Posts

இலங்கையின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது இங்கிலாந்து

Image
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டி20 உலகக் கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.  இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.  இலங்கை அணி சார்பாக மஹேல ஜயவர்தன 89 ஓட்டங்களையும் டில்ஷான் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.  இதன்படி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 19.2 ஓவர்கள் நிறைவில் 190 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.  இங்கிலாந்து அணி சார்பில் அலக்ஸ் ஹெல்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 

கிண்ணியாவில் பாம்பு போன்ற உயிரினம் படையெடுப்பு

Image
கிண்ணியா பிரதேசத்தில் பாம்பு போன்ற கடல் உயிரினங்கள் இன்று (26) புதன்கிழமை படையெடுத்து வெளிவந்துள்ளது. இவ் உயிரினம் இன்று கிண்ணியா பிரதேசத்தில் இடிமண், காக்கா முனை , குட்டிக் கராச் மற்றும் குறிஞ்சாக்கேணி ஆகிய கலப்பு பாலங்களில் பெருமளவு படையெடுத்துள்ளது. கடந்த வருடம் அதற்கு முந்திய வருடம் மற்றும் கடந்த ஜனவரி மாதம் என இதுவரை நான்கு முறை இவ் உயிரினங்கள் வெளிவந்துள்ளது. இந்த உயிரினத்தைப் பார்வையிடுவதற்காக இன்று பெருந்திரளான மக்கள் வருகை தந்து பார்வையிட்டனர்.

கிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்

Image
கிழக்கு மாகாணத்தில் அரச நியமனங்களை மேற்கொள்ளும் போது மாகாண இன விகிதாசாரத்தைப் பேணுவதற்கு மாகாண அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான யோசனையை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மாகாண அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தார். அந்த யோசனையை ஆராய்ந்த மாகாண அமைச்சரவை மேற்படி முடிவை எடுத்துள்ளதாக மாகாண அமைச்சரவை பேச்சாளரும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம். எஸ். உதுமா லெப்பை தெரிவித்தார். மாகாண அமைச்சரவையின் இம்முடிவு மாகாண ஆளுனர் மொஹான் விஜேவிக்கிரமவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், முதலமைச்சர் தலைமையில் மாகாண அமைச்சரவை அண்மையில் கூடியது :- கிழக்கு மாகாண சபையில் உள்ள அமைச்சுக்கள், திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் தொடர்பில் மாகாணத்தில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு நியமனங்கள் வழங்கப்படுகின்றமை மாகாணத்தில் உள்ள படித்த இளைஞர், யுவதிகளுக்கு நிவாரணமாகவும், மாகாணத்தில் வேலையின்மைப் பிரச்சினையை பெருமளவு குறைப்பதற்கும் பெரும் துணையாக அமைந்துள்ளது. எனினும் இவ்வாறான நியமனங்களின் போது, திறமை...

இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஆதரவு - 23; எதிர்ப்பு - 12; 12 நாடுகள் பங்குபற்றவில்லை -

Image
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை இன்று சற்றுமுன்னர் 23 நாடுகள் ஆதரவாகவும் 12 நாடுகள் எதிராகவும் வாக்களித்த நிலையில் நிறைவேற்றப்பட்டது. 47 நாடுகளைக் கொண்ட இந்தக் கவுன்ஸிலில் 12 நாடுகள் இந்தப் பிரேரணை மீதான வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஆர்ஜென்ரீனா ஒஸ்திரியா பெனின் பிரேஸில் சிலி கொஸ்டரிக்கா கோடே டி ஐவரி செக் குடியரசு எஸ்தோனியா பிரான்ஸ் ஜேர்மனி அயர்லாந்து இத்தாலி மஸிடோனியா மொன்டிநீக்ரோ பெரு கொரியக் குடியரசு ரோமானியா சியாரா லியோன் பொட்ஸ்வானா மெக்சிக்கோ பிரிட்டன் அமெரிக்கா ஆகியன ஆதரித்து வாக்களித்தன. அல்ஜீரியா சீனா கொங்கோ கியூபா கென்யா மாலைதீவு பாகிஸ்தான் ரஷ்யா சவூதி அரேபியா ஐக்கிய அரசு எமிரேட்ஸ் வெனிசுலா வியட்நாம் ஆகியன எதிர்த்து வாக்களித்தன. புருக்கினோ பாஸோ எதியோப்பியா கபன் இந்தியா இந்தோனேசியா ஜப்பான் கஸகிஸ்தான் குவைத் தென்னாபிரிக்கா நமீபியா மொரோக்கோ பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.  இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்மொழிந்த நாடுகளின் வரிசை நேற்று மிக உயர்வாக அதிகரித்திருந்தது. இவற்றில் சில நாடுகள் ஐ.நா....

