அரச வர்த்தமாணியில் உள்ளதை வாசித்து விளங்க முடியாத கல்முனை மேயர்- சாடுகின்றார் முபாரக் மௌலவி!

மாடு அறுக்கும் விடயத்தில் கல்முனை மேயரும் அரச அதிகாரிகளும் கல்முனை மக்களை தொடர்ந்தும் குழப்பிக்கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

ஓரிரு நாட்களின் முன் மாடு அறுப்பதற்கான தடையை நீக்குவதாக கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் பகிரங்கமாக அறிவித்தார். அதன்படி முந்தாநாள் கல்முனையில் மாட்டிறைச்சி கிடைத்தது. பின்னர் மேயரின் இந்த பகிரங்க அறிவிப்பை அறிந்து கொழும்பிலிருந்து ஒரு குழு கல்முனைக்கு வந்து மீண்டும் மாடு அறுப்பதை தடுத்ததாக செய்திகள் உலாவருகின்றன. இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் முழுமையாக மாட்டிறைச்சிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

ஜனாதிபதிக்கு ஆதரவாக கல்முனை முஸ்லிம்கள் ஆதரவுப்பேரணியை நடத்தியதற்காக கல்முனை முஸ்லிம்கள் பற்றி தனதுள்ளம் மகிழ்வடைவதாக ஜனாதிபதி கூறியதாக கல்முனையின் சுதந்திரக்கட்சி அமைப்பாளர் ரியாஸ் கூறியிருந்தார். ஆனாலும் கல்முனை மக்களின் வழமையான உணவில் கூட அடி விழுந்துள்ளதால் அம்மக்கள் மனம் பூரிக்கவில்லை என்பதை என் இவர்களால் ஜனாதிபதிக்கு தெரிவிக்க முடியாமல் போனது?

கல்முனையில் உள்ள மாடுகளுக்கு கால்வாய் நோய் அதிகம் இல்லை என மிருக வைத்தியர்கள் கூறுவதாக கல்முனை மேயர் தரப்பில் சொல்லப்பட்டது. அப்படியிருந்தும் ஏன் மாடறுக்கத்தடை என்பதை ஜனாதிபதியிடம் கேட்டறியாத நிலையில்தான் கல்முனை அரச தரப்பு அரசியல்வாதிகளும் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் காங்கிரசும் இருந்து கொண்டிருக்கிறது.

மாட்டிறைச்சி சாப்பிடுவது முஸ்லிம்களுக்கு கட்டாயம் இல்லை. ஆனால் பௌத்த பேரினவாதிகளின் விருப்பத்திற்கமைய கால்வாய் நோய் இல்லை என்று அறிந்த பின்பும் தடையை நடைமுறைப்படுத்துவது சிறு பான்மை இனத்தின் உரிமை மீது வேண்டுமென்றே கை வைப்பதாகும். இத்தகைய உரிமை மீறல்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்ய முடியாத அளவு கல்முனையின் அரசியல் சோரம் போயுள்ளது.

ஆக மொத்தத்தமில் அரச வர்த்தமாணியில் என்ன உள்ளது என்பதை வாசித்து விளங்கத்தெரியாத ஒருவரை முஸ்லிம் காங்கிரஸ் கல்முனையின் மேயராக ஆக்கியுள்ளது. இதன் காரணமாக கல்முனை மக்கள் தினமும் குழப்பத்திலேயே காலங்கழிக்க வேண்டியுள்ள தலைவிதியை மாற்றுவது யார்?

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்