வடக்கு கிழக்கு காணி பதிவு உத்தரவு வாபஸ்!
-சட்ட மா அதிபர் திணைக்களம்-
வடக்கு கிழக்கு காணிகளை பதிவு செய்யும் உத்தரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் தங்களை மீள் பதிவுசெய்து கொள்ள வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதிக்கு முன்னதாக இந்த பதிவுநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்யுமாறு தமி;ழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்றில்மனுவொன்றை தக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணைகளில் கலந்து கொண்ட சட்ட மா அதிபர்திணைக்களம்- குறித்த உத்தரவு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் என நீதிமன்றில்அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு காணி உரிமையாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம்சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேன்முறையீட்டு மனு நீதவான் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் நீதவான் தீபாலிவிஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு இந்த சுற்று நிருபத்தை வாபஸ்பெற்றுக் கொள்ள இணங்கியுள்ளது என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில்அறிவித்துள்ளது.
Comments
Post a Comment