அஷ்ராப் வைத்தியசாலை அபிவிருத்திக்கு தடையாக ஏதோ ஒரு கோளாறு இருப்பதாக அறிகிறேன்!

Image
இனம், மதம், நிறங்களுக்கப்பால் வைத்தியசாலைகளை நோக்க வேண்டும் இவ்வாறு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா குறிப்பிட்டார். கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உள்ளக வீதித்திறப்பு நேற்று மாலை(26.03.2014) நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், வைத்தியசாலைகள் மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கான பணிகளைச் செய்து வருகின்றன. கல்முனைப் பிராந்தியத்தில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை இப்பிரதேச மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு பெரும் பங்களிப்பு செய்து வருவதை நாம் காண்கின்றோம். வைத்தியசாலைகளை இனம், மதம், நிறம் என்ற போர்வையில் உற்றுநோக்கக் கூடாது. வைத்தியசாலை என்பது பொதுப் பணி செய்யும் இடம். இவ்விடத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பது அதிகாரம் உள்ளவர்களின் பொறுப்பாகும் என்பதைச் சுற்றுக்க...

நாகூர் மீராசாஹிப் (வலி)அவர்களின் ஞாபகார்த்தமான கல்முனை கடற்கரைப்பள்ளி கொடியேற்று விழா

Image
அம்பாரை மாவட்டத்தில் வங்காள விhpகுடாவைக் கிழக்குத் திசையாகக் கொண்ட கல்முனை மாநகாரின் கடற்கரை ஓரமாக கம்பீரமாய்க் காட்சியளிக்கின்றது கடற்கரைப்பள்ளிவாசல் தர்ஹா. இது  1823 ம் ஆண்டு  ஓலைக் குடிசையாக நிHமாணிக்கப்பட்டது. பின்னH 1850 ம் ஆண்டு   கல்முனைக்குடி முஹியித்தீன் ஜும்ஆ பொpய பள்ளிவாசல் மரைக்காH சபையால்  சிறியதொரு கட்டிடமாகத் திருத்தியமைக்கப்பட்டது.  காலத்திற்குக் காலம் பலரது முயற்சியின் பயனாக குர்ஆன் மத்ரஸாவூடனான பள்ளிவாசல், தர்ஹா  வடிவமைக்கப்பட்டு  இரண்டு மாடிகளைக் கொண்ட சகல வசதிகளுடன் கூடிய  முழுமையான,  பள்ளிவாசலாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.     உலகின் பல பகுதிகளிலும் சன்மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இஸ்லாத்தின் நறுமணத்தை மக்கள் மத்தியில் பரவச் செய்து இறை நேசத்தைப் பெற்றவரான சற்குணம் குடிகொண்ட சங்கைமிகு நாகூர் மீரா சாஹிப் சாஹுல் ஹமீது நாயகமவர்களின் ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்டதே கடற்கரைப் பள்ளிவாசலாகும்.     ஹிஜ்ரி  910ம் ஆண்டு ஜமாத்துல் ஆகிர்  மாதம் 10ம் நாள் உத்தரப் பிர...

கல்முனை ஸாஹிறாக் கல்லூரி வளாகத்திலுள்ள வடிகான் திறந்து வைப்பு

Image
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உலக வங்கியின் 1.4 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை ஸாஹிறாக் கல்லூரி வடிகான் நேற்று  திறந்து வைக்கப்பட்டது. கல்முனை ஸாஹிறாக் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தார். மழை காலங்களில் இப்பாடசாலை வளாகத்தில் வெள்ளம் தேங்கி நிற்பதனால் மாணவர்களின் கல்வி நிலையில் பாதிப்புக்கள் ஏற்பட்டன. இதனை வீதி அபிவிருத்தி  அமைச்சர் எம்.எஸ்.உதுமாவௌ;வவையின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்தே இவ்வடிகான நிர்மாணிக்கப்பட்டது.  இந்நிகழ்வில்; கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், எம்.எல்.அமீர், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹி;ப் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பொதும...

