கல்முனைக்குடியில் ஆட்டோ எரிந்து நாசம்

 கல்முனை  பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட கல்முனை குடி சாஹிபு வீதியில்  உள்ள வீடொன்றில் இன்று  திங்கட் கிழமை அதிகாலை 2.15 மணிக்கு வீட்டில் தீ பிடித்த சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது . இதன் போது  QA -0317 இலக்க  முச்சக்கர வண்டியொன்றும், 03 துவிச்சக்கர வண்டிகளும் எரிந்து நாசமாகியுள்ளன .

வீட்டில் உள்ளவர்கள்  ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேரமே இந்த சம்பவம் இடம் பெற்றிருக்கிறது. கணவர் வெளிநாட்டில் தொழில் புரிபவர் என்றும்  தனது மகன் முச்சக்கரவண்டி ஓட்டுபவர் என்றும் உதுமாலெப்பை சபீனா என்பவர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் . 




சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிசார் விசாரணை செய்கின்றனர் 

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு