காரைதீவு சந்தியில் இருந்த பள்ளிவாசல் மீண்டும் நிர்மாணம்
ஹகீம் சம்பந்தன் பேச்சு
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான காரைதீவு முச்சந்தி தைக்கா விவகாரத்திற்கு சுமூகமானதும் தீர்வு காண்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பேச்சு வார்த்தையொன்றை செய்துள்ளது.
1831ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த இடத்தில் அமைந்திருந்த காரைதீவு முச்சந்தித் தக்கியா முப்பது ஆண்டுகளாக யுத்த சூழ்நிலையில் சேதமாகி, காணப்படுகிறது. இந்த விவகாரம் பற்றி காரைதீவு பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு வந்து, அப்பிரதேசத்திலும் அதற்கு அண்மையிலும் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் நல்லெண்ணத்தை பேணி சுமூகமான தீர்வை காண நடவடிக்கைகள் இருதரப்பிலும் எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது .
இந்த சந்திப்பு பாராளுமன்ற பிரமுகர் அறையில் இடம்பெற்றுள்ளது அதில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி. ஹஸ அலி, எச்.எம்.எம்.ஹரீஸ், முத்தலீப் பாவா பாரூக், கல்முனை மாநகர சபை பிரதி மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேம சந்திரன், பொன். செல்வராஜா, செல்வம் அடைக்கல நாதன் ஆகியோரும் கலந்து கொண்துள்ளனர் .
Comments
Post a Comment