மது கொடுத்து மாணவர் இருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்தவர் கைது சவளக்கடையில் சம்பவம்
இரண்டு மாணவ சிறுவர்களுக்கு மதுபானம் கொடுத்து அவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் துஸ்பிரயோகத்துக்கு ட்படுத்திய 40 வயதுடைய நபர் ஒருவர் கைது சவளக்கடைப் பொலிஸாரினால் கைது செய்யப் பட்டு மன்றில் ஆஜர் படுத்தப் பட்டுள்ளார்.
கைது செய்யப் பட்டவர் நேற்று (27) கல்முனை நீதிவான் நீதி மன்றில் ஆஜர் படுத்தப் பட்டுள்ளார் இவருக்கெதிராக சவளக்கடைப் பொலிஸாரினால் சிறுவர் துஸ்பிரயோக வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது நாவிதன்வெளி பிரதேசத்துக்குட்படட 15 கிராமம் விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 15, 14 வயதுகளைக் கொண்ட இரண்டு மாணவர்களை மத்திய முகாம் பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் சவளக்கடை பிரதேசத்துக்கு கடந்த சனிக்கிழமை (25) அழைத்து வந்து சவளக்கடை கம்பிக்காலை என்னுமிடத்தில் உள்ள மதுபான சாலைக்கு அழைத்து சென்று மூவருமாக மது அருந்தி உள்ளனர் . சிறுவர்கள் இருவருக்கும் போதை அதிகரித்த நிலையில் அதே இடத்தில் இருவரையும் துஸ்பிரயோகத்துக்குட் படுத்தியுள்ளார் .
துஸ்பிரயோகத்துக்குட்பட்ட மாணவ சிறுவர்கள் இருவரும் களைப்படைந்தவாறு போதையுடன் வீட்டுக்கு சென்றதை அவதானித்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை விசாரித்த போது தெரியாத ஒருவர் பலவந்தமாக மதுபானம் பருக்கியதாகவும் எங்களை துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியதா கவும் எங்களுக்கு எதுவும் புரியவில்லை எனவும் தெரிவித்தனர் . இதனை அறிந்த மாணவர்களின் பெற்றோர் சனிக்கிழமை இரவு சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் .
அந்த முறைப்பாடுடையடுத்து ஞாயிற்றுக் கிழமை (26) மாணவர்களால் இனங் காட்டப் பட்ட குறித்த நபர் மதியமுகாம் பிரதேசத்தில் வைத்து சவளக்கடை கைது செய்யப் பட்டு நேற்று நீதி மன்றில் ஆஜர் செய்யப் பட்டுள்ளனர்.
Comments
Post a Comment