கல்முனை ஸாஹிறாக் கல்லூரி வளாகத்திலுள்ள வடிகான் திறந்து வைப்பு
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உலக வங்கியின் 1.4 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை ஸாஹிறாக் கல்லூரி வடிகான் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
கல்முனை ஸாஹிறாக் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற
நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர்
ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தார்.
மழை காலங்களில் இப்பாடசாலை வளாகத்தில் வெள்ளம் தேங்கி நிற்பதனால்
மாணவர்களின் கல்வி நிலையில் பாதிப்புக்கள் ஏற்பட்டன. இதனை வீதி
அபிவிருத்தி
அமைச்சர் எம்.எஸ்.உதுமாவௌ;வவையின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்தே இவ்வடிகான நிர்மாணிக்கப்பட்டது.
இந்நிகழ்வில்; கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர்
எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப்
சம்சுதீன், எம்.எல்.அமீர், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ்
மீராசாஹி;ப் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து
கொண்டனர்.
இதே சமயம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனின்
மக்கள் பணிமனை காரியாலயமும் தேசிய காங்கிரஸின் தலைவரும், உள்ளுராட்சி மாகாண
சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவினால் திறந்து வைக்கப்பட்டது.
Comments
Post a Comment