Posts

இலங்கையிலிருந்து ஹஜ் பயணம் செல்வோர் பட்டியலை ரத்து செய்தது உயர் நீதிமன்று

Image
இலங்கையிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்வோர்களை முடிவு செய்யும் பட்டியலை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  அந்தப் பயணத்துக்கு செல்லவுள்ள பயணிகளின் எண்ணிக்கையைப் பயண முகவர்களிடையே பகிர்ந்தளித்து, அரசாங்கத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலேயே  இலங்கை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டது.  ஹஜ் புனிதப் பயணத்துக்கு யாத்திரிகர்களை அனுப்பும் பயண முகவர்கள், அதற்கான நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே, அந்த எண்ணிக்கை பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென, முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த ஹஜ்ஜுக்கு  செல்லவுள்ள பயணிகளின் எண்ணிக்கையைப் பகிர்ந்தளிக்கும் போது, முறைகேடுகள் நடைபெற்றன என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்த காரணத்தினாலேயே, வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது.  உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அமைய, புதிதாக தயாரிக்கப்படும் பயணிகளின் பட்டியல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்பாக நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் பணித்துள்ளது. இதேவேளை, இந்த உத்தரவு காரணமாக பயணம் மேற்கொள்ளவுள்ளவ...

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக வருடாந்த இப்தார்

Image
(ஐ.எல்.எம்.றிஸான்) அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த வருடாந்த நோன்பு துறக்கும் இப்தார்  வைபவத்தில் மூவின மக்கள் கலந்து சிறப்பித்தனர் இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர்மௌலவி யூ. எம். நியாஸி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ. எல். எம். காசிம் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ஏ. எஸ். அஹமட் கியாஸ், ஏ. எம்.றஹ்மத்துல்லா, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  கே. கே. ஏ. கே. பண்டார  உட்பட உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், அதிபர்கள், மற்றும் பிரதேச முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

கல்முனை சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் இப்தார் நிகழ்வு

Image
கல்முனை சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் வருடாந்த இப்தார் நிகழ்வும் ரமலான் ஓன்று கூடலும் வெள்ளவத்தை மெரைன் ரைவ் ஹோட்டலில் கொழும்புக் கிளையின் தலைவர் டாக்டர் சனுஸ் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின்போது கல்லூரியின் முன்னேற்றம் அங்கு மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகள் பற்றி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட விரிவுரையாளர் அஸ்லம் சஜா விளக்க உரை நிகழ்த்தினார். மற்றும் கல்லூரியின் முதல் பொறியலாளர் பொறியியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்றவருமான யூ.பாருக் அவர்கள் விசேட உரையாற்றினார்கள். அத்துடன் மௌவி முபாரக் அப்துல் மஜீத் நோன்பு பற்றிய உரையையும் துஆப் பிராத்தனையையும் நிகழ்த்தினார். கொழும்பில் தொழில் நிமித்தம் பல்வேறு துறைகளில்  600 பழைய மாணவர்கள் கொழும்பில் வாழ்ந்து வருகின்றனர் அவர்களுள் 300 பேர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். அத்துடன் கல்லூரியின் முன்னாள் அதிபர்களான எஸ்.எச்.எம் ஜெமீல், கே.எல். அபுபக்கர் லெப்பை மற்றும் ஓய்வுபெற்ற கல்வியதிகாரி மருதூர் ஏ மஜீத் மற்றும் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், சட்டத்தரணிகள...

உரிமை கோராத பிரசுரத்துக்கு விளக்கம்-காணிப்பதிவாளர் – எம். ஏ. ஜமால் முஹம்மத்

Image
 பிச்சை  எடுத்து பிழைப்பு நடத்தும் காணிக் கந்தோரும்,ஊரார் கோழியை அறுத்து உம்மாபேரில் கத்தம் ஓத அழைப்பு விடுக்கும் காணிப்பதிவாளரும் என்ற தலைப்புடன் உரிமை கோராத துண்டுப் பிரசுரம் ஒன்று  எமது இனணய தளத்துக்கு  இன்று அனுப்பி வைக்கப்பட்டது . இது தொடர்பாக கல்முனை காணிப்பதிவாளரும் மேலதிக மாவட்டப் பதிவாளருமான எம். ஏ. ஜமால் முஹம்மதிடம்  கேட்ட போது எமது  இணையத்துக்கு கருத்து  தெரிவிக்கையில்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் . அன்பிற்கும், மதிப்பிற்கும் ,மரியாதைக்குமுரிய பெரியவர் களே,கல்விமான்களே, நண்பர் களே உங்கள் அனைவருக்கும் அன்பின் பணிவு  அஸ்ஸலாமு அலைக்கும்/ வணக்கம். கல்முனை காணிப்பதிவாளரும் மேலதிக மாவட்டப் பதிவாளருமான என்னைப் பற்றியு யும், எனது அலுவலகம் பற்றியும் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரால் எமது அலுவலகத்தில் நாளை நடைபெறவிருக்கும் இப்தார்  தொடர் பில் ஓர்  அநாமதேய துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இதை சிலர்  பார் த்திருப்பீர் கள்/ பலர்  பாராமலும் இருப்பீர் கள் துண்டுப் பிரசுரத்தின் பின்னணி பற்றியும் வெளியிட்ட அநாமதய நப...

கல்முனை இஸ்லாமிய சமுக சங்கத்தின் இப்தார்

Image
கல்முனை இஸ்லாமிய சமுக சங்கத்தின் இப்தார் நிகழ்வு நேற்று  சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம்.பதுர்தீன் தலைமையில்  கல்முனைக்குடி அஸ்சுஹரா  வித்தியாலயத்தில்  இடம்பெற்றது . கிழக்கு மாகாண  சபை   உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் உட்பட  அதிதிகள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர் . சங்கத்தின்  தேவைக்காக தளர்பாடக் கொள்வனவுக்கு  மாகாண  சபை உறுப்பினர்  ஆரிப் சம்சுதீன் 70,000 ரூபா நிதி வழங்கியுள்ளார் .

கல்முனை பிர்லியன்ட் விளையாட்டு கழகத்தின் 10வது ஆண்டு இப்தார் நிகழ்வு

Image
கல்முனை பிர்லியன்ட் விளையாட்டு கழகத்தின் 10வது ஆண்டு இப்தார் நிகழ்வு    கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.   நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், மாநகர சபை உறுப்பினர் உமர் அலி,   அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகா் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபில்யு.ஏ.கப்பார், கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், கழக பிரதிநிதிகள் விளையாட்டு வீரர்கள், பள்ளிவாசல் பிரதிநிதிகள் என பெருந்  திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர். இவ்வைபவத்தில் மௌலவி யூ.எல்.அம்சத் அலி விசேட மார்க்க சொற்பொழிவாற்றினார். 

கல்முனை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த இப்தார்

Image
கல்முனை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த இப்தார் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .ஏ .கப்பார் தலைமையில் எதிர்வரும்  வியாழக்கிழமை (24) நடை பெறவுள்ளது.  இந்நிகழ்வில் பொலிஸ்  உயர் அதிகாரிகள் அடங்கலாக சமயப் பெரியார்கள் ,அரச உயர் அதிகாரிகள்   பலர் கலந்து கொள்ளவுள்ளனர்

கல்முனைக்குடியில் ஆட்டோ எரிந்து நாசம்

Image
  கல்முனை  பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட கல்முனை குடி சாஹிபு வீதியில்  உள்ள வீடொன்றில் இன்று  திங்கட் கிழமை அதிகாலை 2.15 மணிக்கு வீட்டில் தீ பிடித்த சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது . இதன் போது  QA -0317 இலக்க  முச்சக்கர வண்டியொன்றும், 03 துவிச்சக்கர வண்டிகளும் எரிந்து நாசமாகியுள்ளன . வீட்டில் உள்ளவர்கள்  ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேரமே இந்த சம்பவம் இடம் பெற்றிருக்கிறது. கணவர் வெளிநாட்டில் தொழில் புரிபவர் என்றும்  தனது மகன் முச்சக்கரவண்டி ஓட்டுபவர் என்றும் உதுமாலெப்பை சபீனா என்பவர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் .  சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிசார் விசாரணை செய்கின்றனர் 

கல்முனை மாநகர சபை கூரை விழும் நிலையில்

Image
கல்முனை மாநகர சபை கூரை  விழும் நிலையில் காணப்படுகின்றது. பொறியியலாளர் பிரிவு, தொழிலாளர் பிரிவு என்று பொறியியலாளரும்,தொழில் நுட்ப அதிகாரிகளும் நிறைந்து காணப்படுகின்ற நிலையில்  மாநகர சபை கட்டிடத்தின் ஓட்டை விழுந்த கூரைக்கு படங்கு விரித்து பாதுகாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . கல்முனை மாநகர சபை கட்டிடம் கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பரினால்  1955 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடமாகும் . அதன் பின்னால் வந்த எந்தவொரு அரசியல் வாதியும்  இன்று வரை ஒரு சிறு கல்லைத்தானும் அக்கட்டிடத்தில் இணைக்கவில்லை . உறுதியான கட்டிடம் அதனால் இன்றுவரை ஆள்பவர்கள் அந்த கட்டிடத்தைத்தான் பயன்படுத்துகின்றார்கள் . மாநகர சபையை ஆட்சி செய்தவர்கள் எவரும்  இந்த கட்டிடம் காலாவதியானதைப் பற்றி கவலைப் படவில்லை .

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விசேட இப்தார்

Image
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விசேட இப்தார் நிகழ்வும் ஒன்று கூடலும் 20.07.2014ஆம் திகதி அக்கரைப்பற்று ஏசியன் சிப் ஹோ ட்டலில் இடம்பெற்றது அம்பாறை மாட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.எம்.தவம், கு.இனிய பாரதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான எம்.ஐ.எம்.நௌசாத், அட்டாளைசசேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.எம்.முனாஸ், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபிஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.காசிம் உட்பட மும்மதத்தலைவர்கள், ஊடகவியலாளர்கள்,வர்த்தகர்கள், கவிஞர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள் கலந்து கொண்டனர்.

நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் உம்ரா கடமைக்காக புறப்பட்டுச் சென்றார்.

Image
பொத்துவில் அட்டாளைச்சேனை பிரதேசங்களுக்குச் சென்று கொழும்பு வந்த பின் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் நேற்று இரவு புனித  மக்காவுக்கு  உம்ரா கடமைக்காக புறப்பட்டுச் சென்றார்.

போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அலுவலகம் கல்முனையில் திறப்பு!

Image
கல்முனை பொலிஸின் போக்குவரத்துப் பிரிவுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலகக் கட்டடம் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.  கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எச்.எம்.மகாகெதர பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார் , இதேவேளை இன்று பொலிஸ் நிலைய வருடாந்த சோதனையும் நடைபெற்றதுடன் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .ஏ.கப்பார் தலைமையில் பொலிஸ் அணிவகுப்பும் இடம் பெற்றது. 

நான் வெளியேற்ற முன்னர் வெளியேறலாம் : அமைச்சர் ஹக்கீமுக்கு ஜனாதிபதி

Image
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் நவீன் ஆகியோரை நோக்கி நான்  வெளியேற்ற முன்னர் எம்முடன் உடன்படாதவர்கள் வெளியேறலாம் என  ஜனாதிபதி  தெரிவித்துள்ளார் .கடந்த  அமைச்சரவை கூடத்தின் போது  பொது தீர்மாங்களுக்கு உடன்படாதவர்கள்   அரசாங்கத்தை விட்டு வெளியேறிச்  செல்லுமாறு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பொது முகாமைத்துவ அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக சிங்கள ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன . காலை இழுப்போரும், சர்வதேச சமூகத்திடம் கோள் சொல்பவர்களும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் பதவி விலக்குவதற்கு முன்னதாக தாங்களாகவே பதவிகளை ராஜினாமா செய்து கொள்ள முடியும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .அத்துடன் அண்மையில் பெளத்த தீவிரவாத அமைப்பான  பொது பல சேனா அமைச்சர் ஹகீம்மை அரசாங்கத்தில் இருந்து உடனடி...

கல்முனையில் இலவசக்கல்விச் சேவை வழங்கி வரும் எபிக் அமைப்பின் வருடாந்த இப்தார்

Image
( எஸ்.எம்.எம்.றம்ஸகன் ) கல்முனையில் மாணவர்களுக்கு இலவசக்கல்விச் சேவையை வழங்கி வரும் எபிக் அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வு  அதன் தலைவர் எம்.எம்.சிறாஜி தலைமையில் எபிக் வளாகத்தில் இடம் பெற்றது. ஒவ்வெரு வருடமும் இக் கல்வி நிலையத்தில் கற்பித்து தமது இளம் வயதில் வபாத்தாகிய மர்ஹும் எச்.எல்.எம்.தன்ஸீல் மற்றும் ஏ.எம்.சாதிக் ஆகியோரின் நினைவாக வருடாந்தம் இவ் இப்தார் நிகழ்வுடன் விஷேட துஆ பிரர்த்தனையும் இடம் பெற்று வருகிறது.

தேசிய சமாதானப்பேரவையின் அம்பாரை மாவட்ட சர்வ சமய குழுவின் இப்தார்

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர் தேசிய சமாதானப்பேரவையின் அம்பாரை மாவட்ட சர்வ சமய குழுவின் கூட்டமும் இப்தார் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. அட்டாளைச்சேனை த்ரு விஷன்அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்தேசிய சமாதானப்பேரவையின் செயற்தி்ட்ட அதிகாரி சமன் கருனாரட்ன அட்டாளைச்சேனை த்ரு விஷன்அமைப்பின் தலைவர் சட்டத்தரனி உவைஸ் அப்துல் காதர் உட்பட சர்வமதத்தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ரமழான் சிறப்பு

Image
ரமழான் சிறப்பு ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் : ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183 (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184 நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை...