Posts

News Alert

Image
கையடக்க தொலை பேசியில் News Alert  இலவசமாக பெற follow< >kalmunai_news  என   Type செய்து 40404  இலக்கத்துக்கு SMS அனுப்பவும் .(only Dialog , Mob ital, Etisalat )

ஒத்திவைக்கப்பட்டிருந்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்

Image
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 24ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிடப்பட்ட புதுக்குடியிருப்பு மற்றும் கரைந்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடத்துவதற்கான திகதி இரண்டு மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இறுதியாக பெப்ரவரி 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி தேர்தலை நடத்துவதென முடிவு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

விலாங்கு மீனாக நடிக்கும் ரவுப் ஹக்கீமின் உண்மை முகம் எது

Image
மாகாண சபைகளுக்கான காணி அதிகாரங்களை பறிக்கும் நாடு நகர திட்டமிடல் சட்டமூலத்திற்கு மேல் மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வெளியிட்டுள்ளது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே ரவூப் ஹக்கிமின் உண்மையான 'முகம்" என்ன என்பதை சமூகத்தக்கு வெளிப்படுத்த வேண்டும் என மேல் மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதேபோன்று இ.தொ.கா., ஈ.பி.டி.பி., உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகளின் இச்சட்டமூலம் தொடர்பான நிலைபாடு என்ன என்பதை தாம் சார்ந்த சமூகத்திற்கு பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். அரசாங்கத்தில் உள்ள அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிப்பணிந்தே இச்சட்டமூலம் கொண்டு வரப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.  

மின்சாரத்தடை

Image
அம்பாறை கிரிட் உப மின் நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் கல்முனை ஆகிய மின் பொறியியலாளர் பிரதேசங்களில் எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை, 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை மின்வெட்டு அமுலில் இருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

வெள்ளத்தில் நீராடும் அல்-மிஸ்பாஹ் முன்பள்ளி மாணவர்கள்

Image
கல்முனை அலியார் வீதியில் உள்ள அல்-மிஸ்பாஹ் முன்பள்ளி முன்பாக வீதியில் மழை காரணமாக வெள்ளம் நிரம்பியுள்ளது .இதனால் இப்பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் இப்பகுதியல் உள்ள பொது மக்களும் சிரமம் அடைகின்றனர். இதனை பார்வையிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ,எம்.பாரகதுல்லா மாநகர முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வந்ததன் பயனாக உடனடியாக இதனை திருத்தம்  செயுமாறு முதல்வர் அதிகாரிகளை பணித்துள்ளார். 

கல்முனை மாநகர சபையின் சுதந்திர தின நிகழ்வில் உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

Image
கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற 64ஆவது சுதந்திர தின நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கதுல்லாஹ் குற்றஞ்சாட்டினார். இச்செயற்பாட்டினை கல்முனை மாநகர சபை நிர்வாகமே மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கதுல்லாஹ் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "கடந்த பெப்ரவரி 04ஆம் திகதி கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற 64ஆவது சுதந்திர தின நிகழ்விற்கு பொதுமக்களினால் கல்முனை மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட மேயர், பிரதி மேயர் உள்ளிட்ட 19 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த செயலானது கல்முனை மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட 11 பிரதேசங்களில்  வாழும் முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவ மற்றும் சிங்கள மக்களை புறக்கணிக்கும் செயலாகவே கருதப்படுகின்றது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் சுதந்திர தின வைபவத்திற்கு அழைக்கப்படாததன் பின்னணி என்னவென்பது மறைமுகமாக...

1000 ஆண்களுடன் உறவுகொண்ட பெண்!

