தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுடன், அமைச்சர் அதாஉல்லா ஆலோசனை

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின் போது இனிமேல் விருப்பு வாக்குகளுக்கு இடமில்லை. அதன் நிமித்தம் வட்டாரத் தேர்தல் முறை இனிவரும் உள்ளுராட்சித் தேர்களின் போது அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக நாட்டிலுள்ள 367 உள்ளுராட்சி சபைகளினதும் நிலப் பிரதேசங்கள் வட்டாரங்களாகப் பிரிக்கப்படுவதற்காக தேசிய மற்றும் மாவட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டது.
மாவட்டக்குழு தனது அறிக்கையை தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்ததை அடுத்து தற்போது வட்டாரங்கள் எல்லாம் அடையாளப்படுத்தப்பட்டு அப்பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இறுதி அறிக்கையை தயாரிப்பது சம்பந்தமான விடயங்களை உள்ளடக்கியதான ஆலோசனைக்கூட்டம் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களுக்கும் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்குமிடையில் அமைச்சில் நடைபெற்றது. இதன்போது தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தவிசாளர் ரவி திசாநாயக்க உள்ளிட்ட ஏனைய அங்கத்தினர்களும் கலந்து கொண்டனர்.
 

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்