கல்முனை சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் இப்தார் நிகழ்வு
கல்முனை சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் வருடாந்த இப்தார் நிகழ்வும் ரமலான் ஓன்று கூடலும் வெள்ளவத்தை மெரைன் ரைவ் ஹோட்டலில் கொழும்புக் கிளையின் தலைவர் டாக்டர் சனுஸ் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின்போது கல்லூரியின் முன்னேற்றம் அங்கு மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகள் பற்றி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட விரிவுரையாளர் அஸ்லம் சஜா விளக்க உரை நிகழ்த்தினார்.
மற்றும் கல்லூரியின் முதல் பொறியலாளர் பொறியியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்றவருமான யூ.பாருக் அவர்கள் விசேட உரையாற்றினார்கள். அத்துடன் மௌவி முபாரக் அப்துல் மஜீத் நோன்பு பற்றிய உரையையும் துஆப் பிராத்தனையையும் நிகழ்த்தினார்.
கொழும்பில் தொழில் நிமித்தம் பல்வேறு துறைகளில் 600 பழைய மாணவர்கள் கொழும்பில் வாழ்ந்து வருகின்றனர் அவர்களுள் 300 பேர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். அத்துடன் கல்லூரியின் முன்னாள் அதிபர்களான எஸ்.எச்.எம் ஜெமீல், கே.எல். அபுபக்கர் லெப்பை மற்றும் ஓய்வுபெற்ற கல்வியதிகாரி மருதூர் ஏ மஜீத் மற்றும் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், சட்டத்தரணிகள், தணியார் கம்பணிகளின் தலைவர்கள் என பலர் இந் நிகழ்விகள் கலந்து கொண்டணர்.
இங்கு கல்முனை சாஹிராக் கல்லூரியின் தற்போதைய நிலையில் கொழும்பில் உள்ள பழைய மாணவர்கள் எவ்வாறு தமது கல்லூரிக்கு உதவுவது என ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
Comments
Post a Comment