நாகூர் மீராசாஹிப் (வலி)அவர்களின் ஞாபகார்த்தமான கல்முனை கடற்கரைப்பள்ளி கொடியேற்று விழா


அம்பாரை மாவட்டத்தில் வங்காள விhpகுடாவைக் கிழக்குத் திசையாகக் கொண்ட கல்முனை மாநகாரின் கடற்கரை ஓரமாக கம்பீரமாய்க் காட்சியளிக்கின்றது கடற்கரைப்பள்ளிவாசல் தர்ஹா. இது  1823 ம் ஆண்டு  ஓலைக் குடிசையாக நிHமாணிக்கப்பட்டது. பின்னH 1850 ம் ஆண்டு   கல்முனைக்குடி முஹியித்தீன் ஜும்ஆ பொpய பள்ளிவாசல் மரைக்காH சபையால்  சிறியதொரு கட்டிடமாகத் திருத்தியமைக்கப்பட்டது.  காலத்திற்குக் காலம் பலரது முயற்சியின் பயனாக குர்ஆன் மத்ரஸாவூடனான பள்ளிவாசல், தர்ஹா  வடிவமைக்கப்பட்டு  இரண்டு மாடிகளைக் கொண்ட சகல வசதிகளுடன் கூடிய  முழுமையான,  பள்ளிவாசலாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    உலகின் பல பகுதிகளிலும் சன்மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இஸ்லாத்தின் நறுமணத்தை மக்கள் மத்தியில் பரவச் செய்து இறை நேசத்தைப் பெற்றவரான சற்குணம் குடிகொண்ட சங்கைமிகு நாகூர் மீரா சாஹிப் சாஹுல் ஹமீது நாயகமவர்களின் ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்டதே கடற்கரைப் பள்ளிவாசலாகும்.


    ஹிஜ்ரி  910ம் ஆண்டு ஜமாத்துல் ஆகிர்  மாதம் 10ம் நாள் உத்தரப் பிரதேசத்திலுள்ள மாணிக்கப்பூர்  என்ற செல்வச் செழிப்புள்ள ஊரில் அப்துல்காதிர் குதுபுல் மஜீத் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்கள் பிறந்தார்கள். ஐந்து வயதில் குர்ஆன் முழுவதையூம் மனனம் செய்து எட்டு வயதில் அரபு இலக்கணம்இ இலக்கியம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார்கள். 18 வயதில் பெற்றோரின்  அனுமதியூடன் குவாலியர்  என்ற இடத்திற்கு  முயீனுத்தீன் என்பவரின் வழித்துணையூடன் சென்றார்கள். அங்கே தனிமையில் இறைவழிபாட்டில்; ஈடுபட்டிருந்தார் . அப்பொழுது ஒரு அசரீர  (சத்தம்) கேட்டது. ~~அப்துல் காதிரே! இன்று முதல் உனக்கு சாஹு ல் ஹமீது (புகழரசர் ) என்னும் பட்டம் சூட்டியூள்ளேன். உன்னுடைய ஆன்மீக ஆசான் இங்கு வாழும் முஹம்மது கௌது இப்னு கதீருத்தீன் ஆவார் ~~. என்று முழங்கியது. அதன்படி தமது ஆசானைச் சந்தித்து மன மகிழ்ச்சியடைந்தார் கள். 10 ஆண்டுகள் அவரிடம் கற்று தீட்சையூம் (சமயஞானம்) பெற்றார் கள்.     மேலும் குதுபுல் அக்தாப் சாஹுல் ஹமீது வலியூல்லாஹ் அவர் கள் மாணிக்கப்பூரி லிருந்து  இலங்கையிலுள்ள காலி, ஜெயிலானி நீர் கொழும்பு போன்ற ஊர்களுக்கு வந்து  கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் அமைந்திருக்கும் பிரதேசத்திற்கும்  வந்தார்கள்.  அக்காலத்தில் இப்பிரதேசமக்கள் மீன்பிடித் தொழிலை மாத்திரம் வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தார்கள். இவர்களின் பழக்கவழக்கங்கள் உடைகள் என்பன இஸ்லாமிய ஒழுங்கு முறைகளுக்கு  மாற்றமாகவூம், மார்க்கப்பற்று குறைந்தும் காணப்பட்டதை அவதானித்தார் கள். இந்நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு  பள்ளிவாசல் ஒன்று அமைத்து ஐவேளை தொழும்படியூம்இ பள்ளிவாசலில் கொடி ஏற்றி காணிக்கைகள் செலுத்தி  ஹதீஸ் மஜ்லிசுகள் நடத்தும்படியூம்     அதன் மூலம் வாழ்க்கையைச் சீராக்கிக் கொள்ளும்படியூம் அம்மக்களிடம் வேண்டினார் கள். அவர் களின் வேண்டுதலுக்கு அமைவாக அன்று ஆரம்பிக்கப்பட்ட பள்ளிவாசலே கல்முனைக் கடற்கரைப் பள்ளிவாசலாகும்.


    கல்முனையில் வாழ்ந்த ஒருவர்  தீராத நோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டு இ வேதனை தாங்காது கடற்கரையில் அமர்ந்திருந்த போது நித்திரையாகி கனவொன்று கண்டதாகவூம், அக்கனவில் சாஹுல் ஹமீது நாயகம் அவர்கள்  தோன்றி,அவரின்  நோய் நீக்கிய பின் தனது இடத்தை கௌரவப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு அடையாளமாக ஒரு மண்குவியல், மேலும் சில தடயப் பொருட்களையூம் வைத்து அடையாளப்டுத்தியதாகவூம்,   விழித்தெழுந்தபோது அவர்  நோயிலிருந்து பூரண சுகம் பெற்றிருந்ததாகவூம் வரலாறுகள் கூறகின்றன.  அந்த மணற் குவியல் அடையாளம் இன்றும் தர்ஹாவூக்குள்  பேணப்பட்டு வருகின்றது.

    சாஹுல் ஹமீது நாயகம் அவர்களின் வருகையைத் தொடர்ந்து வருடம் தோறும் அவர்களின் நினைவாக ஜமாத்துல் ஆகிர்  மாதம் முதற் பிறையன்று மினாராக்களில் கொடியேற்றப்படுகின்றது.  பேச்சு வழக்கில் இம்மாதத்தை மீராகந்தூரி  மாதம் என்றே அழைக்கின்றார்கள்.   இன்ஷா அல்லாஹ் இவ்வருடமும் மார்ச் மாதம் 31ம் திகதி திங்கட்கிழமை மாலை   192 வது கொடியேற்று விழா மிக விமர் சையாக நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகளை தர்ஹா நிர்வாகிகளும் தொண்டர் கள்; உட்பட பிரதேசவாசிகளும் மிக ஆர்வத்துடன் செய்து வருகின்றார்கள்.

    கொடிகள் அனைத்தும் முஹியத்தீன் ஜும்ஆ   பள்ளிவாசல் நிர் வாகத்தினரின் தலைமையில் அங்கிருந்து பக்கீர்  பைத், ரபான் இசை முழக்கத்துடன்  ஊர்  மக்கள் பின் தொடர ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திக்றுகள் கஸீதாக்கள் கூறப்பட்டு  ஏழடுக்கு மினாராவிலும், சிறிய மினாராக்களிலும்  ஏற்றிவைக்கப்படுவதுடன்  துஆ பிராத்தனைகள் நடைபெறுகின்றன.  இந்தக் கண் கொள்ளாக் காட்சியை நேரில்  கண்டு களிப்பதற்காக மக்கள் கூட்டம் தர்ஹா வளவில் கூடி நிற்பர் .

    கொடி ஏற்றப்பட்ட தினத்திலிருந்து தொடர்ந்து பன்னிரண்டு நாட்களிலும் மஃரிப் தொழுகையின் பின் சாஹுல்ஹமீது வலியூல்லாஹ் அவர் களின் பெயரால் மௌலீது ஓதப்பட்டு துஆ மற்றும் மார் க்கப்பிரசங்கங்களும் நடை பெறுகின்றன. இந்நிகழ்வூகள் தர்ஹா முற்றவெளியில் அமைந்துள்ள எண்கோண மேடையில் நிகழ்த்தப்படுகின்றன. மக்கள் மணல் வெளியில் அமர் ந்திருந்து இம்மஜ்லிஸ் நிகழ்வூகளில் கலந்து கொள்கிறார்கள்.

    தேசிய விழாவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நாளாந்தம் நாட்டின் பல்வேறு  பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு  வருகின்றனர் . இதற்காக போக்கு வரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மற்றும் தங்குமிட வசதிகளும், வாகனத் தரிப்பிடம், விஷேட பாதுகாப்பு வசதிகள் என்பன ஒழுங்கு செய்யப்படுகின்றன.. நூற்றுக்கணக்கான கடைத்  தொகுதிகள் அமைக்கப்பட்டு உணவூப் பொருட்கள், உடைகள் மற்றும் பாவனைப் பொருட்கள் அனைத்தும் மலிவூ விலையில் விற்பனை செய்யப்படுவதால் இப்பொருட்களை வாங்குவதற்கென முஸ்லிம்கள் மாத்திரமன்றி  சிங்கள, தமிழ் மக்களும் இங்கு வருகிறார்கள்.    இறுதி பன்னிரண்டாம் நாள் மாபெரும் கந்தூரி  அன்னதானம்  வழங்கப்பட்டு கொடிகள் இறக்கி வைக்கப்படுகின்றன.

தகவல் தொகுப்பாக்கம் :-

திருமதி பாத்திமா நஸீறா அலி;
164 ஊ செயிலான் வீதி
கல்முனை




Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்