கல்முனையில் இன்று நான்கு வீதிகள் திறந்து வைப்பு!

Image
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் ,  உலக வங்கியின்  200 மில்லியன் ரூபா நிதி உதவியில் ,  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நான்கு வீதிகள் இன்று ( 26) புதன்கிழமை வைபவ ரீதியாக  திறந்து வைக்கப்பட்டன . உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான ஏ.எல்.எம் அதாவுல்லா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு  இவ்வீதிகளைத் திறந்து வைத்தார்.  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரனி ஆரிப் சம்சுடீன் ,  எம்.எல்எம். அமீர் ,  கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராஸாஹிப் ,  ஆகியோருடன் அமைச்சுக்களின் அதிகாரிகள் ,  மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் என பலரும்இவ்விழாவில் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர். கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ,  பொதுமக்களினால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு  வரும்  கல்முனை ஸாஹிராக்கல்லூரி வீதி ,  ...

1992 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ் இறைச்சிக்காக மாடுகளை அறுத்தல் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கம்.

Image
கால்வாய் நோய் காரணமாக நாட்டின் பல பாகங்களில் இறைச்சிக்காக மாடுகளை அறுத்தல் மற்றும் இறைச்சி விற்பனை தொடர்பாக 1992 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டிருந்த தடைகள் சில நிபந்தனைகளுக்கமைவாக நாட்டின் சில பகுதிகளில் நீக்கப்பட்டு கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தால் வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தின் சட்டவிவகாரங்களுக்குப்பொறுப்பான உதவிப்பணிப்பாளர் (டாக்டர்) சுல்பிகார் அபூபக்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். தற்போது தாய்லாந்தில் பாதுகாப்பான உணவூ தொடர்பாக ஐரோப்பிய ய+னியனால் நடாத்தப்படும் விசேட மகாநாட்டில் கலந்துகொண்டுள்ள (டாக்டர்) சுல்பிகார் அப+பக்கர் அவர்களைத் தொடர்பு கொண்டபோது இது பற்றி அவர் தெரிவித்தார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்இ பின்வரும் கால்வாய் நோயின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த தடை 21.03.2014 ஆம் திகதியிலிருந்து தடை குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கமைவாக நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வர்த்தமானி திகதி    வர்த்தமானி இலக்...

கல்முனை சாஹிரா வீதி மக்கள் பாவனைக்குஇன்று 26.03.2014 திறந்து வைக்கப்பட்டது.

Image
உலக வங்கி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில்  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர் பாசனம் ,வீடமைப்பு ,கிராம மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் 49.02 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 1.04 கிலோ மீற்றர்  கல்முனை சாஹிரா வீதி காபட்  வீதி மக்கள் பாவனைக்குஇன்று   26.03.2014 திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகான சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆறிப் சம்சுதீன் தலைமையில் இன்று காலை நடை பெற்ற வைபவத்தில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா பிரதம அதிதியாகவும் ,கிழக்கு மாகாண  அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை,கிழக்குமா காண  சபை உறுப்பினர் ரீ.எல்.அமீர் மற்றும் முன்னாள் கல்முனை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு மக்கள் பாவனைக்கு வீதியை திறந்து கையளித்தனர்

கல்முனை முஸ்லிம் பிரிவுக்கான கோட்டக் கல்வி விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன .

Image
கல்முனை  வலயக்கல்வி அலுவலகங்களுகுட்பட்ட கோட்டக்கல்வி அலுவலகங்களுக்கு இடையேயான  விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன . கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக்கல்வி அலுவலக விளையாட்டுப் போட்டி நேற்று 24.03.2014 மருதமுனை மசூர்மௌலானா  விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. கல்முனை முஸ்லிம் பிரிவுக்கான கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹுபர் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார் .

