அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த இப்தார்
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த இப்தார் வைபவம் சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம் மீரா இஸ்ஸதீன் தலைமையில் மாளிகைக்காடு பிஸ்மில்லா ரெஸ்ரூரன்டில் நேற்று சனிக்கிழமை நடை பெற்றது .
நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவடட நீதிபதி அல்-ஹாபிஸ் என்.எம்.அப்துல்லாஹ் அவர்கள் கலந்து சிறப்பித்தார் .
கல்முனை பொலிஸ் தலைமைக்கா ரியாலய பொறுப்பதிகாரி AWA .கபார் , சிறுவர் நன்னடத்தை அதிகாரி மௌலவி கமாலுத்தீன்,பரக்கத் உரிமையாளர் ஏ.எம்.பரீட் .மீரா ரைஸ் உரிமையாளர் ஜமால்தீன் உட்பட சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் /
முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தால் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்துக்கு வழங்கப் பட்ட ஒரு தொகை பேரீத்தம் பழம் சம்மேளனத்தின் தலைவர் மீரா இஸ்ஸதீன் ,பிரதி தலைவர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோரிடம் சம்மேளன செயலாளர் எஸ்.எல்.அஸீஸ் கையளித்தார் . அனைத்து சம்மேளன அங்கத்தவர்களுக்கும் வழங்கப் பட் டன .
Comments
Post a Comment