(யூ.எம்.இஸ்ஹாக் ) சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி வைப்பேம் எனும் தொனிப் பொருளில் சித்திரவதைக்கு எதிராக இன்று (30) வியாழக்கிழமை கல்முனையில்  கவனஈர்ப்பு பேரணியொன்று நடைபெற்றது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை  அலுவலகத்தின் ஏற்பாட்டில் அதன் அம்பாறை  மாவட்ட இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் தலைமையில்  இந்தப் பேரணி நடைபெற்றது. கடந்த காலங்களில் இடம் பெற்ற சித்திரவதைகள் மற்றும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான சித்திரவதைகள் இடம் பெறாமல் தடுப்பதுடன் அவர்களை சித்திரவதைகள் வன்முறைகளில் இருந்து பாதுகாக்குமாறு இந்த கவன ஈர்;ப்பு பேரணியின் போது வலியுறுத்தப்பட்டது. இந்தப் பேணியில் கலந்து கொண்டோர் சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி, இல்லத்து வன்முறையை இல்லா தொழிப்போம், வன்முறைகளில் மனித உயிர்களை பாதுகாப்போம், சித்திரவதைக்குள்ளானவர்களுக்கு என்றும் உதவுவோம், சித்திரவதை ஒவ்வொருவரையும் பாதிக்கும் என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் தாங்கியிருந்தனர்.  இப்பேரணியில் கல்முனை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி AWA .கப்பார்  உட்பட பொலிஸ்  அதிகாரி...

கோரிக்கையை செவிமடுக்காததால் அமைச்சர் தற்கொலை முயற்சி

Image
பிரதியமைச்சர் பாலித தெவரபெரும், தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  களுத்தறை மீகஹதென்ன பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குளறுபடிகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என அப்பாடசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர், பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார். குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தீர்வு வழங்காவிடின், தான் பதவி விலகப்போவதாக நேற்று (29) தெரிவித்திருந்த நிலையில், இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவருடைய கோரிக்கைகளுக்கு உரிய முறையில் பதில் கிடைக்காமையை அடுத்தே அவர் இவ்வாறு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தவறான புரிதல்களிலிருந்து முதலமைச்சர் விடுபட வேண்டும்

Image
கிழக்கு மாகாண அபிவிருத்திகளுக்கு முதலமைச்சருடன் இணைந்து ஒத்துழைக்க தயார் எனத் தெரிவித்துள்ள ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ முதலமைச்சர் உட்பட உறுப்பினர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக ஊடகங்கள் சிலவற்றில் கிழக்கு மா காண முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆளுநர் இதுபற்றி மேலும் தெரிவித்துள்ளதாவது: கடற்படை அதிகாரி ஒருவருடனான முரண்பாட்டின் பின்னர் இணையத் தளங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகிய விமர்சனங்களைக் காணும்போது பிரச்சினையை திசைதிருப்புவதற்காக முதலமைச்சர் இவ்வாறு செயற்பட்டுள்ளார் என எண்ணுகின்றேன். கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தி செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு நான் இணங்குகின்றேன். அவ்வாறான செயற்திட்டங்கள் பற்றி என்னிடம் உதவி கோரியபோது சுயமாக உதவி வழங்குவதற்கு எப்போதுமே முன்வந்துள்ளேன். மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணியின் சம்பூர் மீள்குடியேற்றம், விவசாய அமைச்சர் துரைராஜசிங்கத்திடம் புலம்பெயர்ந்த உறுப்பினர்கள் பிரேரித்த ...

மது கொடுத்து மாணவர் இருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்தவர் கைது சவளக்கடையில் சம்பவம்

Image
இரண்டு மாணவ சிறுவர்களுக்கு மதுபானம்  கொடுத்து அவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில்  துஸ்பிரயோகத்துக்கு ட்படுத்திய  40 வயதுடைய நபர் ஒருவர் கைது  சவளக்கடைப் பொலிஸாரினால் கைது செய்யப் பட்டு  மன்றில் ஆஜர் படுத்தப் பட்டுள்ளார். கைது செய்யப் பட்டவர்  நேற்று (27) கல்முனை நீதிவான் நீதி மன்றில் ஆஜர் படுத்தப் பட்டுள்ளார்  இவருக்கெதிராக  சவளக்கடைப் பொலிஸாரினால் சிறுவர் துஸ்பிரயோக வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது  நாவிதன்வெளி பிரதேசத்துக்குட்படட 15 கிராமம் விவேகானந்தா  வித்தியாலயத்தில்  கல்வி பயிலும் 15, 14 வயதுகளைக் கொண்ட  இரண்டு மாணவர்களை மத்திய முகாம் பிரதேசத்தை சேர்ந்த  40 வயதுடைய  நபர்  ஒருவர்  சவளக்கடை  பிரதேசத்துக்கு கடந்த சனிக்கிழமை (25) அழைத்து வந்து சவளக்கடை  கம்பிக்காலை என்னுமிடத்தில் உள்ள மதுபான சாலைக்கு அழைத்து சென்று  மூவருமாக  மது அருந்தி உள்ளனர் . சிறுவர்கள் இருவருக்கும்  போதை  அதிகரித்த நிலையில்  அதே இடத்தில் ...

கிழக்கு கல்வியலாளர்கள் பிலிப்பைன், தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பினார்

Image
உல­க­வங்­கியின் அனு­ச­ர­ணை­யுடன் கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து 30 உய­ர­தி­கா­ரிகள் கொண்ட கல்­வி­யி­ய­லாளர் குழு­வொன்று தாய்­லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ்  தாய்லாந்துக்கு   நாட்­டிற்கு இரு­வா­ர­கால விஜயம் மேற்­கொண்­டு  கல்வி திட்டங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்களில் கலந்து விட்டு நேற்று  நாடு திரும்பியுள்ளனர்   

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த இப்தார்

Image
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்  சம்மேளனத்தின்  வருடாந்த இப்தார்  வைபவம் சம்மேளனத்தின் தலைவர்  கலாபூசணம் மீரா இஸ்ஸதீன் தலைமையில்  மாளிகைக்காடு  பிஸ்மில்லா  ரெஸ்ரூரன்டில்  நேற்று சனிக்கிழமை நடை பெற்றது . நிகழ்வில் பிரதம அதிதியாக  திருகோணமலை  மாவடட நீதிபதி  அல்-ஹாபிஸ்  என்.எம்.அப்துல்லாஹ்  அவர்கள்  கலந்து சிறப்பித்தார் . கல்முனை பொலிஸ்  தலைமைக்கா ரியாலய பொறுப்பதிகாரி AWA .கபார் , சிறுவர் நன்னடத்தை அதிகாரி மௌலவி கமாலுத்தீன்,பரக்கத் உரிமையாளர் ஏ.எம்.பரீட் .மீரா ரைஸ்  உரிமையாளர்  ஜமால்தீன் உட்பட  சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் / முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தால்  அம்பாறை மாவட்ட  ஊடகவியலாளர் சம்மேளனத்துக்கு  வழங்கப் பட்ட  ஒரு தொகை பேரீத்தம்  பழம்  சம்மேளனத்தின் தலைவர்  மீரா இஸ்ஸதீன் ,பிரதி தலைவர்  ஏ.எல்.எம்.சலீம்  ஆகியோரிடம்  சம்மேளன செயலாளர்  எஸ்.எல்.அஸீஸ்  கையளித்தார் . அனைத்து சம்மேளன அங்கத்தவர்களுக...

தகவல் அறியும் சட்டமூலம் இன்று பாராளுமன்றில்!

Image
நாட்டின் நீண்ட கால எதிர்பார்ப்பாகவிருந்த தகவல் அறியும் சட்டமூலம் இன்று(23) பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டு வாசிக்கப்படவுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்ட மூலம் ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் ஊடகத்துறை பாராளுமன்ற விவகார அமைச்சருமான கயந்த கருணாதிலகவினால் முதலாவது வாசிப்புக்காக கடந்த மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வகையில் அமைச்சர் கயந்த கருணாதிலகவின் கருத்துப்படி இத் தகவல் அறியும் சட்டமூலம் நல்லாட்சிக்கு மிகவும் அவசியமானதொன்றாகும். இதன் மூலம் நல்லாட்சியினதும், நாட்டினது செயற்பாடுகளையும் மேலும் மேம்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தகவலைப் பெற இருக்கும் உரிமைக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவும் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவினை தாபிக்கவும் தகவலை பெறுவதற்கான நடவடிக்கைகளை வழங்கவும் அதனுடன் தொடர்புள்ள விடயங்களை மேற்கொள்ளவும் இந்த சட்ட மூலம் த...

ஏ.ஆர்எ.ம்/ஜிப்ரி நியமனத்துக்கு நட்பிட்டிமுனை அ.இ.ம. காங்கிரஸ் பாராட்டு

Image
பிரபல ஊடகவியலாளரும், அதிபருமாகிய ஏ.ஆர்.எம். ஜிப்ரி கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் குறித்து  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நட்பிட்டிமுனை  மத்திய குழு உறுப்பினர்களும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளரும் ,கல்முனை மாநகர சபை உறுப்பினருமான   சீ.எம்.முபீத் மற்றும்   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி இளைஞர்   அமைப்பாளர்  சீ.எம் ஹலீம் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன்.  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைமை எடுத்துள்ள தீர்க்கமான முடிவுக்கு  கட்சி தலைவரும் அமைச்சருமான  றிசாத் பதியுதீன் அவர்களுக்கும் கல்முனை தொகுதி மக்கள் சார்பிலும் குறிப்பாக நட்பிட்டிமுனை மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவிக்கின்றோம் என  கட்சியின் அமைப்பாளர்களான முபீத்,ஹலீம் ஆகியோர்   அறிவித்துள்ளனர் .

நிந்தவூரை சேர்ந்த நால்வருக்கு கல்முனை மேல் நீதி மன்றில் மரண தண்டனை

Image
(யூ.எம்.இஸ்ஹாக் ) கொலைக்குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிந்தவூரைச் சேர்ந்த நான்கு பேருக்கு கல்முனை மேல் நீதி மன்றத்தில் இன்று மரண தண்டனை தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. கல்முனை மேல் நீதி மன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் இந்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப் பட்டன. கடந்த 2009ஆம் ஆண்டு 06ஆம் மாதம் 18ஆம் திகதி நிந்தவூரில் வைத்து ஆதம்பாவா முகம்மது மஹ்மூத் எனப்படும் (சமுத்தீன் தண்டயல் )என்பவர் தலையில் பொல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் இவரது மரணத்துக்கு காரணமாயிருந்து கொலை செய்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்ட நிந்தவூரைச் சேர்ந்த முகம்மது சித்தீக் முகம்மது இப்றாகீம் ,அபுசாலி நௌசாத் ,முகம்மது தம்பி பைத்துல்லா , முகம்மது தம்பி றஸீட் ஆகிய நால்வருக்குமே மரண தண்டனை வழங்கப் பட்டுள்ளது.

கல்முனை நகரில் வாகன விபத்து அதிகரித்துள்ளது

Image
கல்முனை நகரில்  வாகன விபத்து அதிகரித்துள்ளது தினமும் விபத்துக்கள் அதிகரித்துள்ளமையினால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொது  அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில்  நேற்று கல்முனை நகரின் மத்தியில் இடம் பெற்ற விபத்தைக் காணலாம் தெய்வாதீனமாக  இழப்புக்கள் எதுவும் இடம் பெறவில்லை .இன்று கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்றும் விபத்துக்குள்ளாகி உள்ளது.

மருதமுனை ஜிஹானா அலிஃப் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக நியமனம்

Image
(யூ.எம்.இஸ்ஹாக்) மருதமுனையை சேர்ந்த  திருமதி பதுர்தீன் ஜிஹானா அலிஃப்  கல்முனை வலயக்  கல்வி அலுவலகத்தில்  முகாமைத்துவப் பிரிவுக்கான பிரதிக் கல்விப்  பணிப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார் . 2008.09.11 இல் ஆசிரியர் முதல் நியமனம் பெற்ற இவர்  சம்மாந்துறை தாருஸ்ஸலாம்  மகா வித்தியாலயத்தில்  ஆசிரியராக கடமை புரிந்தார் . 2013, 2014 இலங்கை  கல்வி நிருவாக சேவைக்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்ற இவர்  சம்மாந்துறை  வலையக்  கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான  பிரதிக் கல்வித் பணிப்பாளராக 2014.06.11 இல்  நியமிக்கப் பட்டார் . சம்மாந்துறை வலயக்  கல்வி அலுவலகத்தில்  இரண்டு ஆண்டுகள் கடமையாற்றிய இவர்  கடந்த 14.03.2016  தொடக்கம் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில்  இருந்து கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு  இடமாற்றப் பட்டு  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான  பிரதிக் கல்விப்  பணிப்பாளராக...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரான பஷிர் சேகுதாவுத் அரசியலிலிருந்து ஓய்வு

Image
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு கடந்த 27 வருடகாலமாக செயல்பட்டுவந்த பிரதிநிதித்துவ அரசியல் முறைமையில் இருந்து இன்று தொடக்கம் முழுவதுமாக விலகிக் கொள்ளும் எனது தீர்க்கமான தீர்மானத்தை இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் இவ்வறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றம், மாகாணசபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலிலும் இனிவரும் காலத்தில் ஒரு வேட்பாளராக பங்குபற்றப் போவதில்லை என்றும், எந்தவொரு கட்சியின் தேசியப்பட்டியலிலோ, அல்லது எதிர்காலத்தில் தேர்தல் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வரும் வேறு ஏதேனும் முறையிலோ பாராளுமன்றத்திற்கோ மாகாணசபைக்கோ மக்கள் பிரதிநிதியாக செல்லப்போவதில்லை என்பதையும் பகிரங்கமாக அறியத்தருகிறேன். 1981ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டுவரையான 13 வருடகாலம் ஈரோஸின் அங்கத்தவராக செயல்பட்டேன். 1994ஆம் ஆண்டு தொடக்கம் நிகழும் காலம்வரை 22 வருடங்கள் தொடர்ந்தேர்ச்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக உள்ளேன். மரணம் வரை இக்கட்சியின் அங்கத்தவராகவே இருக்கும் விருப்பையும் கொண்டுள்ளேன். 1989, 1994, 2000, 2001, 2004, 2010 ஆகிய ஆண...

கிழக்கு கல்வியலாளர்கள் குழு பிலிப்பைன்ஸில் இருந்து தாய்லாந்துக்கு பறந்தனர்

Image
( யூ.எம்.இஸ்ஹாக் ) உல­க­வங்­கியின் அனு­ச­ர­ணை­யுடன் கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து 30 உய­ர­தி­கா­ரிகள் கொண்ட கல்­வி­யி­ய­லாளர் குழு­வொன்று தாய்­லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்­டிற்கு இரு­வா­ர­கால விஜயம் மேற்­கொண்­டு­கடந்த  சனிக்­கி­ழமை இரவு பய­ண­மா­னது. முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்று  கல்வி திட்டங்கள் தொடர்பாக விரிவான    கலந்துரையாடல்களில்  கலந்து விட்டு  நேற்று தாய்லாந்துக்கு  சென்றுள்ளனர் .  பாட­சா­லை­ முகா­மைத்­துவம் மற்றும் பாட­சா­லை­ ஆசி­ரியர் அபி­வி­ருத்தி தொடர்­பாக இக்­கு­ழு­வினர் அந்­நாட்­டி­லி­ருக்­கக்­கூ­டிய நல்ல அம்­சங்­களை நேர­டி­யாக கண்டு அறி­ய­வுள்­ளனர். இவ்­வம்­சங்­களை கிழக்கில் அறி­மு­கப்­ப­டுத்தி கல்­வி­அ­பி­வி­ருத்­தியை மேற்­கொள்­வது இவ்­வி­ஜ­யத்தின் நோக்­க­மா­க­வுள்­ளது.  தற்போது பென்கோக்  நகரில் உள்ள அம்பாஸிடோர் ஹோட்டலில் தங்கி இருந்து  கலந்துரையாடல் மற்றும் பயிற்சிகளில்  கலந்து கொள்கின்றனர்  கடந்த 12ஆம் திகதி ஆரம்­ப­மான இவர்­க­ளது வெளி­நாட்டு பயணம் 26ஆம் திகதி நிறை­வ­டைந்து நா...