இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஆதரவு - 23; எதிர்ப்பு - 12; 12 நாடுகள் பங்குபற்றவில்லை -



ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை இன்று சற்றுமுன்னர் 23 நாடுகள் ஆதரவாகவும் 12 நாடுகள் எதிராகவும் வாக்களித்த நிலையில் நிறைவேற்றப்பட்டது. 47 நாடுகளைக் கொண்ட இந்தக் கவுன்ஸிலில் 12 நாடுகள் இந்தப் பிரேரணை மீதான வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஆர்ஜென்ரீனா ஒஸ்திரியா பெனின் பிரேஸில் சிலி கொஸ்டரிக்கா கோடே டி ஐவரி செக் குடியரசு எஸ்தோனியா பிரான்ஸ் ஜேர்மனி அயர்லாந்து இத்தாலி மஸிடோனியா மொன்டிநீக்ரோ பெரு கொரியக் குடியரசு ரோமானியா சியாரா லியோன் பொட்ஸ்வானா மெக்சிக்கோ பிரிட்டன் அமெரிக்கா ஆகியன ஆதரித்து வாக்களித்தன. அல்ஜீரியா சீனா கொங்கோ கியூபா கென்யா மாலைதீவு பாகிஸ்தான் ரஷ்யா சவூதி அரேபியா ஐக்கிய அரசு எமிரேட்ஸ் வெனிசுலா வியட்நாம் ஆகியன எதிர்த்து வாக்களித்தன. புருக்கினோ பாஸோ எதியோப்பியா கபன் இந்தியா இந்தோனேசியா ஜப்பான் கஸகிஸ்தான் குவைத் தென்னாபிரிக்கா நமீபியா மொரோக்கோ பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. 

இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்மொழிந்த நாடுகளின் வரிசை நேற்று மிக உயர்வாக அதிகரித்திருந்தது. இவற்றில் சில நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் தற்சமயம் வாக்களிக்கும் தகுதி பெறாதவை. அவை உட்பட இந்தப் பிரேரணையை முன்மொழிந்த நாடுகள் வருமாறு :- அல்பேனியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, குரோஷியா, சைப்பிரஸ், டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜோர்ஜியா, ஜேர்மனி, கிறீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லிக்ஸ்ரென்ரின், லித்துவேனியா, லக்ஸ்ஸம்போர்க், மொறீஸியஸ், மொன்ரிநீக்ரோ, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, செயின் கிட்ஸ் மற்றும் நெவிஸ், சியாரா லியோன், ஸ்லோவாக்கியா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, மஸிடோனியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகியன உட்பட 41 நாடுகள் இந்தப் பிரேரணையை முன்மொழிந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் புவியியல் பரம்பல் விகிதம் வருமாறு:- * ஆபிரிக்க நாடுகள் - 13 * ஆசிய - பசுபிக் நாடுகள் -13 * லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள் - 8 * மேற்கு ஐரோப்பிய நாடுகள் - 7 * கிழக்கு ஐரோப்பிய நாடுகள் - 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்