கல்முனையில் இன்று நான்கு வீதிகள் திறந்து வைப்பு!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில், உலக வங்கியின் 200மில்லியன் ரூபா நிதி உதவியில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நான்கு வீதிகள் இன்று(26)புதன்கிழமைவைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டன.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான ஏ.எல்.எம் அதாவுல்லா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு  இவ்வீதிகளைத் திறந்து வைத்தார்.
 கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரனி ஆரிப் சம்சுடீன், எம்.எல்எம். அமீர், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராஸாஹிப், ஆகியோருடன் அமைச்சுக்களின் அதிகாரிகள், மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் என பலரும்இவ்விழாவில் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.




கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட
, பொதுமக்களினால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கல்முனை ஸாஹிராக்கல்லூரி வீதிகல்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளி வீதிகல்முனை கடற்கரை வீதி மற்றும் கல்முனை கடற்கரைப்பள்ளி வீதி ஆகிய வீதிகளே இவ்வாறு திறக்கப்பட்ட வீதிகளாகும். குறித்த நான்கு வீதிகளும் கடந்த30வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தி செய்யப்படாதிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்