உரிமை கோராத பிரசுரத்துக்கு விளக்கம்-காணிப்பதிவாளர் – எம். ஏ. ஜமால் முஹம்மத்

 பிச்சை  எடுத்து பிழைப்பு நடத்தும் காணிக் கந்தோரும்,ஊரார் கோழியை அறுத்து உம்மாபேரில் கத்தம் ஓத அழைப்பு விடுக்கும் காணிப்பதிவாளரும் என்ற தலைப்புடன் உரிமை கோராத துண்டுப் பிரசுரம் ஒன்று  எமது இனணய தளத்துக்கு  இன்று அனுப்பி வைக்கப்பட்டது . இது தொடர்பாக கல்முனை காணிப்பதிவாளரும் மேலதிக மாவட்டப் பதிவாளருமான எம். ஏ. ஜமால் முஹம்மதிடம்  கேட்ட போது எமது  இணையத்துக்கு கருத்து  தெரிவிக்கையில்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .


அன்பிற்கும், மதிப்பிற்கும் ,மரியாதைக்குமுரிய பெரியவர் களே,கல்விமான்களே, நண்பர் களே உங்கள் அனைவருக்கும் அன்பின் பணிவு  அஸ்ஸலாமு அலைக்கும்/ வணக்கம்.

கல்முனை காணிப்பதிவாளரும் மேலதிக மாவட்டப் பதிவாளருமான என்னைப் பற்றியு யும், எனது அலுவலகம் பற்றியும் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரால் எமது அலுவலகத்தில் நாளை நடைபெறவிருக்கும் இப்தார்  தொடர் பில் ஓர்  அநாமதேய துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இதை சிலர்  பார் த்திருப்பீர் கள்/ பலர்  பாராமலும் இருப்பீர் கள்

துண்டுப் பிரசுரத்தின் பின்னணி பற்றியும் வெளியிட்ட அநாமதய நபர்கள் பற்றியும் அறியத்தருவது அவசியம் எனக் கருதுகின்றேன்.

2007ம் ஆண்டு ஜுலை 05ம் நாள் கல்முனை காணி மாவட்டப் பதிவாளராக நான் நியமிக்கப்பட்டேன். அவ்வேளை காணி மாவட்டப் பதிவக நடைமுறைகள் எவ்வாறிருந்தது என்பதை நான் சொல்வதை விட இவ்வலுவலகத்துடன் தொடர்புபட்ட பிரசித்த நொத்தாரிசுமார்களுக்கும், சட்டத்தரணிகளுக்கும், பொது மக்களுக்கும் நன்கு தெரியும்.

பதிவுகள் உரிய முறையில் பேணப்படாமலும் ஆவணங்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படாமலும் சீரற்ற அல்லது ஒழுங்கீனமான நடைமுறையே காணப்பட்டது.

பிரதி மாதமும் எழுதப்படும் உறுதிகளுக்கான முத்திரைக் கட்டணங்களை வங்கி மூலம் செலுத்தி அடுத்த மாதம் 15ஆம் திகதிக்குள் எமது அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது விதியாகும். தவறுபவர் கள் பதிவாளர் நாயகத்தின் அனுமதிப்படி தண்டப்பணம் செலுத்த வேண்டும். தேவையேற்படின் நீதிமன்றத்தின் மூலமும் வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கையும் மெற்கொள்ளப்படும்.

காணிப்பதிவாளர்  என்ற ரீதியில் இவ்வாறான ஒழுங்கு நியதிகளையும், நொத்தாரிசு சட்ட பிரமாணங்களையும் மேற்கொள்வது என்மேல் காழ்ப்புணர் ச்சி கொண்ட ஒரு சிலருக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாகக் கருதி கோபம் கொள்கின்றனர்.

காணிப் புத்தகங்களையும், காணி உறுதிப் பிரதிகளையும்  அலுவலகத்தில் தேடுதல் செய்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் இதை செலுத்தாமல் சிலர்  பார்வையிடுவதற்கு  நான் அனுமதிப்பதில்லை.

என்னைப்பற்றி உண்மைக்கு புறம்பான பல முறைப்பாடுகளை எமது தலைமைக் காரியாலயத்திற்கு தெரியப்படுத்தியும் அது கைகூடாத நிலையில் என்னை எப்படியாவது இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற நிலையில் ஒரு சில சட்டத்தரணிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள்.

எமது அலுவலகத்தில் பிரசித்த நொத்தாரிசுமார்கள், சட்டத்தரணி நொத்தாரிசுகள் என 94 பேர்  இணைக்கப்பட்டுள்ளனர் . இவர்களுள் பெருவாரியானவர்கள் எமது நிர்வாக நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு நல்கி வருகின்றார்கள்.

2010ம் வருடத்திலிருந்து எமது அலுவலகத்தில் விருப்புடன் இப்தார் நிகழ்வினை பிரசித்த நொத்தாரிசுமார்களினதும் சட்டத்தரணிகளினதும் பரிபூரண ஆதரவூடன் நாம் நடாத்தி வருகின்றோம்.

சட்டத்தரணி, பிரசித்த நொத்தாரிசுமார்களின் பங்களிப்புடன் அவர்களின் பூரண விருப்பத்துடனும் பங்களிப்புடனும் நடாத்தப்படும் இப்தார் வைபவங்களில் எவ்வித ஹறாமும் கலக்கப்படவில்லை. பங்களிப்பினை வழங்குவதை நாம் கட்டாயப்படுத்தவு மில்லை. மனமுவந்நே பங்களிப்பினை வழங்குகின்றனர் பங்குபற்றவூம் செய்கின்றனர்

இப்தார் நிகழ்வூக்கு சகோதர வாஞ்சையூடன் சகோதர சமூகத்தை சேர்ந்தவர்களையூம் நண்பர்களையூம் நலன் விரும்பிகளையூம் அழைப்பது பொதுவான நடைமுறையாகும். இதில் இனபேதம், பிரதேசவாதம் பார்ப்பது இதுபோன்ற அநாமதேய துண்டுப்பிரசுரங்களை வெளியிடும் விசமிகளே அன்றி நாமல்ல.

நல்லதைச் செய் நல்லதை செய்யவிடு என்ற தொனிப்பொருளினைக் கொண்டு இயங்கும் மருதமுனை கோல்ட்மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகர்  என்ற வகையில் கழகத்திலிருந்து ஊழல் செய்தவர்களை வெளியேற்றியதால் அவர்கள் என்மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டு செயற்பட்டு வருவதை நான் ஆழமாக அறிந்து வைத்திருக்கின்றேன்.

காணிப்பதிவாளருக்கோ அலுவலக உத்தியோகத்தர்களுக்கோ ஊரார் கோழியை அறுத்து உம்மாபேரில் கத்தம் ஓதவேண்டிய எவ்வித அவசியமில்லை. காணிப்பதிவகமும் என்பது பணப் புழுக்கத்துடன் முத்திரை வரி அறவீடு மூலம் உள்ளனர்  அதிகார சபைகளின் மக்கள் பணிகளுக்கு வலுவூட்டும் நிறுவனமாகும். இங்கு பிச்சை வாங்கி பிழைப்பு நடாத்த எவ்வித அவசியமும் இல்லை என்பதை அநாமதேய சக்திகளும் பொதுமக்களும் புரிந்து கொள்ளட்டும்.

எம். ஏ. ஜமால் முஹம்மத்
(முஸத்திக் j  முஹம்மத்)
காணிப்பதிவாளர் – கல்முனை.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்