சாய்ந்தமருது அல்-மத்ரசதுல் சபீலுர் ரஸாத் மத்ரசாவின் 3வது பட்டமளிப்பு விழா
சாய்ந்தமருது அல்-மத்ரசதுல் சபீலுர் ரஸாத் மத்ரசாவின் 3வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சஹாப்தீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன் மத்ரஸாவின் அதிபர் அல்-ஹாபிஸ் எம்.எஸ்.எம்.ஸானாஸ் மத்ரஸாவின் ஆசிரியர்களான அல-ஹாபிஸ் அப்துல் ஹலீம்இ அல்-ஹாபிஸ் அப்துல் கரீம் ஆகியோருடன் முதல்வரின் ஆலோசகர் ஏ.பீர்முஹம்மட் உட்பட மத்ரஸா மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இம்மத்ரசாவில் சுமார் 120க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்று வருவதோடு 2012ம் ஆண்டில் கற்கை நெறியை பூர்த்தி செய்த 8 இளம் மாணவர்கள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Comments
Post a Comment