Image
தான் பாலியலுக்கு அடிமை என்கிறார். - பிரிட்டனைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவர் தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களுடன் பாலியல் உறவுகொண்டதாக கூறுகிறார். கிறிஸ்டல் வாரென் எனும் இப்பெண்  தான் பாலியலுக்கு அடிமையான ஒருத்தி என்கிறார். இவர் 15 வயதில் கன்னித்தன்மையை இழந்தாராம். 17 வயதையடைந்தபோது ஏற்கெனவே 40 பேருடன் உறவுகொண்டிருந்தாராம். "மக்கள் பொதுவாக பாலியலுக்கு அடிமையாதலை பெண்களுடன் தொடர்புபடுத்த மாட்டார்கள். பாலியல் உறவை தவிர்ப்பதற்கு காரணம் கூறுபவர்களாகத் தான் நாம் (பெண்கள்) இருப்போம். ஆனால் எனது நிலை வித்தியாசம். நான் நாள் முழுவதும் செக்ஸ் பற்றி எண்ணிக்கொண்டிருப்பேன்" என கிறிஸ்டல் வாரென் தெரிவித்துள்ளார். அவர் பாலியல் தொழிலாளியாக தொழில்புரிந்ததில்லை. தற்போது கடையொன்றில் முகாமையாளராக பணியாற்றுகிறார். வார இறுதி நாட்களில் பகலில் மதுபான விடுதிகளுக்கோ  தேனீர் விடுதிகளுக்கோ சென்று யாரேனும் ஆணை தேடிப்பிடித்து வீட்டிற்கு அழைத்துவருவதை வாடிக்கையாக கொண்டிருந்தாராம் அவர். ஒரு மோசமான நாளில் 24 மணித்தியால இடைவெளியில் 7 பேருடன் உறவுகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ...

அம்பாறை மாவட்டத்தில் 115.5 மி.மீற்றர் மழைவீழ்ச்சி

Image
விவசாயிகள் பலர் பாதிப்பு  அம்பாறை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிமுதல் இன்று காலை 8 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 115.5 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான மைய கடமை நேர அதிகாரி எம்.ஐ.ஏ.நயீம் தெரிவித்தார். இதேவேளை, இங்கு தொடந்தும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறே காணப்படுவதாகவும், கடல் கொந்தளிப்பாக காணப்படுமென்றும் அவர் தெரிவித்தார். இதனால் இடைக்கிடை பலத்த காற்று வீசக்கூடும் எனவும், கடலுக்கு செல்லும் மீனவர்கள் அவதானமாக இருக்கும் படியும் அவர் தெரிவித்தார்.

ஹொரோயினை வைத்திருந்தபெண்ணொருவருக்கு மரண தண்டனை

Image
40.8 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்தமை மற்றும் விநியோகித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக காணப்பட்ட பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பொரளையைச் சேர்ந்த பி.என். நில்மினி சமந்தி அல்லது நிலுகா என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு அவர்  40.8 கிராம் ஹொரோயினை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அவருக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பி.பத்மன் சூரசேன இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

சாய்ந்தமருது அல்-மத்ரசதுல் சபீலுர் ரஸாத் மத்ரசாவின் 3வது பட்டமளிப்பு விழா

Image
சாய்ந்தமருது அல்-மத்ரசதுல் சபீலுர் ரஸாத் மத்ரசாவின் 3வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சஹாப்தீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன் மத்ரஸாவின் அதிபர் அல்-ஹாபிஸ் எம்.எஸ்.எம்.ஸானாஸ் மத்ரஸாவின் ஆசிரியர்களான அல-ஹாபிஸ் அப்துல் ஹலீம்இ அல்-ஹாபிஸ் அப்துல் கரீம் ஆகியோருடன் முதல்வரின் ஆலோசகர் ஏ.பீர்முஹம்மட் உட்பட மத்ரஸா மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர். இம்மத்ரசாவில் சுமார் 120க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்று வருவதோடு 2012ம் ஆண்டில் கற்கை நெறியை பூர்த்தி செய்த 8 இளம் மாணவர்கள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஐ.ரி.என்.தொலைக்காட்சி ஊடகவியலாளர்கலாபூசணம் அல்-ஹாஜ் மீரா எஸ்.இஸ்ஸதீன்கௌரவிக்கப் பட்டார்

Image
யு.எம்.இஸ்ஹாக் ஐ.ரி.என்.தொலைக்காட்சி ஊடகவியலாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  கொழும்பில் கடந்த வாரம் நடை பெற்றது   இவ்வைபவத்தில் ஐ.ரி.என்.தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் மற்றும்  பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாஷிம் உமர் உட்பட அதிகாரிகள மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பித்தனர். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம் அல்-ஹாஜ் மீரா எஸ்.இஸ்ஸதீன் அங்கு விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார் 

கல்முனையில் நடைபெற்ற மீலாத் விழாக்கள்

Image

தேசிய சுதந்திர தின விழா கல்முனை

Image
கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகம் மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் 64 வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம் பெறுவதை காணலாம் 

