மார்பகத்தை பெரிதுபடுத்தும் போலி சிலிக்கன் ஜெல் நிறுவனர் கைது



மார்பகத்தை பெரிதுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் போலியான சிலிக்கன் ஜெல்லை உற்பத்தி செய்த பி.ஐ.பி. நிறுவனத்தின் தலைவர் ஜீன் கிளல்ட் மெஸ் என்பவர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் இந்த சிலிக்கன் ஜெல்லை பயன்படுத்தி 65 நாடுகளைச் சேர்ந்த 400,000 க்கும் மேற்பட்ட பெண்கள் தமது மார்பகங்களை பெரிது படுத்திக் கொண்டுள்ளனர். எனினும் இவ்வாறு மார்பகத்தை பெரிது படுத்திக் கொண்டவர்கள் அதனை அகற்றும்படி பிரான்ஸ் உட்பட பல நாடுகளும் தமது நாட்டு பிரஜைகளிடம் கோரியுள்ளனர்.
இந்நிலையிலேயே இந்த நிறுவனத்தின் உரிமையாளரான 72 வயது மெஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னர் இறைச்சி விற்பனையாளராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்