1992 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ் இறைச்சிக்காக மாடுகளை அறுத்தல் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கம்.
கால்வாய் நோய் காரணமாக நாட்டின் பல பாகங்களில் இறைச்சிக்காக மாடுகளை அறுத்தல் மற்றும் இறைச்சி விற்பனை தொடர்பாக 1992 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டிருந்த தடைகள் சில நிபந்தனைகளுக்கமைவாக நாட்டின் சில பகுதிகளில் நீக்கப்பட்டு கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தால் வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தின் சட்டவிவகாரங்களுக்குப்பொறுப்பான உதவிப்பணிப்பாளர் (டாக்டர்) சுல்பிகார் அபூபக்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தற்போது தாய்லாந்தில் பாதுகாப்பான உணவூ தொடர்பாக ஐரோப்பிய ய+னியனால் நடாத்தப்படும் விசேட மகாநாட்டில் கலந்துகொண்டுள்ள (டாக்டர்) சுல்பிகார் அப+பக்கர் அவர்களைத் தொடர்பு கொண்டபோது இது பற்றி அவர் தெரிவித்தார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்இ பின்வரும் கால்வாய் நோயின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த தடை 21.03.2014 ஆம் திகதியிலிருந்து தடை குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கமைவாக நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வர்த்தமானி திகதி வர்த்தமானி இலக்கம் தடை நீக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்
மாவட்டம் மிருகவைத்தியர் பிரிவூ
21.03.2014 1854ஃ44 கம்பஹா மாவட்டம் அத்தனகல்ல,பியகம,
தொம்பே,திவூலப்பிட்டிய,கம்பஹா,கடவத்தை,கட்டானை,மருதகஹமுல்ல, மினுவங்கொட,
மீரிகம,
நீர்கொழும்பு
21.03.2014 1854ஃ45 முல்லைத்தீவூ மாவட்டம் ஓட்டிசுட்டான்
1854ஃ48 அம்பாறை மாவட்டம் தெஹியத்தக்கண்டிய
புதியத்தலாவ
மகஓயா
அம்பாறை
உகன
தமன
லாகுகல
பொத்துவில்
திருக்கோவில்
அக்கரைப்பற்று
ஆலயடிவேம்பு
நிந்தவூர், காரைதீவூ
சாய்ந்தமருது
இறக்காமம்
நாவிதன் வெளி
21.03.2014 1854ஃ48 திருகோணமலை மாவட்டம் திருகோணமலை
மொரவெவ
கோமரங்கடவல
பதவி சிரிபுர
கிண்ணியா
மூதூர்
கந்தளாய்
சேருவில
ஈச்சிலம்பத்து
21.03.2014 1854ஃ49 புத்தளம் மாவட்டம் ஆரச்சிக்கட்டுவ
சிலாபம்
மகாவெவ
மாரவில
தங்கொட்டுவ
பமுணுக்கொட்டுவ
நவகத்தேகம
சேருக்கலே
புத்தளம்
வண்ணாத்திவில்லு
கருவலகஸ்வெவ
எனினும் தடை நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பின்வரும் நிபந்தனைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவூம் அவர் தெரிவித்தார்.
(1) விலங்குகளை அறுத்தல் மற்றும் அவற்றின் இறைச்சி மற்றும் தோல் உள்ளிட்ட ஏனைய உடற்பாகங்களையூம், விற்றல், விற்பனைக்கு விடுதல், விற்பனைக்குக் காட்சிப்படுத்துதல், களஞ்சியப்படுத்துதல், வழங்கல், விநியோகித்தல், மற்றும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் கொண்டு செல்லுதல் ஆகியன இக்கட்டளையின் அட்டவணையில் குறிப்பிடப்படுப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கமைவாக மாத்திரம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
1. 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விலங்குகள் சட்டம், இறைச்சிக்கடைக்காரர்கள் கட்டளைச்சட்டம், விலங்குச்சித்திரவதைக் கட்டளைச்சட்டம் மற்றும் தொந்தரவூகள் கட்டளைச்சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கமைவாக விலங்குகள் அறுக்கப்படல் வேண்டும்.
2. பின்வரும் இடங்களில் ஏதேனுமொரு இடத்தில் மாத்திரம் விலங்குகள் அறுக்கப்படல் வேண்டும்.
(1) இறைச்சிக்கடைக்காரர்கள் கட்டளைச்சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழ் அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது 1971 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க உள்@ராட்சி அமைச்சர் (அதிகாரங்களைக்கையளித்தல்) சட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரால் அங்கீகரிக்கப்பட்ட பொது விலங்கறுமனை.
(2) இறைச்சிக்கடைக்காரர்கள் கட்டளைச்சட்டத்தின் 14(அ) பிரிவின் கீழ் ஏற்புடைய அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இடம்.
(3) உள்@ராட்சி மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தனியார் விலங்கறுமனை.
3. மேலே 2 ஆம் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு இடம் தொடர்பிலும் பின்வரும் அனுமதிப்பத்தரங்கள் பெறப்பட்டிருத்தல் வேண்டும்.
(1) 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டம் அல்லது மாகாண சபையால் இயற்றப்பட்ட சுற்றாடல் தொடர்பான நியதிச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம்.
(2) தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொழில் ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட பதிவூச்சான்றிதழ்.
4. பின்வருவோர் மாத்திரமே விலங்குகளை அறுத்தலில் ஈடுபடுதல் வேண்டும்.
(1) இறைச்சிக்கடைக்காரர்கள் கட்டளைச்சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் அக்கட்டளைச்சட்டத்தின் 5, 6 மற்றும் 7 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைவாக வழங்கப்பட்ட இறைச்சிக்கடைக்காரர் அனுமதிப்பத்திரத்தை உடையவர்.
(2) இறைச்சிக்கடைக்காரர்கள் கட்டளைச்சட்டத்தின் 12 ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட தற்காலிக இறைச்சிக்கடைக்காரர் அனுமதிப்பத்திரத்தை உடையவர்;. அல்லது
(3) இறைச்சிக்கடைக்காரர்கள் கட்டளைச்சட்டத்தின் 18(1) ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட விசேட அனுமதிப்பத்திரத்தை உடையவர்.
5. அதிகாரமளிக்கப்பட்ட விலங்குவைத்தியரொருவரால் பரிசீலிக்கப்பட்டு கால்வாய் நோய் மற்றும் மற்றும் ஏனைய குறித்துரைக்கப்பட்ட நோய்களால் பாதிக்கப்படாததெனவூம்இ அறுப்பதற்குப் பொருத்தமானதெனவூம் உறுதிப்படுத்தப்பட்ட விலங்குகள் மாத்திரம் அறுக்கப்படல் வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு விலங்கும் அவ்விலங்கின் சொந்தக்காரரின் செலவில் குறித்த விலங்குவைத்தியரால் காதடையாளமிடப்பட்டிருத்தல் வேண்டும்.
6. அறுக்கப்படவூள்ள ஒவ்வொரு மாடும் 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விலங்குகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக காதடையாளமிடப்பட்டிருத்தல் வேண்டும்.
7. அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரின் முன்னிலையிலேயே மற்றும் மேற்பார்வையின் கீழ் விலங்குகள் அறுக்கப்படல் வேண்டும்.
8. விலங்குகள் அறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அறுப்பவரால் பின்வரும் ஆவணங்கள் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தருக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
(1) இறைச்சிக்கடைக்காரர் அனுமதிப்பத்திரம்
(2) அறுக்கப்படும் விலங்கு அறுப்பவருக்குச் சொந்தமானதென்பதை உறுதிப்படுத்தும் ஆவணம்.
(3) அதிகாரமளிக்கப்பட்ட விலங்குவைத்தியரொருவரால் பரிசீலிக்கப்பட்டு கால்வாய் நோய் மற்றும் மற்றும் ஏனைய குறித்துரைக்கப்பட்ட நோய்களால் பாதிக்கப்படாததெனவூம், அறுப்பதற்குப் பொருத்தமானதெனவூம் உறுதிப்படுத்தி வழங்கப்பட்ட சான்றிதழ்
9. அறுக்கப்பட்ட விலங்கொன்றிலிருந்து பெறப்பட்ட இறைச்சி அல்லது அதன் பாகங்கள் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரமின்றி விலங்கு கொல்களத்திலிருந்து அகற்றப்படலாகாது.
10. உள்@ராட்சி மன்றமொன்றினால் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் மாத்திரமே இறைச்சி விற்பனை, இறைச்சியைக் களஞ்சியப்படுத்துதல், விற்பனைக்குக் காட்சிப்படுத்தல், வழங்கல், அல்லது விநியோகித்தல் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
11. அதிகாரமளிக்கப்பட்ட மிருகவைத்தியரால் சான்றுபடுத்தப்பட்ட இறைச்சி மாத்திரமே விற்கப்படவோ விற்பனைக்கு காட்சிப்படுத்தப்படவோ வேண்டும்.
12. அதிகாரமளிக்கப்பட்ட மிருகவைத்தியரால் அங்கீகரிக்கப்பட்ட வாகனமொன்றிலேயே இறைச்சி மற்றும் உடற்பாகங்கள் ஏற்றியிறக்கப்படல் வேண்டும்.
13. அதிகாரமளிக்கப்பட்ட மிருகவைத்தியரால் சான்றுபடுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உடற்பாகங்கள் மாத்திரமே ஏற்றியிறக்கப்படல் வேண்டும்.
(2) அதிகாரமளிக்கப்பட்ட மிருகவைத்திய அதிகாரியொருவரின் எழுத்திலான அனுமதியின்றி மேற்குறிப்பிட்ட அரசாங்க மிருகவைத்திய அதிகாரிகள் பிரிவிலிருந்து விலங்குகள், இறைச்சி மற்றும் தோல் உள்ளிட்ட உடற்பாகங்கள், (சாணம் உள்ளிட்ட) விலங்குக்கழிவூகள், மற்றும் பண்ணைக்கழிவூகள் ஆகியன வேறிடங்களுக்கு அகற்றப்படவோ அல்லது கொண்டு செல்லப்படவோ கூடாது.
Comments
Post a Comment