ஆசனப் பட்டியணியாது வாகனம் செலுத்தின் அதே இடத்தில் அபராதம்

Image
சட்டத்திருத்தத்திற்கு பணிப்பு ஆசனப்பட்டி அணியாமல் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளிடமும், முன் ஆசனத்தில் பயணம் செய்பவர்களிடமும் உடனுக்குடன் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொலிஸ் மா அதிபருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். தற்போது ஆசனப்பட்டி அணியாது வாகனங்களைச் செலுத்துகின்ற சாரதி களுக்கும், முன் ஆசனத்தில் பயணம் செய் கின்றவர்களுக்கும் எதிராக அதே இடத்தில் அபராதம் விதிக்கப்படாது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பொறுப்பாளர்கள் சந்திப்பின் போது பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இச் சமயம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்கள் தொலைபேசி ஊடாகப் பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பாக கேட்டறிந்தார். இச் சமயம் பொலிஸ் மா அதிபர், “ஆசனப் பட்டி அணியாது பயணிக்கின்ற சாரதி களிடமும், முன் ஆசனத்தில் பயணம் செய்கின்றவர்களிடமும் அதே இடத்தில் அபராதம் வ...

2010 இல் க.பொ.த. சா/தர பரீட்சையில் 9 ஏ பெற்றதன் மூலம் உம்றா செல்லும் வாய்ப்பு

Image
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் அப்துல் றஹீம் றஷாத் அஹமட் எதிர்வரும் 2012.01.24 அன்று உம்றா கடமையை நிறைவேற்ற புனித மக்கமா நகர் செல்லவுள்ளார். இவர் சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலய அதிபர் எம்.ஏ.அப்துல் றஹீம், ஆசிரியை எம்.ஏ.றாஷிதா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வர் ஆவார். இவர் 2010ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 9 ஏ பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளார். இதனை கௌரவிக்கும் முகமாக 2011.12.11ல் கொழும்பு ஸாஹிறா கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில்  எம்.ஈ.பி.எஸ். அமைப்பினரால் நடாத்தப்பட்ட பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு சான்றிதழ்கள், பரிசில்கள், பாராட்டுக்களை பெற்றதோடு புனித உம்றா கடமையை நிறைவேற்றுவதற்கான ஏழு நாள் இலவச பிரயாண டிக்கட்டையும் பெற்றுக்கொண்டார். மேலும், இலங்கையில் இருந்து இவ்விலவச உம்றா பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பினை ஆறு மாணவர்கள் பெற்றதோடு எமது பிரதேசத்தில் இவருக்கு மட்டுமே இவ்வாய்ப்பு கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

நற்பிட்டிமுனை தார் இப்னு மஸ் ஊத் அஹதியா பாட சாலையின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா

Image
நற்பிட்டிமுனை தார் இப்னு மஸ் ஊத் அஹதியா பாட சாலையின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்று கிழமை (29 ) நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலயத்தில் கல்லூரி பணிப்பாளர் மௌளவில் ஏ.எல்.நாசீர் கனி தலைமையில் நடை பெற்றது. இந்த நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீரா சாஹிப்  பிரதம அதிதியாகவும் மாநகர சபை உறுப்பினர்களான நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த எம்.எல் .சாலிதீன் ,ஏ.எச்.எச்.எம்.நபார் ,அம்பாறை மாவட்ட அஹதியா பாட சாலை சம்மேளன தலைவர் எம்.ஐ.பைசால் மற்றும் ஞான தாரகை எம்.ஐ.இப்ராஹீம் வைத்தியர் உட்பட பலர் கலந்து கொண்டனர் . மாணவ ,மாணவிகளின் திறன்கள் இங்கு அரபு,தமிழ், ஆங்கில மொழிகளில் வெளிக்காட்டப் பட்டதுடன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாநகர முதல்வர் பொன்னாடை போத்தி கௌரவிக்கப் பட்டார்.

காரைதீவு சந்தியில் இருந்த பள்ளிவாசல் மீண்டும் நிர்மாணம்

Image
 ஹகீம் சம்பந்தன் பேச்சு  சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான காரைதீவு முச்சந்தி தைக்கா விவகாரத்திற்கு சுமூகமானதும் தீர்வு காண்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும்  தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பேச்சு வார்த்தையொன்றை செய்துள்ளது. 1831ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த இடத்தில் அமைந்திருந்த காரைதீவு முச்சந்தித் தக்கியா முப்பது ஆண்டுகளாக யுத்த சூழ்நிலையில் சேதமாகி, காணப்படுகிறது. இந்த விவகாரம் பற்றி காரைதீவு பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு வந்து, அப்பிரதேசத்திலும் அதற்கு அண்மையிலும் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் நல்லெண்ணத்தை பேணி சுமூகமான தீர்வை காண நடவடிக்கைகள் இருதரப்பிலும் எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது . இந்த சந்திப்பு பாராளுமன்ற பிரமுகர் அறையில் இடம்பெற்றுள்ளது அதில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி. ஹஸ அலி, எச்.எம்.எம்.ஹரீஸ், முத்தலீப் பாவா பாரூக், கல்முனை மாநகர சபை பிரதி மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேம சந...

மார்பகத்தை பெரிதுபடுத்தும் போலி சிலிக்கன் ஜெல் நிறுவனர் கைது

Image
மார்பகத்தை பெரிதுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் போலியான சிலிக்கன் ஜெல்லை உற்பத்தி செய்த பி.ஐ.பி. நிறுவனத்தின் தலைவர் ஜீன் கிளல்ட் மெஸ் என்பவர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார். சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் இந்த சிலிக்கன் ஜெல்லை பயன்படுத்தி 65 நாடுகளைச் சேர்ந்த 400,000 க்கும் மேற்பட்ட பெண்கள் தமது மார்பகங்களை பெரிது படுத்திக் கொண்டுள்ளனர். எனினும் இவ்வாறு மார்பகத்தை பெரிது படுத்திக் கொண்டவர்கள் அதனை அகற்றும்படி பிரான்ஸ் உட்பட பல நாடுகளும் தமது நாட்டு பிரஜைகளிடம் கோரியுள்ளனர். இந்நிலையிலேயே இந்த நிறுவனத்தின் உரிமையாளரான 72 வயது மெஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னர் இறைச்சி விற்பனையாளராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்சேய் நலன்புரி நிலையங்கள் கல்முனை நட்பிட்டிமுனையில் திறந்துவைப்பு

Image
கமநெகும வேலைத்திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்ட கல்முனை மற்றும் நற்பிட்டிமுனை தாய்சேய் நலன்புரி நிலையங்கள் திறப்பு விழா இன்று புதன்கிழமை நடைபெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்த இரு நிகழ்வுகளுக்கும் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்தி குழு தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொணடார். சுமார் 20 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இந்த வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில்  மாநகர சபை உறுப்பினர்களான நபார்,பரகத்,சமீர்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரிநூற்றாண்டு விழா

Image
மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கொண்டாடவிருக்கும் பாடசாலையின் நூற்றாண்டு விழா தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் அமர்வு நேற்று பாடசாலையின் மண்டபத்தில் இடம்பெற்றது. 'அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் அல்மனாரில் நூற்றாண்டு விழா' என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தைச்  சேர்ந்த ஊடகவியலாளர்கள், பாடசாலையின் உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இப்பாடசாலையின் அதிபர்  எஸ்.எம். எம்.எஸ். உமர்மௌலானா தலைமையில் இடம்பெற்ற இவ் அமர்வில் அல்மனார் மத்திய கல்லூரியினால் வெளியிடப்பட்ட 'அல்மனார் நியூஸ்' என்ற கை ஏட்டின் முதலாவது பிரதி அல்மனார் மத்திய கல்லூரியின் அதிபர் டாக்டர் எஸ்.எம். எம்.எஸ். உமர்மௌலானாவினால் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ்.ஸ்ஸடீனிடம் கையளிக்கப்பட்டது,

வடக்கு கிழக்கு காணி பதிவு உத்தரவு வாபஸ்!

Image
 -சட்ட மா அதிபர் திணைக்களம்- வடக்கு கிழக்கு காணிகளை பதிவு செய்யும் உத்தரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் தங்களை மீள் பதிவுசெய்து கொள்ள வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதிக்கு முன்னதாக இந்த பதிவுநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்யுமாறு தமி;ழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்றில்மனுவொன்றை தக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணைகளில் கலந்து கொண்ட சட்ட மா அதிபர்திணைக்களம்- குறித்த உத்தரவு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் என நீதிமன்றில்அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கு காணி உரிமையாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம்சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேன்முறையீட்டு மனு நீதவான் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் நீதவான் தீபாலிவிஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. க...