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் முடிவு

Image
சட்ட விதிமுறைகளை மீறினால் நீதிமன்றில் வழக்கு தாக்கல்: உறுப்புரிமை இழக்க நேரிடலாம் மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் நாளை (26) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கமைய தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பிலான வர்த்தக விளம்பரங்கள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கைகள், கடிதங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றை பிரசுரிப்பதற்கும், ஒலி, ஒளி பரப்பு செய்வதற்குமான காலக்கெடு முடிவுக்கு வருகின்றது. அந்த வகையில், 27ஆம் திகதி முதல் தேர்தல் நடைபெறும் 29ஆம் திகதி நண்பகல் 12 மணிவரையில் மேற்படி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது சட்டத்துக்குப் புறம்பான செயலாகவே கருதப்படும். இதற்கமைய இத்தேர்தல் சட்ட விதிகளை மீறிச்செயற்படும் வேட்பாளர்கள் தேர்தலுக்குப் பின்னர் தமக்குக் கிடைக்க கூடிய மாகாண சபை உறுப்புரிமையை இழக்க நேரிடுமெனவும் தேர்தல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, சட்டவிரோத தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் ஏற்பாடுகளை கருத்திற்கொண்டு மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் பாதுகாப்பு இரட்டிப்பா...

கல்முனை மாநகர முன்னாள் மேயர் சிராஸ் இணைந்தார் அதாவுல்லா கட்சியில் -சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் உறுதி வழங்கினார் அதாவுல்லா

Image
முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்  அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரசில் இணைந்தார்  மற்ற கிராமங்களுக்கோ ,ஏனைய சமூகங்களுக்கோ பாதிப்பு எழாவண்ணம் சாய்ந்தமருதுக்கான  உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்கி தருவேன் என உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆயிரக்கணக்கான சாய்ந்தமருது மக்கள் முன்னிலையில் உறுதியளித்தார் சாய்ந்தமருதுக்கான  தனியான ஒரு உள்ளூராட்சி சபை கோரிக்கையை முவைத்து  நேற்று 24.03.2014 இரவு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திலேயே இந்த நிகழ்வுகள் இடம் பெற்றது . கிழக்கு மாகான அமைச்சர் உதுமாலெப்பை,மாகாண சபை உறுப்பினர்களான ரீ,எல்.அமீர்,சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் உட்பட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் அடங்கலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.அதாவுல்லா கட்சியில் இணைந்தார்

LTTE யால் கொல்லப்பட்ட 160 முஸ்லிம்களின் சடலங்களை தோண்டி எச்சங்களை உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை!

Image
மட்டக்களப்பில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு அவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை காணமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டனர். 1990 ஆம் ஆண்டு 160 முஸ்லிம்கள் எல்ரிரிஈயினரால் ஒரே தினத்தில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக ஆணைக்குழு முன் சட்சியமளிக்கப்பட்டுள்ளது. குருக்கள் மடம் கடற்கரை பகுதியில் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை இவர்கள் பார்வையிட்டனர். மாகாண சபை உறுப்பினர் ஸிப்லி பாருக் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இவ்விடத்தை பார்வையிட வருமாறும் கடந்த நவம்பர் மாதம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இக்குழு விஜயம் செய்தது. அவ்விடங்களை பார்வையிட்ட ஆணைக்குழு தலைவர் மெக்வல் பராக்கிரம பரணகம இதனை துரிதமாக சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்று சடலங்களை தோண்டி எச்சங்களை உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இது தொட்ர்பான மாகாண சபை உறுப்பினர் ஸிப்லி பாருக் கருத்து தெரிவித்தார். இதே நேரம் காணாமல்போனோர் தொடர்பாக முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று மட்டக்களப்பு நகரில...

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் இனவாதம் பேசுவதை கைவிட வேண்டும்

Image
கல்முனை கல்விமாவட்ட தேசிய கல்வி ஜனனாயக ஆசிரியர் சங்கத்தின் கல்முனைக் கிளை கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்தை வன்மையாக கண்டித்து விடுக்கும் அறிக்கை. கிழக்கில் அடக்குமுறை நிருவாகம் தமிழ் பாடசாலைகள் புறக்கணிப்பு எனும் தலைப்பில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கெதிராக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளியிட்ட செய்திகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சிங்களப் பேரினவாதத்தைப் பற்றி குறை சொல்லிக் கொண்டு தமிழ்ப் பேரினவாதத்தை வளர்க்கும் இச் செய்திகள், ஒற்றுமையாக வாழும் இரு சமூகங்களுக்கிடையிலும், ஒரு மொழி பேசும் அதிகாரிகளுக்கிடையிலும் விரிசலை ஏற்படுத்தி குறுகிய சுயலாபங்களைப் பெற்றுக் கொள்ளும் கீழ்த்தரமான முயற்சியாகும். கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் முஸ்லிம் சமூகத்தையும், முஸ்லிம் பாடசாலைகளையும் விட தமிழ்ப் பாடசாலைகளிலேயே அதிக அக்கறை செலுத்துகின்றார் என்பது முஸ்லிம் தரப்பிலான பெரும் குறைகூறலாகும். தமிழர் சமூகமும் ஆசிரியர்களும், அவர் மீது கொண்டுள்ள அபிப்பிராயம் இதற்குச் சான்றாகும். எனினு...

நிந்தவூர்பள்ளிவாசல் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது

Image
நீண்ட காலமாகப் புனரமைப்பு செய்யப்பட்டு வந்த நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மக்களிடம் கையளிக்கப் பட்டுள்ளது   பழங்காலத்தில்  இலுக்கு ஓலையினால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வரலாற்றையுடைய பழம்பெருமை வாய்ந்த இப்பள்ளிவாசல் இன்று முழுக்க முழுக்க நிந்தவூர் மக்களின் பரோபகார சிந்தனையின் மூலமும், வள்ளல் குணத்தினாலும் சுமார் ரூபாய் 100 கோடி செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இதன் நிர்மாண வேலைகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இன்று (22) இப்பள்ளிவாசலை மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் எம்.ஏ.எம்.றசீன் தெரிவித்தார்.   இன்றையதினம் பாரிய கந்தூரி (அன்னதான நிகழ்வு) நிகழ்வும்   50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது பள்ளிவாசலின் அழகையும், பிரமாண்டமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கந்தூரி நிகழ்வின் காட்சிகளையும் ஊரிலுள்ள  அணைத்து மக்களும் பார்வையிடுகின்றனர்

சுய இலாபத்திற்காக இன முரண்பாட்டை தூண்ட வேண்டாம் - கிழக்கு மாகாண சபை உறுப்பினர்; சிப்லி பாறூக்

Image
சுய இலாபத்திற்காக இன முரண்பாட்டை தூண்ட வேண்டாமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அண்மைக் காலங்களாக காத்தான்குடியை அண்மித்த பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை ஆக்கிரமிக்கின்ற செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.  இந்த தொடர்ச்சியான ஆக்கிரமிப்புச் செயலானது இன்று நேற்று அல்லாமல் சுமார் இருபது, முப்பது வருடங்களாக காத்தான்குடியையும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் திட்டமிடப்பட்ட வகையில் இந்த ஆக்கிரமிப்புச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்த காணி அபகரிப்பு சம்பந்தமாக நாங்கள் பின்னோக்கி பார்க்கின்ற போது ஆரையம்பதியிலே மயானமாக இருந்த சுமார் 08 ஏக்கருக்கும் மேலான கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்திருந்த பொது மயானக் காணி தற்பொழுது கலாச்சார மண்டபம் மற்றும் சந்தைக் கட்டடத் தொகுதிகளை அமைத்து அவை வேறு பொதுத் தேவைகளுக்காக பயன்படு...

மனித உருவிலான அதிசய ஆட்டுக் குட்டி

Image
பொத்துவில் ஹிஜ்ரா நகரில் நேற்று  (20) அதிகாலை ஆடு ஒன்று மனித உருவிலான அதிசய ஆட்டுக் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. சுமார் 08 கிலோ கிராம் நிறையுடய அதிசய ஆட்டுக் குட்டி இறந்த நிலையில் காணப்படுவதையும் படங்களில் காணலாம்.

கிழக்குப் பல்கலையில் கோஷ்டி மோதலில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில்!

Image
 கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாக விடுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு இரு மாணவ குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒன்பது பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.    காயமடைந்தவர்களில் ஏழு தமிழ் மாணவர்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையிலும் இரண்டு சிங்கள மாணவர்கள் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.    ஒரு மாதத்திற்கு முன்னர் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியொன்றில் மாணவர்களிடையே ஏற்பட்டிருந்த முறுகல் நிலை மீண்டும் தொடர்ந்து இவ்வாறு கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது.      நேற்று அதிகாலை பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டிருந்த முதலாம் ஆண்டு கலைப்பிரிவின் தமிழ் மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் புகுந்த நான்காம் வருட சிங்கள மாணவர்கள் தாக்குதலை மேற்கொண்டனர் எனக் கூறப்படுகின்றது. மதுபோதையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எனப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.    தாக்குதலுக்கு பேனாக்கத்தி மற்றும் மின் அழுத்தி என...

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுடன், அமைச்சர் அதாஉல்லா ஆலோசனை

Image
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின் போது இனிமேல் விருப்பு வாக்குகளுக்கு இடமில்லை. அதன் நிமித்தம் வட்டாரத் தேர்தல் முறை இனிவரும் உள்ளுராட்சித் தேர்களின் போது அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக நாட்டிலுள்ள 367 உள்ளுராட்சி சபைகளினதும் நிலப் பிரதேசங்கள் வட்டாரங்களாகப் பிரிக்கப்படுவதற்காக தேசிய மற்றும் மாவட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டது. மாவட்டக்குழு தனது அறிக்கையை தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்ததை அடுத்து தற்போது வட்டாரங்கள் எல்லாம் அடையாளப்படுத்தப்பட்டு அப்பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இறுதி அறிக்கையை தயாரிப்பது சம்பந்தமான விடயங்களை உள்ளடக்கியதான ஆலோசனைக்கூட்டம் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களுக்கும் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்குமிடையில் அமைச்சில் நடைபெற்றது. இதன்போது தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தவிசாளர் ரவி திசாநாயக்க உள்ளிட்ட ஏனைய அங்கத்தினர்களும் கலந்து கொண்டனர்.  

அரச வர்த்தமாணியில் உள்ளதை வாசித்து விளங்க முடியாத கல்முனை மேயர்- சாடுகின்றார் முபாரக் மௌலவி!

Image
மாடு அறுக்கும் விடயத்தில் கல்முனை மேயரும் அரச அதிகாரிகளும் கல்முனை மக்களை தொடர்ந்தும் குழப்பிக்கொண்டிருப்பதாகவே தெரிகிறது. ஓரிரு நாட்களின் முன் மாடு அறுப்பதற்கான தடையை நீக்குவதாக கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் பகிரங்கமாக அறிவித்தார். அதன்படி முந்தாநாள் கல்முனையில் மாட்டிறைச்சி கிடைத்தது. பின்னர் மேயரின் இந்த பகிரங்க அறிவிப்பை அறிந்து கொழும்பிலிருந்து ஒரு குழு கல்முனைக்கு வந்து மீண்டும் மாடு அறுப்பதை தடுத்ததாக செய்திகள் உலாவருகின்றன. இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் முழுமையாக மாட்டிறைச்சிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஜனாதிபதிக்கு ஆதரவாக கல்முனை முஸ்லிம்கள் ஆதரவுப்பேரணியை நடத்தியதற்காக கல்முனை முஸ்லிம்கள் பற்றி தனதுள்ளம் மகிழ்வடைவதாக ஜனாதிபதி கூறியதாக கல்முனையின் சுதந்திரக்கட்சி அமைப்பாளர் ரியாஸ் கூறியிருந்தார். ஆனாலும் கல்முனை மக்களின் வழமையான உணவில் கூட அடி விழுந்துள்ளதால் அம்மக்கள் மனம் பூரிக்கவில்லை என்பதை என் இவர்களால் ஜனாதிபதிக்கு தெரிவிக்க முடியாமல் போனது? கல்முனையில் உள்ள மாடுகளுக்கு கால்வாய் நோய் அதிகம் இல்லை என மிருக வைத்தியர்கள் கூறுவதாக கல்முனை மேயர் தரப்பில...