மருதமுனை ஜிஹானா அலிஃப் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக நியமனம்
(யூ.எம்.இஸ்ஹாக்)
மருதமுனையை சேர்ந்த திருமதி பதுர்தீன் ஜிஹானா அலிஃப் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவப் பிரிவுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார் .
2008.09.11 இல் ஆசிரியர் முதல் நியமனம் பெற்ற இவர் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை புரிந்தார் . 2013, 2014 இலங்கை கல்வி நிருவாக சேவைக்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்ற இவர் சம்மாந்துறை வலையக் கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்வித் பணிப்பாளராக 2014.06.11 இல் நியமிக்கப் பட்டார் . சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகள் கடமையாற்றிய இவர் கடந்த 14.03.2016 தொடக்கம் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் இருந்து கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு இடமாற்றப் பட்டு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்,அப்துல் ஜலீல் நியமித்துள்ளார் .
மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியில் ஆரம்பம் முதல் உயர்தரம் வரை கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment