விலாங்கு மீனாக நடிக்கும் ரவுப் ஹக்கீமின் உண்மை முகம் எது

மாகாண சபைகளுக்கான காணி அதிகாரங்களை பறிக்கும் நாடு நகர திட்டமிடல் சட்டமூலத்திற்கு மேல் மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வெளியிட்டுள்ளது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே ரவூப் ஹக்கிமின் உண்மையான 'முகம்" என்ன என்பதை சமூகத்தக்கு வெளிப்படுத்த வேண்டும் என மேல் மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேபோன்று இ.தொ.கா., ஈ.பி.டி.பி., உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகளின் இச்சட்டமூலம் தொடர்பான நிலைபாடு என்ன என்பதை தாம் சார்ந்த சமூகத்திற்கு பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்.

அரசாங்கத்தில் உள்ள அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிப்பணிந்தே இச்சட்டமூலம் கொண்டு வரப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்