கிழக்கு கல்வியலாளர்கள் குழு பிலிப்பைன்ஸில் இருந்து தாய்லாந்துக்கு பறந்தனர்

( யூ.எம்.இஸ்ஹாக் )
உல­க­வங்­கியின் அனு­ச­ர­ணை­யுடன் கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து 30 உய­ர­தி­கா­ரிகள் கொண்ட கல்­வி­யி­ய­லாளர் குழு­வொன்று தாய்­லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்­டிற்கு இரு­வா­ர­கால விஜயம் மேற்­கொண்­டு­கடந்த  சனிக்­கி­ழமை இரவு பய­ண­மா­னது.
முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்று  கல்வி திட்டங்கள் தொடர்பாக விரிவான    கலந்துரையாடல்களில்  கலந்து விட்டு  நேற்று தாய்லாந்துக்கு  சென்றுள்ளனர் . 
பாட­சா­லை­ முகா­மைத்­துவம் மற்றும் பாட­சா­லை­ ஆசி­ரியர் அபி­வி­ருத்தி தொடர்­பாக இக்­கு­ழு­வினர் அந்­நாட்­டி­லி­ருக்­கக்­கூ­டிய நல்ல அம்­சங்­களை நேர­டி­யாக கண்டு அறி­ய­வுள்­ளனர். இவ்­வம்­சங்­களை கிழக்கில் அறி­மு­கப்­ப­டுத்தி கல்­வி­அ­பி­வி­ருத்­தியை மேற்­கொள்­வது இவ்­வி­ஜ­யத்தின் நோக்­க­மா­க­வுள்­ளது. 
தற்போது பென்கோக்  நகரில் உள்ள அம்பாஸிடோர் ஹோட்டலில் தங்கி இருந்து  கலந்துரையாடல் மற்றும் பயிற்சிகளில்  கலந்து கொள்கின்றனர் 
கடந்த 12ஆம் திகதி ஆரம்­ப­மான இவர்­க­ளது வெளி­நாட்டு பயணம் 26ஆம் திகதி நிறை­வ­டைந்து நாடு திரும்பவுள்ளனர்  







Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது