ஒத்திவைக்கப்பட்டிருந்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 24ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிடப்பட்ட புதுக்குடியிருப்பு மற்றும் கரைந்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடத்துவதற்கான திகதி இரண்டு மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இறுதியாக பெப்ரவரி 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி தேர்தலை நடத்துவதென முடிவு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு