நான் வெளியேற்ற முன்னர் வெளியேறலாம் : அமைச்சர் ஹக்கீமுக்கு ஜனாதிபதி
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் நவீன் ஆகியோரை நோக்கி நான் வெளியேற்ற முன்னர் எம்முடன் உடன்படாதவர்கள் வெளியேறலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .கடந்த அமைச்சரவை
கூடத்தின் போது பொது தீர்மாங்களுக்கு உடன்படாதவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் செல்லுமாறு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பொது முகாமைத்துவ அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக சிங்கள ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன .
காலை இழுப்போரும், சர்வதேச சமூகத்திடம் கோள் சொல்பவர்களும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் பதவி விலக்குவதற்கு முன்னதாக தாங்களாகவே பதவிகளை ராஜினாமா செய்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .அத்துடன் அண்மையில் பெளத்த தீவிரவாத அமைப்பான பொது பல சேனா அமைச்சர் ஹகீம்மை அரசாங்கத்தில் இருந்து உடனடியாக ஜனாதிபதி வெளியேற்றவேண்டும் என வலியுருதியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment